தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தாயெனும் தேவதை

வினோத்குமார் கோபால்
சிறகுகள் சுழலும்!
செயற்கைக் காற்று!
பஞ்சு பொதித்த!
தலையனை, மெத்தை!
எதுவுமிங்கு எனக்காக!
தரையமர வேண்டாமே!
தாயெனும் தேவதையின்!
மடியெனக்காக காத்திருக்க...!

தொடரு

செண்பக ஜெகதீசன்
முன்னேறத்துடிக்கும் இளைஞனே!
முடங்கிவிடாதே சோம்பலில்,!
முன்வைத்த காலை!
நடை!
முடியுமுன்னே எடுக்காதே..!
போய்க்கொண்டே இரு!
பாதை இருப்பது உனக்காக,!
பாதையில் வருவது!
பாலைவனமானாலும்!
பயணத்தை நிறுத்தாதே-!
புசிக்கக் கிடைக்கும்!
பேரீச்சம்பழமும்,!
பருகத் தண்ணீரும்...!!
பாதையைப் பார்த்து!
பயணத்தைத் தொடரு,!
வராது!
தோல்வியாம் இடரு

மனிதன் காட்டிய பாடம்

செண்பக ஜெகதீசன்
கன்றுக்குட்டி!
கற்றுக்கொடுத்த பாடம்-!
முட்டினால்தான்!
கிட்டும் பால்..!
எல்லோரையும்!
முட்டாளாக்கிவிட்டு!
மனிதன்!
காட்டிய பாடம்-!
வைக்கோலிலே கன்றுக்குட்டி…!!

சேர்ந்து

செண்பக ஜெகதீசன்
மனிதனே,!
ஒன்று சேர்ந்த நூல்களால்!
உன் மானம் காக்கப்படுகிறது-!
உடையாகி..!
நீமட்டும் ஏன்!
நின்று தவிக்கிறாய்!
தனியாய்…!!
சேர்ந்து வாழ்!
சோர்வு இல்லை…!!

அடுத்தொரு நாளில்

ரசிகன்!, பாண்டிச்சேரி
சொல்ல வந்ததை!
முதலில் சொல்லிவிடுவதாக கூறி!
மௌனம் பேச தொடங்குகிறாள்!!
முன் பொழுதும்!
முன்பெப்பொழுதும்!
ஆரம்ப நிலை இதுவாய்தானிருந்தது!!
இன்றேனும் சொல்லிவிடுவதை போல!
உடல் மொழிகள்!
அறிவித்தவண்ணம் இருந்தன!!!!
பொறுமையிழந்த நேரம்!
பின் சந்திப்போம் என்றவாறு கடக்க!
இவளும்!
அடுத்தொரு நாள்!
நமக்கானதாய் இருக்கிறதென்பதை!
சொல்லாமல் சொல்லியவாறு!
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு

அவள் நினைவுகளோடு போராடுகிறேன்

ரசிகன்!, பாண்டிச்சேரி
உங்கள்!
எவரையும் போல் நானில்லை!!
ஒரு நட்பு மட்டுமல்ல...!
ஒரு காதலையும் தோற்றவன்..!
என்னையும் தான்!!
என்னைப்போல!
நீங்களும்!
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு !
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...!
என்ன ஒன்று...!
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ!
உங்களிடம் நீங்கள் இல்லை!!
இப்படியான நினைவுகளை விட!
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்!
நிச்சயம்!
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-!
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!!
நிழலை!
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்!
பேய் என படரும்!
அவள் நினைவுகள்!
இம்மனித பிசாசை!
தூங்க விடப்போவதில்லை...!
அவளின்!
தீரா தாக நினைவுகள் பட்டு!
தெறிக்கிறது என் மௌனம்...!
ஒன்று கவிதையாகி விட்டது!!
மற்றவை அனாதையாகி விட்டது

