செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)
அன்புள்ள அப்பாக்கு,
பள்ளிக் கூடம் தெறந்தாச்சு!
பாடமெல்லாம் புதுசாச்சு!
பள்ளிக்கூட
உடுமாத்துத் துணியாட்டம்
பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு!
பட்டணத்தத்தாண்டி நம்ம
ஊரும் தெரிஞ்சாச்சு!
நம்மூரு இன்னைக்கு
பேப்பர்ல வந்திருக்கு !
என்னைக்காவது ஒரு நா(ள்)
என் படமும் டி.வி.யில!
இன்னாரு மகதா(ன்)
மாநிலத்துல மொதன்னு
அன்னைக்கு
ஒம்பேருக்கும்,நம்மூருக்கும்
பெருமை வரும் நிச்சியம்!
' சமச்சீர்' கல்வி
சகலருக்கும் பொதுவாச்சு!
சத்துணவு (திட்டம்)போல
புத்திக்கு ஊட்டமாச்சு!
என்ன நா(ன்) சொல்லுதேன்னு
ஒனக்குப்
புரிஞ்சிதோ தெரியலை,நீ
அடுத்தமொற வரையில
கட்டாயம் நா(ன்)
பேசுவேன் இங்கிலீசுல!
புறப்படறேன்
இப்போ நேரமாச்சு,
ஆறாம் வகுப்புப்
புத்தகம்
வாங்கணும் நாழியாச்சு!
பெறுநர்,
கொளுத்து - கோயிந்தன்,
துபாய்
எழிலி