தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எதிர்பார்ப்பு

முருகு கார்தி
என்னவர்களே !!!!
நான் இறந்த பின்பு என்னுடைய!
கல்லறைக்கு மலர் தூவி வையுங்கள்,!
என்னால் நேசிக்கபட்டவள் என்றாவது!
என்னை நேசித்து வரக்கூடும்.........!

அகங்களும் முகங்களும்

வல்வை சுஜேன்
பேச்சில் ஒன்று மூச்சில் ஒன்று!
அகத்தில் ஒன்று முகத்தில் ஒன்று!
வாழ்வின் உயர்வினை அறுத்து!
வளைந்து கடிக்கிறது விச நாகங்கள் !
கடித்த பின்பே விழி திறந்தேன்!
பயனேதும் இல்லை !
புலன்கள் அடைக்கப்பட்டுவிட்டன!
ஜீவன் அற்ற உடலை சுட்டெரித்து !
சுற்றத்தை சுத்தம் செய்யும் தீயே !
உடல் பட்டளிந்து போகும் முன்பே!
நேர் கெட்ட அகங்களையும் சீர் படுத்து!
பாதகரை பரமபிதாவின் பக்கம் !
செல்ல விடாதே!
பாவத்தின் சம்பளத்தை !
நீயே கொடுத்துவிடு !
பருத்த பலாவில் முகத்தில் முள்ளிருந்தும்!
அகத்தில் தருகிறது அது இனிய சுளைகளை!
மனிதம் கொல்பவர் மனிதரல்ல!
புனித மதங்களின் பிள்ளைகளும் அல்ல!
இருளை அழிக்கும் விடிவான் விளக்கைபோல்!
இவர்களை நீ அழித்துவிடு!
முள் வளர்க்கும் அகங்கள் !
இனியாவது இனிய சுளையாகட்டும் !
உள்ளக் கதவை மெல்லத் திறந்து!
புனிதர் ஆவார் எல்லோரும். !

காதல் பேரானந்தம்

ப்ரியன்
கூந்தல் காட்டில் !
அலைந்து திரிந்து; !
அந்த வகிடு !
ஒற்றைப் பாதையில் !
ஒற்றையாய் உலாத்தி இருந்து; !
உன் உச்சித் தொட்டு !
எட்டிப் பார்க்கையில் !
நெற்றிவெளியில் !
விழுந்து தெறித்து; !
கண் பள்ளத்தில் !
விழுந்து தொலைந்துப் போன !
அந்த கணம்! !
ஆகா!பேரானந்தம்!! !
- ப்ரியன்

அர்த்தமற்ற அஸ்தமனம்

கோமதி நடராஜன்
ஆதவன் மறைந்தான் என்றால் !
அது நமக்கு மட்டும்தானே,மறைந்தான்.!
மறு பாதிக்கு உதித்து ஒளி வீச !
நம் கண்ணிலிருந்து விடுபட்டான்,!
என்பதுதானே உண்மை.!
துயில் கலைந்த சூரியன்!
மலை முகட்டிலிருந்து !
வெளியே வந்தான் என்ற ரீதியில்!
கவிதை வேறு!!
களைத்த கதிரவன்!
மேற்கே இளைப்பாறினான் என்ற!
வசனம் வேறு.!
நமக்கு மட்டும் தெரிந்தவன்!
ஊருக்கே ஒளியூட்டினான்!
என்று எப்படி ஏற்கலாம்!
நமக்கு மட்டும் மறைந்தவனை ,நாம் !
உலகுக்கே மறைந்தான் என்று ,!
எப்படி கொள்ளலாம்?!
இப்படித்தானே -!
நமக்கு நல்லது செய்ய வாய்ப்பு !
கிட்டாதவனையெல்லாம் எல்லோருக்கும் !
கெட்டவன் என்று திட்டித் தீர்க்கிறோம்.!
தேர்ந்தெடுத்து ஒரு சாராருக்கே!
உதவுபர்களை உத்தமன் என்று!
போற்றி பாடுகிறோம்!
அறிவிலிகளாய் ,ஆதவனையே விமரிக்கும் நாம்!
அற்ப மானிடனை விட்டு வைப்போமா.!
எனக்கு நீ கெட்டவன் என்றால் !
யாருக்கும் நீ நல்லவனாக முடியாது.!
என்ன ஒரு தீர்ப்பு!!
அடுத்தவர் விமர்சனங்கள்!
அத்தனையும் சத்தியமல்ல!
சொன்னவர்கள் எவரும்!
தெளிந்தவர்கள் அல்ல

வருவாய் - என் தலைவா!

