அறியாத வயது!
பள்ளி செல்லும் வழியில்!
பழுதடைந்து நின்றது பேருந்து!
வயல்வெளிச் சாலையில்!
இறங்கி நின்ற மழலைகள்!
பள்ளியை மறந்து பரவசமாயினர்!
குயில்களின் கூவலோடு சேர்ந்தது!
குழந்தைகள் குரல்!
குழந்தைப் பருவம் தொலைத்த!
நடுத்தர வயது ஆசிரியை!
எரிச்சலோடு சொன்னாள்!
டோண்ட் டாக். !
-ஜெ.நம்பிராஜன்!
ஊடலுக்குப் பின்...!
அழுது கொண்டிருந்தாய் நீ!
அமர்ந்திருந்தேன் நான்!
கொஞ்சகொஞ்சமாய்!
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட!
கண்ணீரில் 'நான்' கரைந்தோட!
என்னைத் தொலைத்த நான்!
உன்னை மறந்த நீ என!
நாமானோம் நாம்.!
-ஜெ.நம்பிராஜன்
ஜெ.நம்பிராஜன்