மெய்யின்ப முக்திநிலை!
நீயாக, உன்னிடத்தில்.!
அதற்கேங்கும் பக்திநிலை!
நானாக, என்னிடத்தில்.!
பார்வையில் எரிக்காதே, பெண்ணே!
இது படைத்தவனின் பாரபட்சம்.!
ஆனந்தப்புதையலை ஆடைக்குள் ஒளிக்கிறாய்,!
ஆறாத ஆசையையும் எனக்குள் விதைக்கிறாய்.!
மாதுரச போதை கொண்டு,!
உன் சுவாசத்தை நெருங்குகிறேன்- நீயோ!
பாதரச பார்வை தந்து தீண்டாமை பேசுகிறாய்.!
உரசினால் சத்தம் போடுகிறாய் பலநேரம்- எனினும்!
உரசாமலே முத்தம் போடுகிறாய் சிலநேரம்.!
பாற்கடல் பருகவைத்தென்னை நரகமும் தள்ளுகிறாய், எனினும்!
சொட்டுத்தேன் சிந்திவைத்து சொர்க்கமும் தள்ளுகிறாய்.!
நொடிக்கொருமுறை நம் இடைவெளி குறைப்பேன்.!
அடிக்கொருமுறை உன் இடைதொட முயல்வேன்,!
இசையாமல் வசைவாய் பலநேரம், எனினும்!
இசைந்தெனக்கு இசையாவாய் சிலநேரம்.!
காமம் கேட்கவே, காதல் கொடுக்கும்!
கயவன், நான் என்ற போதும்,!
காதல் கேட்கவே, காமம் கொடுக்கும்!
அபலையானவள் நீ.!
விளக்கணைக்கும் என் இரவுக்காதல்,!
வீழ்ந்தேதான் போனது காதலி,!
விளக்கேற்றும் உன் இதயக்காதலுக்குள்.!
நம் காதலில் இப்போது,!
வெற்றி உனக்கு!
தோல்வி எனக்கு