வீ.இளவழுதி
வருவாய் - என் தலைவா!.. !
எப்போது வருமென தெரியாது!
தென்றலும் மழையும் - ஆனால்!
அதில் மனம் நனையாதவர்!
இருக்க முடியாது...!
அதுபோல!
எப்போது நீ வருவாய் என!
எவருக்கும் தெரியாது!
ஆனால் வருவாய் -!
எம் இ(ம)னம் து(கு)ளிர - நீ!
வருவாய் - என் தலைவா!.. !

காத்திருந்து! காத்திருந்து

தியாகு
காத்திருந்த!
கணங்களில்!
மண்ணில் நுழைந்த!
காதல் மரமாக!
பின்னால்!!
நிமிசத்தை!
தின்னாமல்!
வேர்களை தின்னும்!
விரக நாக்குகள்!!
நிழலில் இருந்தும்!
வேர்க்கும் மனது!!
அசையாத இலைகளால்!
ஓவிய மரங்கள்!!
பொழுது போக்க!
என்னையே படிக்க!
முயலும் புத்தகம்!!
சடுதியில் வரும்படி!
காற்றை அனுப்பு!
இலைகளுடனாவது!
பேசிக் கொண்டிருக்க!!
-தியாகு

எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன

றஞ்சினி
பயத்துடனான முகங்கள்!
நிறைந்த தேசத்தில்!
விலங்குகளின் !
நடமாட்டமும் !
குறைந்தே இருந்தது!
நேற்றுவரை இருத்தலுக்காக !
குரலை உயர்த்தியவள்/ன்!
இன்று வீதியில்!
இறந்து கிடக்கிறாள்/ன்!
பாடசாலை மாணவியிலிருந்து!
வீட்டிலிருக்கும் தாய்வரை!
எப்பவும் நடக்கிறது, நடக்கலாம்,!
ஒரு ஆயுதம் வாங்குவது!
பட்டினியால் இறக்கும்!
உயிர்களை விட!
அவசியமாகிறது இவர்களுக்கு !
அதிகாரங்களில் மனிதர்கள் !
இன்மையால்!
மனித உரிமைகள் !
பறிபோன தேசத்தில்!
ஆயுதங்களும் பொய்களும் !
சுதந்திரமாகவே உலாவித்திரிகின்றன.!
--றஞ்சினி

இன்று என்ன ஆனது?

சிதம்பரம் நித்யபாரதி
இன்று!
என்ன ஆனது?!
வைகறைப் பறவைகளும் வரக் காணோம்.!
ஏதோ!
இரகசியம் விழுங்கிய தோரணையில்!
தலையும் அசைக்காத தோட்டச் செடிகள்.!
புன்னகை மலர்த்தாப் பூக்கள்.!
வானத்து நீலமும் வெள்ளியும் கூட!
மாறா ஓவியத் திரையாய்த் தலைமேல் கவிய...!
கண்களை மூடிக் கொண்டேன்.!
பின்காதில் காற்று கிசுகிசுத்தது:!
அசைவே அசைவின்மை!
அசைவின்மையே அசைவு.!
கண் மடல் அவிழ்த்தால்!
கணத்தினில் பார்வையைப் புதுக்கும் மலர்கள்.!
வண்ணவில் தோன்றும்பார் என நீலமேகம் போர்த்தி!
ரசவாத உறுதியளிக்கும் வானம்...!
இன்று !
என்ன ஆனது? !
!
--- சிதம்பரம் நித்யபாரதி

கொஞ்சமேனும் வேண்டாமோ?

