01.!
குடைக்குள் காளான் !
-------------------------!
உன்னோடு!
மழையில்!
நனைந்த சமயங்களில்தான்!
குடைக்குள்!
பூத்த காளான்கள்!
போலே!
என்னுள்ளே!
மழைபொழிந்த!
மௌனங்களை!
உணர்ந்தேன்.!
02.!
விக்கல் !
------------!
நீ தனியாக!
அமர்ந்து!
நம் நினைவுகளை!
விழுங்கும் போதெல்லாம்!
அன்பே!!
விக்கல் எடுத்தே!
வியர்த்து போகிறது!
என் மனசு.!
03.!
தேவதை மட்டும் !
-------------------!
!
நீ தலைசாய்ந்து!
பார்க்கும் போதெல்லாம்!
குடைசாய்கிறது!
என் மனசு.!
எத்தனை முறை!
சொல்லியிருக்கின்றேன்!
பெண்கள் மட்டும்!
என்றெழுதி வைத்த!
இருக்கையில்!
பயணிக்காதே என்று!
தேவதையே?!
04.!
பாரடி என் மோகினி !
----------------------!
!
சொன்னால்!
நம்பமாட்டேன்!
என்கின்றாய்!
முகம் திருப்பிக் கொண்டு!!
முகர்ந்துப் பார்!
கவிதையில்!
உன் வாசம்!
வருடிப்பார்!
காகிதத்தில்!
உன் பரிசம்!
வாசித்துப்பார்!
உன்னை நேசிக்கும்!
என் இதயம்!
நம்பிக்கை வரவில்லையா?!
கசக்கி எறிந்துப்பார்!
நான் இறந்துக்கிடப்பது!
புரியும்.!
05.!
ஏன்டீ என்னை இப்படி!
இம்சை செய்கிறாய்?!
நான் தந்த முத்ததில்!
என்ன குறைக்கண்டாய்!
திருப்பி வாங்கிக்கொண்டு!
வேறொன்று தா என்று,!
உன் விழியடியில்!
கிரங்கிக் கொண்டிருக்கும்!
இவனிடம், தலையனை கொண்டு!
அடிக்கின்றாய்.!
06.!
நீ கோபமாக!
இருக்கின்றாய்.!
சரி, பிறகென்ன!
நீ முத்தம்!
தந்து என்னிடம்!
கெஞ்சுவாய்!
இனிமேல்!
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்!
என்று.!!
அதற்கேனடி!
இவ்வளவு நேரமாக!
காற்கவைக்கின்றாய் என்னை?!
07.!
மக்கு,!
உன் தவறுகளில்,!
சரியாக செய்ய!
கற்றுத்தருபவள்!
நான்.!
அதற்காக!
முத்தத்தை கூடவா!
ஒழுங்காக இடமாட்டாய்?!
!
08.!
திகட்டாத இம்சை !
--------------------!
என்னை!
நிலைக்கண்ணாடியில்!
காணும் எல்லா!
தருணங்களிலும்!
திகட்டாத இம்சையாக!
எனக்குப் பின்னால்!
நீ தெரிந்து!
தொந்தரவு செய்கின்றாய்!
தினமும்!
இப்பொழுதாவது!
காட்டு உன்!
கண்ணாடி கண்னை!
உன்னுள் இருக்கும்!
என் முழுமையை!
கண்டுகொள்கிறேன்.!
09.!
எதைக் காட்டி அழைத்தாயோ!
தெரியவில்லை!
தாய்முகம் கண்ட!
சேய் போல்!
உன்னை நோக்கி!
தவழ்ந்தது!
மனசு.!
10.!
நகங்களின் இடுக்கினில்!
-------------------------!
நீ தவறுகள் செய்யும்!
பொழுதுகளிலெல்லாம்!
எப்போதும் போல!
இன்றும் மறந்து!
என்னை உன் எச்சிலால்!
நனைத்துவிட்டாய்!
உன் நகங்களின்!
இடுக்கினில்!
வாழ்ந்துக் கிடப்பதுதான்!
எவ்வளவு சுகம்.!
-தொட்டராயசுவாமி.அ!
கோவை
தொட்டராயசுவாமி.அ, கோவை