தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கனவும் நனவும்

செண்பக ஜெகதீசன்
வானம் பொத்துக்கிட்டு !
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில !
மூழ்குது.. !
வயலும் குளமாத் !
தெரியுது.. !
தெருவுல தண்ணியும் !
ஓடுது.. !
தேரிக் காட்டிலும் !
தேங்குது- !
தெரிந்தது இப்படி !
கனவிலே, !
வறண்டு கிடக்குது !
வெளியிலே, !
வாங்க வேண்டும் !
தண்ணீரே…!!

இனிக்கும் நினைவுகள்

ஜே.ஜுனைட், இலங்கை
இனிப்பின் சுவை!
இதுதான்… சின்ன வயதில்…!
எங்கள் நினைவில்…!
சவர்க்கார முட்டையூதி!
சுவரில் வைத்து உடைத்தோம்…!
பட்டம் செய்து பறக்க விட்டோம் - அதில்!
நாமும் கற்பனையில் பறந்தோம்…!
நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம்!
மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம்!
வாழை நாரில் பூக்கள் தொடுத்து!
வீணை செய்து கீதம் இசைத்து!
கூட்டாய் விளையாடினோம்..!
முற்றத்து மணலில் வீடு கட்டி!
உள்ளே சென்றோம் உடைந்ததுவே!
வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு!
நாமும் சென்றோம் கற்பனையிலே…!
என்ன சொல்ல, என்ன சொல்ல!
எல்லாம் இன்று ஞாபகமே!
இனிப்பின் சுவையும், இன்ப நினைவும்!
இதுதான் வேறு இல்லையே.!!
களிமண் உருட்டி!
சட்டி, பானை செய்தோம்!
வேப்ப மர நிழலிலே!
அடுப்பு மூட்டி விளையாடினோம்!
இன்னும் சொல்ல, இன்னும் சொல்ல!
நேரம் இங்கு போதவில்லை!
அன்று கொண்ட ஆனந்தமே!
உண்மை, உண்மை வேறு இல்லை

குரங்கு மனம்

ரகுவரன்
விட்டுச் சென்ற காலம்
வீணாகிப் போனது!
விடியாத பொழுதெல்லாம்
பிழையென்று வசை தீர்த்தன!

இரவுப்படுக்கையிலே
நித்திரையை தேடினேன்......
மீண்டுமொரு விடியலிலே
மாண்டன உறக்கமெல்லாம்!

நொந்து போன மனம்
சிந்தித்து சொன்னது
இனியொரு விதி செய்வேன்!

அலைந்த மனம் குழைந்து நிற்க
பூட்டிய கண்களில்
தொலைந்தன காட்சிகள்!

இன்னொரு பகல்!
இன்னொரு குளியல்!
இன்றொரு வேலையென்று
சென்றன பொழுதுகள்....

அஸ்தமனத்தில் உதித்த
வீரச்சிந்தனைகள்
அடுத்த நாள் உதயத்தில்
அஸ்தமித்து போயின....
பழையபடி வேதாளம்,
முருங்கை மரம்......?

நன்றி கூறுவேன்

ஜே.ஜுனைட், இலங்கை
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் !
எதுவும் இல்லாமல் போனது… !
இன்னொன்றை !
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் !
மரமாக வந்து கதை பேசியது…!
இலைகளையும் பூக்களையும் !
உனக்குள் !
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. !
மண்ணைப் போட்டு மூடினாலும் !
உன்னை !
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…!
மறுபடியும் வித்தொன்றை !
சிதைத்தொருக்கால் பார்த்தேன்… !
மாய வரம் ஏதேனும் !
அங்குள்ளதுவா தேடினேன் -!
“வித்திலைகள்” மட்டும் தான் !
எனைப் பார்த்து முறைத்தன…., !
மற்றதெல்லாம் எனை விட்டு !
என் கண்ணை மறைத்தன… !
பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., !
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!!
விருட்சம் அதன் தலைவிதியை !
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் -!
ஒன்றும் புரியவில்லை…,!
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் -!
கன்றாய் எழுந்தது !
மரமாய் விரிந்தது !
பூக்கள் சிரித்தன !
பூச்சிகள் வளைத்தன !
கனிகள் விளைந்தன.. !
என் கண்கள் வியந்தன..!
வித்திற்கு நன்றி சொல்ல !
தேடிப் பார்த்தேன் - !
காணவில்லை… !
விந்தை தான்..!, !
இறைவனுக்கே நன்றி சொல்வேன்

வார்த்தைக்குள் அகப்படவில்லை

ஜே.ஜுனைட், இலங்கை
பூக்களுக்குள் !
வாசம் எங்கே !
தேடினேன் - !
காம்பு மட்டுமே !
மீதமாகியது கைகளில்..!!
வெற்றிகளின் !
ஓரம் வரை சென்றேன், !
பெரும் கிண்ணக்குழிகளாய் !
நின்றன…!
மழை நாட்களில் !
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,!
வாழ்வின் நிலையாமை !
புகட்டின…!
சாலைகள் தோறும் !
கற்களைப் பார்த்தேன், !
மனித இதயங்களின் !
மறு வடிவம் யாம் என்றன..!
கண்ணாடி தேசத்திற்குள் !
நுழைந்தேன், !
என் நிழலைத் தவிர !
மற்றெல்லா நிழல்களும் !
ஒளிந்து கொண்டன…. !
உண்மை கொண்டு !
உலகைநோக்கினேன், !
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் !
பூஜ்ஜியமாகின..!
பார்வை தாண்டி !
நோக்கும் போது !
பௌதிகஅதீதம் காட்சிதந்தது.., !
வார்த்தைக்குள் அகப்படவில்லை !
அது..!!!