கலைமகன் பைரூஸ்
மண்ணெய்யாலும்!
மசகினாலும்!
வயிறு வளர்க்கும் நாடுகளே...!
உலகமயமாக்கப்பெயரோடு!
கலாச்சாரத்தை!
பூண்டோடு அழிக்கும்!
மேற்கத்தேயமே...!!
உங்களிடம் நாம் பணிபுரிவதை!
நீங்கள் தப்பாக்க் கணக்கிடுகிறீர்கள்!
பொதிசுமக்கும் மாடுகளாய்!
கைப்பொம்மைகளாய்!
உங்களுக்கு நாங்களா?!
நீங்கள் தங்க்க்கிண்ணங்களில்!
உடல்மினுக்கும் பெண்களை!
சுவைத்துக்கொண்டு!
அருந்துவதெல்லாம்!
எங்கள் உதிரமும் வியர்வையும்!
மாடாகப் படுத்துகிறீர்கள்!
திரும்பிக்குத்தவும்!
எங்களுக்குத்தெரியும்!
உங்கள் நாட்டில்!
வயிறுகழுவ வந்துவிட்டோம்.!
உங்கள்மீது கோபமில்லை!
என்கோபமெல்லாம்!
இறையாண்மையை அழித்து!
மேலாண்மையை வகுத்து!
சொல்லாண்மையை!
தட்டிப்பறித்த!
உன் ஈசலின்மீதுதான்....!
ஒருவருடத்துக்குள்!
ஓரிலட்சம் ஆண்டுகளின்!
வேலை வாங்குகிறீர்கள்!!
'இன்ஸான்...'!
கூடிக்கூடிப்போனால்!
அறுபதோ அன்றேல்!
எழுபதோதான் அநுபவிப்பான்...!
நாங்கள் என்ன!
உங்களைப்போல்!
மா... மரமனிதர்களா என்ன?!
எங்கள் மனவலியின்!
கடுகு விதைகள் ஒவ்வொன்றும்!
உங்களுக்கு வதைசெயும் ஒருநாள்!
தம்பட்டம் அடிக்காதீர்கள்!
உரத்துப் பேசாதீர்கள்!!
கருவிலிருந்து!
வெளியேவிட்டவனைப் பயப்படுகிறோம்...!
மாடுபடாத பாடுபடுகிறோம்!
கோடான கோடிபெறுகிறீர்கள்!
எங்கள் வேதனை!
எங்கள் மனவலி!
உங்களுக்குதெரியப்போவதில்லை!
ஒன்று மட்டும் உண்மை!!
எங்களுக்கு!
உங்களுக்குள்ள!
பாரிய நோய்கள் இல்லை!
அவனே மாபெரியோன்....!!
ஓரிரு ரியால்களை!
ஓரிலட்சம் டாலர்களாய்!
பார்க்கிறீர்கள்.....!
ஓரிரு டாலர்களைவைத்து!
ஆன்மாவை மறக்கிறீர்கள்....!
மாமனிதன் என்ற!
மாபெரும் பட்டங்கள் எல்லாம்!
பரீட்சை எழுதாமலே!
உங்களை அடைகின்றனவே!!
கொஞ்சம் மனம் வையுங்கள்!
நறுமணம் வீசலாம்!
உங்கள் அழுக்குகளை!
உங்கள் அசிங்க அறைகளுக்குள்!
கைவிலங்கிட்டு வையுங்கள்!!
ஓரிருநாட்களேனும்!
எங்களையும் வாழவிடுங்கள்!
எங்கள் உழைப்பில்!
உப்புச்சாப்பிட!
உயிர்கள் காத்துக்கிடக்கின்றன.!
உயிரோடு ஒட்டிப்பிறக்காத்தை!
உங்கள் காசாலேயாவது!
பெறமுயலுங்கள்!
எங்கள்வலி புரியும்!
உங்கள் வழிதெரியும்

சாபமல்ல

பாண்டித்துரை
என் வாழ்வில் !
எனக்கு கிடைத்தது !
கிடைக்கப்போவது !
எதுவுமே !
சாபமல்ல! !
படைத்த பிரம்மன் !
பார்த்துப் பார்த்து !
கொடுத்த வரம்! !