சங்கேத வார்த்தை
ப. மதியழகன்
உன் சங்கேத வார்த்தைக்கு!
அர்த்தமென்ன என்பதை!
இப்போது தான் தெரிந்து கொண்டேன்!
வாழ்க்கையைவிட கொடூர தண்டனை!
வேறு என்னவாக இருக்க முடியும்!
சங்கடங்கள் இல்லாது!
அக்கடா என்று விட்டம் பார்த்து!
படுத்துக் கிடக்க எவரால் முடிகிறது!
இங்கே!
மயிரிழையில் உயிர்ப்பிழைத்தவனிடம்!
கேட்க வேண்டும் உயிரின்!
மகத்துவம் என்னவென்று!
சிறிய தவறு பின்னால்!
பூதாகரமான பிரச்சனையாகிவிடுவதை!
யார் தான் கணிக்க முடியும்!
மரணத்தாகத்துடன் அலைபவன்!
இந்தக் கிணற்று நீரை குடிக்கலாமா!
என யோசிப்பானா!
உன் கவிதையை நான் எழுத!
வேண்டுமென்றால்!
என் வாழ்க்கையை!
நீ வாழ வேண்டும்!
சிந்தனைக்கு எல்லை வகுக்கும்!
உனது சட்டதிட்டங்களை!
அமல்படுத்தினால்!
பூமியே கல்லறைத் தோட்டமாகத்தான்!
இருக்கும்!
உனது நடவடிக்கைகளை!
சகித்துக் கொண்டு வாழ!
எனது சுதந்திரத்தை தாரை!
வார்க்க வேண்டும்!
எனது மனக்குதிரை!
விருப்பம்போல் மேயாமல்!
உனது லாயத்தில்!
கட்டிப் போடப்பட்டிருக்கும்!
அடிவானத்துக்கு அப்பால்!
சுதந்திரத் தீவொன்று!
இருக்கிறதாம்!
முயற்சி செய்து அங்கே!
போகிறேன்!
இல்லையேல் மீன்களுக்கு!
இரையாகி!
நடுக்கடலில் சாகிறேன்.!
----
01.
துயரத்தின் வாசனை!
என் அறையெங்கும்!
நிரம்பியிருந்தது!
தீர்ப்பு எழுதும் போது!
கைகள் நடுங்குகின்றன!
எல்லோரையும்!
சந்தேகக்கண்ணோடு நோக்குவது!
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!
கடவுள் தன்மைக்கு!
இடம் கொடுக்க மறுக்கிறது!
மனம்!
கடவுளுக்கு படுக்கையறையில்!
இடம் கிடையாது!
சாத்தானை விரும்பும்!
பெண்களின் கண்களில்!
காமம் கொழுந்துவிட்டு எரிந்தது!
இரவு நெருங்க நெருங்க!
இறையுணர்விற்கு விடை!
கொடுத்துவிட்டு!
பேயாய் மனம ஆட்டம் போடுது!
இருளுக்கு ஏங்கியலையும்!
சமூகம் தான்!
கூடிய விரைவில்!
பைத்தியமாக திரியப் போகிறது.!
02.!
விவகாரத்தில் மாட்டினால்!
தப்பிக்கும் வழி!
தானே தெரியும்!
எதையும் தனதாக்கிக் கொள்ள!
ஆசைப்படாதவன்!
கையேந்த யோசிக்க மாட்டான்!
அடுக்களையில் வடித்துக்!
கொட்டுபவளுக்கு வசதி!
செய்து கொடுக்க ஆசைதான்!
ரயில்பூச்சி போல்!
இருந்து கொண்டிருக்கலாம்!
யார் கண்ணுக்கும் உறுத்தாமல்!
குயில் போல கூவி!
தன்னிருப்பை காண்பித்தால்!
துரத்தப்படுவோம் கூட்டை விட்டு.!
!
03.!
இவன் பார்வையில்!
அவர்களெல்லாம்!
சுவர்க்கவாசிகள்!
வீடே கோட்டை மாதிரி!
என்றால்!
மற்ற வசதிகளைப் பற்றி!
கேட்கவா வேணும்!
வர்ற வட்டி போதும்!
குடும்பம் நடத்த!
இருந்தாலும் உத்தியோகம்!
புருஷலட்சணமல்லவா!
பட்ஜெட்டில் துண்டுவிழாதது!
இவர்களுக்கு மட்டும்தான்!
மத்திய தர வர்க்கம் தான்!
வாழ்வு வந்தால் குதிப்பதும்!
தாழ்வு வந்தால் அழுவதும்!