வாசிப்பு

கவிரோஜா
பார்வையால் என்னை தேர்ந்தெடுத்து..
விழிகளால் ரசித்து..
விரல்களால் என் பக்கங்கள் புரட்டி..
உன் மனதில் என்னை பதியவைப்பாய் என்று..
வரிசையாய் கால்கடுக்க காத்திருக்கிறேன்..உன் வாசிப்புக்காக..
இப்படிக்கு புத்தகம்.

செய்தித்தாள்

கவிரோஜா
ஒவ்வொரு நாளும்
தேடுகிறேன்
வாங்குகிறேன்
வாசிக்கிறேன்..
விரும்புகிறேன்..
விமர்சிக்கிறேன்..
கைவிடுகிறேன்..
மறுபடியும் மேலிருந்து

அம்மா

மு.சோமிலன்
அன்னையவளுக்கு என் கிறுக்கலில் ஒன்று......

அன்பெனும் பிறப்பிற்கு
வற்றாத ஊற்றிவள் - பண்பில்
அகிலத்தையே வசீகரிக்கும் தேவதையிவள்

வர்ணிக்க முடியாப்பேரன்பு கொண்டு
காதலிப்பவள் - ஆனாலும்
வர்ணிக்க முயன்றே கணமும்
தோற்றுப்போகிறோம் - முடிவிலியால்

வரையறை அற்றது அவள் அன்பு
சிறு குறையற்றது அவள் காதல்
குறும்புகள் சண்டைகள் கோபங்கள்
அனைத்தையும் கட்டிப்போடுகிறது
அவளது ஒற்றை முத்தம்

சமயங்களில் எனை
குழந்தையாய் மாற்றுகின்றாள்
தருணங்களில் அவள்
குழந்தையாகவே மாறுகின்றாள்

வற்றாத ஊற்று அவள் கருணை
"அம்மா"
அவள் முடிவிலியாய்ப்பொழியும்
அன்பு மழை

காலநதி

ப.மதியழகன்
நிறைவேறாத ஆசைகள்!
குவியலாக!
மனதில் நிரம்பிக் கிடந்தன!
சவக்கிடங்கில்!
உறங்கும் பிணமாக!
என் வாழ்நாள் கழிந்தது!
ஆயிரங்கால் மண்டபத்தில்!
ஏறி விளையாடும்!
அணிலாக நினைத்து!
உலகம் என்னை கேலி செய்தது!
முகவரியைத் தொலைத்து!
நடுநிசியில் நடமாடிய என்னை!
நாய்கள் துரத்தின!
சித்ரவதைக் கூடமான!
இவ்வுலகிலிருந்து!
தப்பித்து ஓடநினைத்த நான்!
தவறி விழுந்தேன்!
நிரபராதியை!
தூக்கு மேடையேற்றும்!
நயவஞ்சக சமூகத்திடம்!
சிக்கி சீரழிந்தேன்!
மாம்சத்தை விடுத்து!
உதிரத்தை உறிஞ்சும்!
சாத்தான் குஞ்சுகள்!
சட்டம் இயற்றுகின்றன!
இப்பூவுலகில். !

திரும்ப முடியாத திசை !

கருணாகரன்
ஒரு நூலில் ஆடுகிறது!
நாடகம்!
கலக்கத்தின் முனை!
இன்னும் கூர்மையடைகிறது!
இரத்தத்தை ஊற்றிவிட்டு!
பாத்திரத்தைக்கழுவுகிறான் கடைக்காரன்!
இலையான்கள் தூங்கப்போய்விட்டன!
நான் முழித்திருக்கிறேன்!
நினைவில் வருகிறாள் லோத்தின் மனைவி!
அழமுடியாமலிருக்கும் அக்மதோவா!
யாரிடமும் பேசவில்லை!
ரஞ்சகுமாரின் கோசலை!
இன்னும் விம்மலை நிறுத்தவில்லை.!
திரும்ப முடியாத திசையில்!
சென்றுவிட்டது படகு!
மலையுச்சிக்கு வா!
கல்லிலும் மரம் நிற்கும் அதிசயத்தை!
சொல்லும் உன் கண்கள்!
கடலின் ஆழத்தில்!
தேங்கி நிற்கிறது இரத்தத்துளிகளும் கண்ணீரும்!
கரைய முடியாததுயரமும்!
அவர்கள் திட்டிய!
வசையும்!
சாம்பல் மேட்டில்!
காத்திருக்கிறான்!
புலவன்!
இரவு!
அவனிடம் விடை பெற மறுக்கிறது!
காலையைச்சந்திக்க அதனிடம்!
எந்த வலிமையும் இல்லை!
இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது!
பிணத்தின் வாடை!
எங்கே அந்தக்காகங்கள்!
கடற்கரையில்!
பாடமறுத்த தேவனை!
அவர்கள் சிலுவையிலறைந்தபோது!
எழுந்த குரல்!
அந்த மண்ணில் சுவறிவிட்டதாக!
அவனுடைய குழந்தைகள் சொல்கிறார்கள்.!
திடுமுட்டாக வந்த விருந்தாளியை!
அழைத்துப்போய்!
மாப்பிளையாக்கினாள் காதலி!
பள்ளிக்குப் போக மறுத்த பிள்ளைகளை!
கூட்டிச் செல்கிறான்!
ஊராடி