தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அன்பாதவன் கவிதைகள்

அன்பாதவன்
இருள்வெளி !
-------------- !
அதல பாதாளத்தின் அடி ஆழத்தில் !
கண்ணுக்குத் தெரியா மையிருட்டில் !
ஒளிர்கிறது உன் விழிகள் !
வெளிச்சத்தில் மிதக்கிற !
என் கைகள் எட்டுமா !
அனுப்பியக் கயிற்றின் போதாமையில் !
பெருகும் இடைவெளி !
கலக்கிறேன் உன்னோடு !
இருவரும் சமமாக இருள்வெளியில். !
----------------------------------- !
பறவை !
-------- !
வீசும் காற்றின் எதிர்திசையில் !
விரிந்த சிறகுகளசைத்தொரு !
பறவை !
தொடர்ந்து பயணம் எதிர்ப்புகளூடே !
அயர்ச்சியும் தளர்ச்சியும் !
மேலமர்ந்து கனமாக்கும் சிறகுகளை !
தொடர் சுமைகள் சலிப்பூட்டும் !
'வானம் வசப்படும்' !
உள்நுழைந்து வெளி கலக்கும் !
மூச்சுக் காற்று சொல்ல !
காற்றின் எதிர்திசையிலொரு பறவை. !
-------------------------------------!
நீர்த்திடல் !
------------ !
கடலா.. நீ நதியா !
கால் நனைத்து !
அலையில் நிற்பதா !
தலை நனைத்து !
மூழ்கி குளிப்பதா !
இடைவெளிகளின் மவுனம் !
இம்சையானது !
சொல் !
கடலா நீ நதியா !
நதியென்றால் பரிசலாக !
கடலென்றால் பாய்மரமாக !
இயலுமெதுவும் என்னால் !
பூடகமான நீர்த்திடலே !
எதுவாயினும் !
முகத்துவாரத்தை கண்டுபிடி !
முக்கியமாய். !
------------------------------------ !
!
வண்ணங்கள் !
--------------- !
வண்ணங்களுக்காக காத்திருந்து !
நிறமிழந்து போயின !
கடந்து போன காலங்கள் !
வண்ணங்களின் பின்னால் ஓடுகிறது !
நிறமற்ற வெளி நோக்கி !
எதிர்கால நம்பிக்கையோடு வாழ்க்கை !
சுற்றி ஒளிரும் வண்ணங்கள் !
தன்னைத் தேடி வருமெனக் !
காத்திருக்கின்றன !
நிகழ்காலப் பொழுதுகள் !
அன்பாதவன்

நிறமில்லாத மனிதர்கள்

முனியாண்டி ராஜ்
சிவப்பாய்..கருப்பாய்!
பளுப்பாய்..!
இன்னும் கலந்தும் கலக்காத!
நிறங்களில்.!
மனிதர்கள்..!
ஆடைகளுக்குள் ஒளிந்து கொண்டு!
நிறங்களை மறைக்க...!
மனிதனை மனிதனாக்க!
சமயங்கள் எல்லாம்!
தோற்று...!
மதங்கள்..மனங்களில் வேரூன்ற!
மனங்களில்!
மதம் பிடித்த யானைகள்!
தலைகளை கரும்புகளாய்!!
மனிதன் தோற்க!
சமாதானப் பேச்சுகள்...!
இரத்தக் கம்பளங்களில்!
இனம் அழியட்டும்..!
பிறகு பேசுவோம்..!
இல்லாத ஒன்றுக்காக....!
இடது கையில் ஆயுதங்களையும்!
வலது கையில் வெள்ளைப் புறாக்களையும்!
ஏந்தி.......ஏந்தி......ஏந்தி!
சமாதானம்!
சந்தி சிரிக்க.......!
மனங்கள் மண் தரையில்!
புரண்டோட...!
நிச்சயம் சமாதானம் பேசுவோம்...!
மானுடமே இல்லாத!
காடுகள் ஓரங்களில்!!!!
-முனியாண்டி ராஜ்,!
கிள்ளான், மலேசியா

