தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வாழ்தலை மறந்த கதை!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அவளிடம் சொன்னேன்!
அடுப்படி தாண்டு!
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக!
விஷயங்கள் இருக்கின்றன!
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்!
வித்தை சொல்லித் தருகிறேன் !
அவள் வந்தாள்.!
சுமக்க முடியாத சங்கிலிகளையும்!
முடிவற்ற சந்தேகங்களையும்!
சுமந்து கொண்டு !
மிகுந்த பிரயாசையோடு!
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்!
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்!
நீண்டு நெடித்தலைந்தன. !
இனி என்ன!
களைப்போடு கேட்டாள்.!
இனி நீ வாழத் துவங்கு !
வாழ்தல் என்றால்!
அயர்வோடு நோக்கினேன்.!
அவள்!
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன

கவிஞனின் மனைவி !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அபூர்வமான சொற்களைப் பின்னும்!
பொன்னிற சிலந்தி அவன் !
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்!
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். !
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்!
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்!
பார்த்தவாறே உறங்கிப்போவாள். !
அவன் எழுதும் எதையும்!
அவள் வாசித்ததில்லை!
அவனது விசாரங்களும் தனித்துவமான!
சிந்தனைகளும்!
அவளுக்குப் புரிந்ததேயில்லை.!
அதிகம் பேசுவது அவனை!
ஆத்திரமூட்டும்.!
அவள் மொழி மறந்தவள் ஆயினள். !
கிராமத்துக்கிளி மொழிகள்!
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்!
அடங்கியிருந்தாள். !
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து !
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்!
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது. !
புழுங்கிய சமையலறையில்!
நெடுங்காலமாய் திறவாதிருந்த!
‘ஜன்னல்’ தான் அது !
அதனூடே அவள்!
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்!
வானவில் எழுதும் ஓவியங்களையும்!
வாசிக்கத் தொடங்கினாள். !

வலி!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி!
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்!
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.!
ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க!
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.!
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் !
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்!
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.!
வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது!
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்!
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து!
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்!
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு

வாழ்க்கை பயங்கள்

பாலசுப்ரமணியன்
வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!

அன்பைக் கண்டு
பயந்தேன்!!
அது என்
இதயத்தில் இருள்
போன்ற கருமையை
நீக்கி,
நிகரில்லா
வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு
பயந்தேன்!!
அது
அறியாமை என்று
அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு
பயந்தேன்!!
எனக்குள்
சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு
பயந்தேன்!
நான் தனியாக
இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு
பயந்தேன்!!
தோல்வியே
வெற்றிக்கு அறிகுறி என்று
உணரும் வரை!!


வெற்றிகளை கண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின் சந்தோஷம்
என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப் பற்றிய கருத்துக்கள்
இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்கு தேவை
என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
முகங்களை பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!

நடந்ததை நினைத்து
பயந்தேன்!! அது இனி
நடக்காது என்று
நம்பும் வரை!!


நடக்கப் போவதை
நினைத்து பயந்தேன்!!
நடந்தது எல்லாம்
நன்றாகவே நடந்தது,
நடக்கப் போவதெல்லாம்
நன்றாகவே நடக்கும்
என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு
பயந்தேன்!! அது முடிவல்ல
புதிய ஆரம்பத்தின் தொடக்கமே
என்று உணரும் வரை!!!

எது?

அனாமிகா பிரித்திமா
முக்குக்கண்ணாடி ...!
வெளியே தெறிக்கும்...!
அந்த காந்த கண்களா?...!
அதன் மேலிருக்கும் ...!
வளர்ந்தும்-வளராத...!
அந்த புருவமா?!
கோபம் பளிசிடும் நாசியா?!
அதன் கிழ் இருக்கும்...!
கற்றை மீசையா?!
கவிதையை நேர்த்தியாய்...!
படிக்கும் உதடுகளா?!
அதன் உள் இருக்கும்...!
சற்றே உடைந்த முன் பல்லா?!
கவர்ந்திழுக்கும்...!
அந்த அழகிய காதா?!
சங்கிலி அலங்கரிக்கும்...!
சங்கு கழுத்தா?!
சற்றே வளைந்திறுக்கும்...!
அந்த ஒற்றை விரல் நகமா?!
பரந்து விரிந்த அந்த மார்பா?!
முதுகில் இருக்கும்...!
அந்த முடிமுளைத்த மச்சமா?!
கேந்தி...!
நடக்கும் அந்த காலா?!
எது ஈர்த்து என்னை தங்களின் !
நிரந்தர கைதி ஆக்கிவிட்டது?!
...........எது?

உயிரிசை

வினோத்குமார் கோபால்
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!
கருத்த அறை அதனில்!
தாயவள் உடல் உரிஞ்சி!
செங்காந்தற் மலர் மேலே!
செந்தேன் தடவியது போல்!
தன் உடல் தரித்து!
தானறிந்த அழுகை யெனும்!
நாதம் முழுங்கி உலகிற்கு!
தன் வருகையை யறிவிக்கும்!
இசை நிகழ்வை யுணர்ந்து!
மனமகிழும் தாய் அவளின்!
உணர்வுகளை உணர்ந்த துண்டோ!
ஒரு வாய் கொண்டு!
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்!
ஈரைந்து மாத உறவுக்கு!
ஈடு இணை இவ்வுலகில்!
எவறேனும் கண்ட துண்டோ!

அனாதை

வினோத்குமார் கோபால்
இருவகை குழந்தையாம்!
மலர்ந்த வாடை!
சிறிதும் இழக்காது!
பிறவி கண்டிருக்கும்!
சிறு துளிரையும்!
உயிர் துறக்கக்!
காத்து கிடக்கும்!
உடலுருகிய தொன்றையும்!
வீதியோடு வாழவிட்ட!
விழியழிந்த மூடர்கள்!
இங்கே வேண்டாமே!
நரகுல நாயகர்கள்!
செழித்து வாழும்!
வேற்றுலகம் கண்டெடுத்து!
குழந்தை செல்வத்தை!
துறந்து வாழும்!
ஐயறிவு கொண்டு!
அனாதை நாய்களாய்த்!
திரியும் பேய்களைத்!
துரத்துவோம் வருங்களேன்!

தாய்

வினோத்குமார் கோபால்
விதையாய் விழுந்து எனை!
உன்னில் புதையலாய் இட்டேன்!
விதையதனில் துளிர் தெரிக்க!
உதிரம் உருக்கி உரமாய்!
எந்தனில் உயிர் ஊறினாய்!
திங்கள் பத்து களைய!
நின் வயிற்றுத் தொடிலில்!
எனை ஊஞ்சல் இட்டாய்!
பெண் எனும் போர்வைக்குள்!
சேய் பின்பு தாரமாகி!
என்னுடையத் தாய் ஆனாய்!
உன்னை பற்றி எண்ணியே!
வியப்புற்றேன் என் தாயே!

வைரம்

வினோத்குமார் கோபால்
மலையிரண்டில் மையத்தில்!
தலையெட்டிப் பார்த்திருக்கும்!
விடியற்பொழுது நாயகனின்!
சிரிப்பிற்கு ஒப்புமையோ!
விரலெட்டிப் பார்க்கும்!
மோதிரம் அமர்ந்த!
விரல் கிளையின்!
மேல் மலர்ந்த!
வெண்குடை விரித்து!
நின் விழி நோக்கும்!
வைரக் கல்!

அன்பெனும் ஒளி

வினோத்குமார் கோபால்
கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!