மதத்துபோன மத்தாப்பு
மு.வெங்கடேசன்
பள்ளி சிறுவன் பாஸ்கரன்
பட்ட பகலில் பாதம்தேய
பயணம் செய்தான் பாவமாக
சென்ற வழியில் சிறப்பு
உயர் நீதிமன்றம் இருக்க
வந்தது நியாபகம் வக்கீலான
தன் தந்தை என்று
தீபாவளி என்பதால் தின்பண்டங்களின்
கூடாரம் குறையாது இருக்க
குலோதுங்கநனா அப்பாவுடன் வந்து
குலோபஜம் வாங்கியது நியாபகம்
இப்படி நெஞ்சில் நினையுகள்
நீங்காது வந்து செல்ல
வீடும் வந்துவிட்டது விரைவாக
அங்கு புகையலை போடும்
அப்பாவிற்கு பதிலாக அவரின்
பூசூடிய புகைபடமே இருந்தது
அப்பொழுது தான் தெரிந்தது
வாய்தா கேட்ட வக்கீலுக்கு
வாய்கரிசி போடப்பட்ட தென்று
அங்கே உறவுகள் உதறிய
இனிப்புகள் இரங்கள் தெரிவித்தன
பக்கத்து வீ ட்டார் பலகாரங்கள்
பலாத்காரம் செய்யபட்டது போல்
நூறாக நொருங்கி கிடந்தன
அங்கே
மத்தாப்பு சத்தத்துக்கு பதிலாக
ஊதுபத்தியின் ஒப்பாரி சத்தம்தான்
கேட்டது .
இதற்கு புகையலை புற்றுநோயும்
அலர்ஜியான ஆஸ்துமாஉம் காரணமில்லை
ஜகோட்டில் வெடித்த அணுகுண்டும்
தீவிரவாதிகளின் தீராத செயலுமேதான் .
என்று தனியும் தீவிரவாதம் .............