அவனும் நானும்

சபிதா பிரகாஷ்
முதல் நாள் எடைக்கு !
போட்ட !
பழையப் பேப்பருடன், !
தொலைந்திருக்கும் உன் !
அலுவலக !
கோப்போன்றும்.!
!
உனக்கு பிடித்த தொலைக்காட்சி!
நிகழ்ச்சியை !
இடையூறு செய்து ரசிப்பேன், !
கண்ணீர் சீரியல்களை.!
உனக்கு பிடித்த உடை ஒன்றை, !
இனி நீ அணியவே இயலாது !
பாழாக்கியிருக்கிறேன் நான். !
தவறுகள் செய்து தப்பிக்க தெரிகிறது எனக்கு, !
விழி தாழ்த்தி மௌன மொழியால் !
மன்னிக்க தெரிகிறது உனக்கு, !
ஓர் புன்னகையால். !
தாயுமானவனாய், !
தகப்பன்சாமியாய், !
யாதுமாகி விடுகிறாய் அப்போதெல்லாம்

தூரதேசத்திருந்து

கவிதா. நோர்வே
தூரதேசத்திருந்து!
ஈழத்தமிழர்கள் பேசுகிறோம்!
உங்களுக்காகவே!
நாங்கள் உரத்தெழுகின்றோம்!
கைவிடமாட்டோம்!!
எங்கள் மனங்களில்!
தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று!
பயந்துவிடாதீர்கள்!
எங்கள் மண்ணைவிட்டு!
நகர்ந்து விடாதீர்கள்!
சீறிவரும் குண்டுகள்!
நிறுத்தக்கோரி!
எங்கள் பிஞ்சுகள்!
போராளிகளாய்!
இங்கேயும் வளர்ந்துவிட்டார்கள்!
நாட்டில் எம் போராளிகள் யார்?!
மக்கள் தானே!
மக்களே நீங்களும்!
போராளிகள் தானே!
மனம் தளராது!
எதிர்த்து நில்லுங்கள்!
தோட்டாக்களை.!
உங்களுக்காக!
நாங்கள் இருக்கிறோம்!
அங்கே எம் போராளிகள்!
உங்களோடு இருப்பது!
உங்களைக் காப்பதற்கே!
அவர்கள் சொல்வதைக்!
கவனத்துடன் கேளுங்கள்!
இராணுவம் உங்களைப்!
பிணக்குவியல் செய்யும்!
பயந்துவிடாதீர்கள்!
எஞ்சியவர்களே எப்படியேனும்!
நிழல்படங்கள் அனுப்பிவையங்கள்!
உலக நாடுகளுக்கு எடுத்துரைப்போம்!
பிரச்சாரத்துக்குரிய காலமிது!
உங்களால் அங்கு!
பேசமுடியாதென்பதை!
நாங்கள் நன்கறிவோம்!
அதனால் உங்களுக்கும்!
சேர்த்து நாங்களே பேசுகிறோம்!
வாக்களிப்பும் நாமே செய்வோம்!
எம் போராளிகளின்!
பயங்கரவாத முத்திரையை!
அப்புறப்படுத்துவோம்!
அதுவரை!
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்!
குண்டுகளுக்காய் பயந்துவிடாதீர்கள்!
நகர்ந்து விடாதீர்கள்!
இராணுவப் பேய்களிடமும்!
ஒப்படைத்துவிடாதீர்கள் உங்களை!
பெண்களை நிர்வானமாய்!
பிரித்துன்னும் பிடாரிகள்!
அவர்கள்!
உருப்புகள் கொய்த்து!
உயிர்பெற்று வாழ்பவர்கள்!
தெரியாத பேய்களிடம் போய்!
ஏன் மாட்டிக் கொள்வான்!
இடவசதியோ!
அடிப்படை வசதியோ!
இல்லையங்கு!
பாதுகாப்புவலையத்தில் இருந்து!
பறந்து போனவர்களே!
எந்த உதவியும் உங்களுக்கு இனி!
நாங்கள் செய்தால்!
அரசாங்கதை எப்படி குற்றவாளியாக்குவது!
தமிழ்ஈழத்தை எப்படி வென்றெடுப்பது!
அதனால்!
கொஞ்சம் பொறுத்திருங்கள்!
உங்கள் மனங்களை!
நாங்கள் அறிவோம்!
கடும் குளிரிலும்!
மழையிரவிலும்!
நாங்கள் போராடுவது!
உங்களுக்காகவே!
எங்கள் மனங்களில் இங்கே!
என்றோ மலர்ந்துவிட்டது!
தமிழ்ஈழம்!!
இத்தனைநாள் தவம்!
கலைத்துவிடாதீர்கள்.!
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்!
விருட்சம் பிடுங்கி!
உங்கள் வீட்டு!
முற்றதில் நாட்டுவோம்!
நாங்கள்

