வெளியில் முகம் காட்டி!
செடிகள் படர்ந்தன!
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்!
காற்றிறுகிய சதுர அறைக்குள் என்ன இருந்தன!
அந்த கதவு ஜன்னலின் துவார வழியால்!
கனிவு கசிந்தது!
இப்போ!
வெளிச் சுவர்களெல்லாம்!
கொடிகளை விளைத்தது!
கொடிகளெல்லாம் பூக்களை விதைத்தது!
பூக்களெல்லாம்!
வண்ணத்துப் பூச்சிகளைப் பூத்தது!
பல்லிகள் இல்லாத சுவரில் மோதி மோதி!
மலர்களைப் புணர்ந்து காற்று மணந்தது!
தட்டத் தட்டத் திறக்காத அறை திறந்தது!
உள்ளே!
பேனா ஊன்றிய தாளுடன்!
ஒரு கவிதை இருந்தது!
நம் சுதந்திரத்தைப் பாடியபடி

எஸ்.நளீம்