பெண்ணிலா

ரசிகன்!, பாண்டிச்சேரி
இருட்டணைத்த மொட்டைமாடியில் !
முதலில்!
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்!
போரிட எத்தனித்திருந்தது!!
மின்னல் வேகத்தில்!
மடிந்து போனது!
மற்ற மீன்களுக்கு!
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!!
சீற்றத்துடன்!
வெள்ளொளியை கக்கியவாறு!
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்!
வெண்ணிலா!!
பின்னடி வைக்காமலே!
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்!
பின்வாங்கி கொண்டன!!
நீயா நானா என்ற!
தீர்மானம் கொண்டு!
அவள் நெருங்கிவரவும்!
என்னவள் !
தலை சுற்றியிருந்த!
நூலாடை மெல்ல நழுவவும்!
சரியாய் இருந்தது!!
தோற்ற பொலிவில்!
தோற்றுப்போனவள் !
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்!
மேகமூட்டத்தினூடே

அகால டைரி

ரசிகன்!, பாண்டிச்சேரி
நடந்து முடிந்தவற்றை!
பேசிக்கொண்டிருந்தது!
ஒரு அகால டைரி!!
பக்கம் பக்கமாய்!
பேனா மையின் ரேகைகள்!
சற்று கீறலுடனே கையொப்பமிட்டிருந்தன!!
நேற்று எழுதிய!
பக்கத்தின் கடைசி வரியில்...!
மை தீர்ந்து போய் இருக்க!
இன்று எழுத முடியா மிச்சத்தை!
மொத்தமாய்!
நிறைவு செய்துகொண்டிருந்தது!
கண்ணீர் கூட்டம்!
ஒரு அகால மரணத்தில்

கனவு உயர யூகங்கள்

ரசிகன்!, பாண்டிச்சேரி
வெறுமன !
பூக்கள் மட்டுமே !
நிறைந்திருக்கும் காடு...!
செங்குத்தான!
ஒரு மர இடுக்கில்!
வேட்டையாட காத்திருக்கும்!
உங்களின் யூகங்கள்!!
யாரும் நுகர்ந்திடாத!
வாசம் கொண்ட!
கவிதைகள்!
சறுக்கலான பாதைகளில்!
வெட்கி ஜீவித்திருக்கும்...!
கனவு தேவதைகள்!
கருத்தரித்து!
விட்டுச்சென்றவையாய் இருக்கலாம்...!
பிறந்த பசியில் அழும்!
ஒவ்வொரு பத்தியையும்!
உயிர் உருவம் அற்ற !
ஒவ்வொரு காதலிகள்!
பசியாற்றிக்கொண்டிருக்கக்கூடும்!!
அவள்கள்!
மிக பரிச்சயமான!
முகமாகவும் இருக்கலாம்...!
உலகம் கண்டிடாத !
ஏவாளாகவும் இருக்கலாம்!!

அடுக்குமாடி காலணிகள்!

கே.பாலமுருகன்
அடுக்குமாடி வீடுகளின்!
வாசலில் யாராவது!
காலணிகளைத் தேடிக் கொண்டு!
வரவில்லையென்றால்தான்!
ஆச்சர்யம்!!
3வது மாடி சிவகுமார் அண்ணனின் !
காலணி 4வது மாடியின் வாசலில் !
எங்காவது சிரித்துக் கொண்டிருக்கும்!!
ஒவ்வொரு நாளும் !
காலணியைத் தேடிக் கொண்டு!
பலர் மாடி ஏறுகிறார்கள்!
இறங்குகிறார்கள்!!
பொருந்தாத காலணிகளைக்!
கால்களில் சுமந்து கொண்டு!
முகம் தெரியாத சிறுவர்கள்!
மாடிக்கு மாடி ஓடுகிறார்கள்!!
காலணி பஞ்சம்!
ஏற்படும் போதெல்லாம்!
அடுக்குமாடி சிறுவர்களைத்தான்!
தேட வேண்டும்!!
இங்குள்ளவர்கள் எதையாவது!
தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
காலணியைத் தொலைத்துவிட்டு!
நிற்கும் சிறுவனைப் போல!!