என் நண்பனே!.. சொல்லடி என் செல்லமே..என்னவளுக்காக...!
01.!
என் நண்பனே!!
---------------------!
உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே!
இடுக்கண் களைவதாம் நட்பு.!
வள்ளுவர்.!
என் நண்பனே!!
உன் துயில்தனை!
எழுதும் இந்தப் பேனாவின்!
உயிர்தனைக் குடிக்கும்!
இக்காகிதம் போல்!
என் உயிர்தனைக்!
குடிப்பதுன் துயில்தானோ?.!
செடியினின்றுப் பூத்திருக்கும்!
மலர்கள்தனை கொய்யாதே!
செடியின் கவலை !
உனக்கு புரியாது என்றாய்!,!
விளையாட்டாய் நானும்!
அறியாமலேயே!
இருந்துவிட்டேன்!!
இறைவன்!!
அவனை நினை-நமக்கு !
அவன் இருக்கின்றான் என்றாய்!!
உன்னை ஏளனமாய்ப் பார்த்து!
நீயெல்லாம் எனக்கு நண்பன்.!
என்று சொல்லிச்சென்றேன்!.!
கார்கிலில் எவனோ!
இறந்ததற்காக ஒரு நிமிடம்!
மெளனம் செலுத்தச் சொன்னாய்!!
எவனோ இறந்ததற்கு!
நாம் ஏன் செய்யவேண்டும்?!
என்று விளையாட்டாய்ச் சொன்னேன்!!
யார் மீதும் !
அதிகமாய் அன்பு கொள்ளாதே!
அதுவே உன்னை !
கொன்று விடும் என்றாய்!!
ஒன்றும் புரியாதவனாய்!
இருந்து விட்டேன்!!
என் இனிய !
சினேகிதனே...!
இன்றுதான் புரிந்துபோனது!
மலர்தனை இழந்த!
செடியின் வலி.!
கார்கிலில் செந்நீர் சிந்தியவன்!
தாயின் கண்ணிர் சிந்திய!
இதயத்தின் வலி.!
யார் மீதும் அதிகமாய்!
அன்பு கொள்ளாதே!
கொண்டுவிட்டேனே!
உன் மீது!.!
விளையாட்டாய் இருந்ததினால்!
உன்னை இழந்தேன்!!
இனி...!
உன் விதையாய்!
நான் வளரப்போகிறேன்!!
உன்னுடன்!
என் இதயத்தைத்தான்!
எடுத்து சென்றிருக்கிறாய்!!
உன் இதயம்!
பத்திரமாய் என்னிடம்...!
விளையாட்டாய் இருந்த!
என் இதயம்!
உன்னுடனே இறந்து-உன்!
இதயம்!
என்னுடன் இருப்பது போதுமடா!!
இறைவன் இறைவன்!
என்றாய்!!
இதோ என்னில் இருக்கும்!
உன் இதயம்தானா அது?.!
!
02.!
சொல்லடி என் செல்லமே...!
------------------------------------!
உன் கரங்கள் பற்றி!
என் கன்னங்களில் வைத்தும்!!
சில நேரங்களில்!
உன்கரங்கள்-என் !
கன்னங்களை பதம்பார்த்தும்!!
உன் மடிதனில்!
என் துயில்தனையும்!!
உன் தோல்தனில்!
என் கைப்போட்டு!
ஆல்பம் பார்த்தநாட்களும்!!
உன் பிஞ்சுப் பாதங்களை!
என் பாதங்கள் மீது வைத்து!
என் இருகரம் பற்றி!
நன்றாய் நான் நடக்க!
நடுவே உன்னிடம்!!!!
விழுந்துடப்போற பார்த்துடா,!
என்ற நாட்களும்!!
என்றோ சில சமயம்!
உன் கரங்கள் எனக்கு!
உணவூட்டிய நாட்களும்!!
உன்னிடம் பேசாததற்காய்!
நீ அழுத நாட்களும்!!
பிரியும்போது எப்படா வருவ,!
என்ற உன் வார்த்தையும்!!
உனை இழந்த எனக்கு!
மீண்டும் ஒருமுறை வருமா?...!
சொல்லடி என் செல்லமே...!
!
03.!
என்னவளுக்காக...!
-----------------------!
என் !
இதயமெனும் கோவிலில்!!
ஏற்றி வைத்த தீபமாய்!!
என் அவளின் நினைவுகள்.!
என்!
கண்களெனும் நிலத்தில்!!
நீரோடையாய் கண்ணீர்!!
என் அவளின் நினைவுகள்.!
என் !
முகமெனும் வானில்!!
இன்றேனோ அமாவாசை!!
என் அவளின் நினைவுகள்.!
என்!
சுவாசமெனும் பூதத்தில்!!
இன்றேனோ புயல்!!
என் அவளின் நினைவுகள்.!
தென்றலலைகள்!
எனைத்தாண்டிச் செல்லுகையில்!!
என் !
இதயத்தை வருடிச்செல்லும்!!
என் அவளின் நினைவுகள்
சிபி பாபு