கண்கள்

வி. பிச்சுமணி
சுடிதார் மேல்புறம்!
காற்றில் பட படக்க!
இமை சிறகு!
அக்கம் பக்கம் அடித்து!
திறப்பில் பறக்கும் கண்கள்!
கோளங்கள் தரை!
குனிந்து கோலமிட!
கதப்புகளில்!
குத்து ஈட்டியாய்!
நிலை குத்தும் கண்கள்!
மேக சேலை மறைப்பில்!
அமிழ்தூட்டும் சிகரங்களை!
சன்னமாக கன்னமிட்டு!
மின்னலாய் நோட்டமிடும் கண்கள்!
காணாமல் போன!
களவானி பயல்களை!
தேடி தேடி கண்டு!
அலையும் !
காவல்காரனாய் கண்கள்!
இறந்த சடலத்திலும்!
கலைந்த ஆடையில்!
திறந்த கலசங்கள்!
மொய்க்கும் ஈக்களாய் !
விவஸ்தை கெட்ட கண்கள்!
விவஸ்தை கெட்டவை!
கண்களா!
சாத்தானா!
மறுக்கப்பட்ட கனியா!
உண்ட ஏவாளா!
ஆடை கண்ட ஆறாம்அறிவா!
கண்கள்!
வெறும் கருவிகள் தானே!
!
-வி பிற்ச்சுமணி

ராணி தொலைந்து.. ஒரு போதும்

நேசமித்ரன்
01.!
ராணி தொலைந்து!
----------------------!
ராணி தொலைந்து!
மலர் வைத்தாடும் சதுரங்கத்தில்!
உறைந்த பிறையின் நிழல்!
ஓதமென!
பாதி எரிகையில் பெய்த மழைக்கு!
பிரேதம் எரிப்பவள் வைத்த பெயர்!
புணர்கையில் புறம் முட்டிய பன்றி!
நான்!
கருணை!
மட்கிக் கரையாத ஆணுறைகள் அடைத்த!
கழிவுத்தொட்டியில் இறங்க மானிட்டருக்கு பிரதியாய்!
நச்சினிக்க கஞ்சா!
அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்!
பிதுக்கி எடுத்த தோட்டா!
நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது யுத்தத்தை !
02.!
ஒரு போதும்!
---------------!
தன் கடைசித் துளியை உணரத் தராத!
மழையைப்போல்!
நிறைவுறாதவையாய்!
இருக்கின்றன நம் உரையாடல்கள்!
மீன் தொட்டியின் தவளை பொம்மையை!
ஒத்திருக்கிறது சுவாசம்!
நீயனுப்பும் பரிசுப் பொருட்களிலெல்லாம்!
முளைக்கத் துவங்குகிறது ஒரு வன்மிருகத்தின் நகம்!
இந்த நீண்ட தனிமையின் வெம்மை பொங்கும்!
இரவுகளில்!
தளர்ந்து கொண்டிருக்கின்றன உள்ளாடைகளும்!
காத்திருப்பின் மீதான நம்பிக்கைகளும்!
இருப்பும் இன்மையும்!
அவதானிக்கக் கூடுவதாய்!
இல்லை கடவுளைப் போல

பிச்சைக்காரர்கள்

சென்னை - நவின், இர்வைன்
அமைதிக்காக!
ஆலயத்தினுள் !
அறிவுஜீவிகள்!!
வயிற்றுக்காக!
வாசலில் !
உயிர் உண்டியல்கள்…!!
சென்னை

