கரையான்களாய் அரிக்கும்!
மனசு .....!
பழுதுகலாக்கி விட்டு!
சங்கிலித் தொடர்களாய் -!
சந்தோஷம் கொண்டாடும் ..!!
ஆனாலும் -!
தூசுகளிடமிருந்தோ ....!
தூள்களிடமிருந்தோ ....!
எனக்கு -!
எந்த வியாதிகளும்!
தடவித் தரவில்லை அவை ...!!
பார்த்தாயா.....?!
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?!
கண்களில் பட்டதா ...?!
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?!
மழை தூவுகிறது -!
பொந்துகளில் ...!!
அறிவு படைத்த மனிதன்!
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!!
சாதி மத பேதங்களில் .....!
மானிடர் வாழ்வு!
போராடுகிறது ...!!
சொத்து சுகங்களில்!
உயிர் -!
பலியாகிறது ...!!
உறவுகளின் போராட்டத்தில்!
மனிதம் -!
அழிகின்றது ...!!
பகைவர்களின் எதிர்ப்புக்களில்!
உரிமை -!
இழக்கப்படுகிறது .....!!
தோழியின் மனம் ,!
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!!
இதயத்தின் ஏக்கங்களோடு,!
மனிதர்களின் செயல்களோடு -!
காலத்தின் தரிப்பிலே ......!!
மனிதர்களின் பகையிலே .....!
துயரத்தின் உணர்வுகள் ....!
உணர்வுகளின் தாக்கங்கள் ....!
இடிபோல!
முழங்கியெழும்....!!
பட்டாசு போல!
சிதறிப் போகும் ....!!
கலைமகள் ஹிதாயா றிஸ்வி