ஹெச்.ஜி.ரசூல்!
தலையால் நடந்து கொண்டிருக்கும்!
ஒரு வினோத பட்சியின் பின்னே!
துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன்!
கைகால் முளைத்த மரங்கள்!
ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை!
பூமியில் வரைந்து செல்கிறது!
எனக்கென தென்பட்ட திசையெங்கும்!
வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்!
ஒன்றின் மேல் மற்றொன்றாகி!
சமாதிகளில் புதைக்கப்பட்ட!
உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்!
அலையடித்து கிளம்பும் பரவெளியில்!
மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து!
அறுபட்ட காதுகள் தொங்க!
விழிகளற்ற கொடிமர வேலிகள்!
உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்!
துருப்பிடித்து கருகி சாம்பலாகின.!
பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற !
தலைகீழ் பட்சியின் நாவுகளில்!
பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.!
நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த!
ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்!
நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.!
போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்!
இறக்கையின் திமிறடக்கி!
பட்சியை இறுகி கட்டியணைத்தபோது!
நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்

ஹெச்.ஜி.ரசூல்