யாருக்குத் தெரியும்?..கருப்பு வெறும்

ந.ஜெகதீஸ்வரன், காட்டுப்புத்தூர்
யாருக்குத் தெரியும்?.. கருப்பு வெறும் நிறமல்ல!!
01.!
யாருக்குத் தெரியும்?!
----------------------!
கற்பிணி பெண்ணோ!
கைக்குழந்தை வைத்திருப்பவளோ!
பேருந்தில் ஏறினால்!
பெண்கள் பகுதிக்கு செல்வதில்லை!!
அருகில் வந்து நின்றாலே!
ஆண் எழுந்து அமர்விடம் தரும்போது!
அடுத்ததற்கு அவசியமில்லை!!
ஆண்கள் இரக்கம் நிறைந்தவர்களென!
பெண்களுக்கு தெரிந்திருக்கலாம்!
இல்லாமல்போனானால்!
எளிதில் ஏமாந்துவிடுபவர்களென!
இளக்காரமாக நினைத்திருக்கலாம்!
நன்றிகூட கூறாமல்!
நன்றாக அமர்பவர்களைத்தவிற!
வேறுயாருக்குத் தெரியும் இந்த சூட்சமம்?!
!
02.!
கருப்பு வெறும் நிறமல்ல!!
------------------------------!
வெண்தோல் வேண்டி!
வேண்டாத களிம்பு தடவி!!
வெளியில் செல்லாமல்!
வெயிலில் துள்ளாமல்!!
அறைக்குள் முடங்கி!
ஆடைக்குள் உறக்கியது போதும்!!
உண்மையை உணர்க…!
ஊருக்கு உழைத்தோம்- அதனால்!
உடலெல்லாலம் கருத்தோம்!!
கருப்பு வெறும் நிறமல்ல!
கடவுள் கொடுத்த வரம்

விற்பனைக்காலம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
இருப்பைப்பற்றி !
எந்த உணர்வுமின்றி!
விற்பனைக்குவந்துவிட்டேன்!
விற்பனை!
விறுவிறுப்பாகத்தான் நடக்கிறது!
இல்லையெனும் பதிலின்றி!
இயல்பாய் நடக்கிறது!
கொடுக்கல் வாங்கல்!
இருப்புக்கணக்கு!
சரிபார்த்தலின்றிதான்!
கடைத்திறப்பு நடக்கிறது!
இருப்பென!
இருப்பதைத்தானே!
கடைத்திறப்பில் காட்டமுடியும்!
இருப்பும் குறையவில்லை!
கொடுப்பதும் குறையவில்லை!
இது!
விசித்திர விற்பனைக்காலம்!
இருப்பு குறையுமா?!
விற்பனை குறையுமா?!
துளியும் கவலையின்றி!
துளிர்க்கிறது தளிர்கள்!
நீள்கிறது பாதை!
தேடுகிறது வேர்கள்!
தொடுவானம்போல!
எல்லாம்

துரோகத்தின் தருணம்

ஹெச்.ஜி.ரசூல்
என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்!
வாசல் கதவுகளை!
வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு!
ஒரு துரோகத்தின் அரங்கேற்றம்.!
சட்டைப் பாவாடை அணிந்திருந்த!
விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய!
அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன.!
கிணற்றில் விழுந்த பொறி பரவி!
நீரிலும் நெருப்பு வளர்ந்தது.!
ஒவ்வொரு இரவுதோறும்!
என் முத்தத்தாலும் கனவுகளாலும்!
நிரப்பப்பட்டிருந்த தலையணை!
பதறியடித்துக் கொண்டு!
தப்பித்து ஓட முயன்று சோர்கிறது.!
எனது புத்தக அலமாரியில்!
மிகவும் பாதுகாப்போடு உட்கார்ந்திருந்த!
மார்க்ஸும் செல்வாவும்!
எரிந்து கொண்டிருந்தார்கள்!
சாம்பலின் புதை மேட்டு அனலில்!
உதிர்பிச்சிகளின் மரணவாசம்!
இடைவிடாது துரத்த!
விடாது நெருப்பு பரவுகிறது எங்கும்.!
என்னுடலின் நெருப்பைக் கழற்றிஎறிய!
பலதடவை முயன்றும் தோற்றுப் போகிறேன்