மேல்தட்டுவர்க்கத்தை வேடிக்கைப்!
பார்த்தால் கற்றுக் கொள்ளலாம்!
இன்னும் நிறைய.!
!
04.!
சமூகம் பணமுதலைகளைத்தான்!
ஹீரோவாக அடையாளம் காட்டுகிறது!
சுயமுன்னேற்ற புத்தகங்களைத்தான்!
வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது!
அறிவுவிருத்திக்காக படிப்பவர்களை!
அடையாளங்காட்ட முடியாது!
கோயிலுக்குள் சென்று!
பணத்தை யாசகமாகக் கேட்கும்!
பிச்சைக்காரர்களாகத் தான்!
இந்த வெகுஜனத்தை!
சமூகம் பழக்கிவைத்துள்ளது!
பணக்கட்டுகளுக்கு முன்னால்!
சித்தாந்தம் தோற்றுத் தான்!
போகிறது!
தலைவிதியென்று பொறுத்துக்!
கொண்டால்!
தரித்திரம் ஓடிவிடுமா என்ன!
வரம் கொடுத்த சிவன் தலையில்!
கைவைப்பது போல்தானே!
இடித்த கோயிலுக்குள்ளும்!
இறைவன் தானே இருக்கிறான்!
மீட்பரின் மலைப்பிரசங்கம்!
மீண்டும் தொடங்கட்டும்!
இம்மண்ணுலகில்.!
05.!
நீங்கள் இப்படி சொன்னால்!
எப்படி!
கண்களைத் தாழ்த்தி!
இப்படிக் கேட்பவரை!
நெஞ்சில் ஈரமில்லாமல்!
எதிர்கொள்வதற்கு பயிற்சி!
வேண்டும்!
காரியமாகவில்லை எனபதை!
சூம்பிப் போன முகம்!
காட்டிக் கொடுத்தவிடுகிறது!
இறப்புச் சான்றிதழ்!
பெறுவதற்கு கூட காசு!
தேவையாயிருக்கிறது!
இவர்களிடம் தேவைக்கதிகமாக!
பணம் சேர்ந்ததால்!
இயேசு பிரகடனப்படுத்திய!
விண்ணரசைக் கூட!
விலைக்கு வாங்க!
பேரம் பேசுகிறார்கள்!
அங்கு இது செல்லுபடியாகாது!
என்று அறிவித்தால்!
அதை ஏற்க மறுக்கிறார்கள்!
இறுதியில் நோய்!
வாய்ப்பட்டு!
சேர்த்ததையெல்லாம்!
மருத்துவ சிகிச்சையில்!
தொலைக்கிறார்கள்.!
06.!
எல்லா கேள்விகளுக்கும்!
விடை கிடைத்துவிடுகிறதா என்ன!
துக்கவீட்டில் யாராவது!
இறந்தவனின் வாழ்க்கையை!
சீர்தூக்கிப் பார்ப்பார்களா!
பழக்கப்பட்ட தெருவில்!
வீடுமாறி புகுந்து!
சங்கோஜப்பட்டு திரும்பும் போது!
முத்து பரல்கள் சிதறுவதைப் போல!
பின்புறத்திலிருந்து சிரிப்பொலி!
கேட்குமே அது அந்தவீட்டைக்!
கடக்கும் போதெல்லாம்!
இனி எதிரொலிக்கும்!
திக்குத்தெரியாமல் அலைபவர்களின்!
கண்கள் வேட்டையாடப்பட்ட!
மானைப் போன்றிருக்கும்!
வனவாசம் புகுந்தாலும்!
மனம் நசியாமல்!
பாம்பாய்ப் படமெடுக்கும்.!
!
07.!
தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு!
தூக்கி எறிந்துவிடுகிறோம்!
நிர்மூலமான நகரத்தில்!
ஆங்காங்கே முனகல் கேட்கிறது!
வண்ணத்துப்பூச்சியை பின்தொடர்ந்து!
சென்றால் வண்ணங்களைத்தான்!
யாசகமாக பெறலாம்!
மெளனத்தின் கால்தடங்களைப்!
பின்பற்றிச் செல்லும் போது!
வாழ்வின் மகத்தான தருணங்கள்!
புரிதலின்றி நகர்கிறது!
அப்போது பிரிதலின் அர்த்தம்!
புரிபட ஆரம்பித்தது போலிருந்தது!
வழக்கத்திற்குமாறான காலநிலை!
என்னை வாவென்றழைத்தது!
பெய்தது போதுமென்று!
பூமி நினைத்தது!
ஈசனின் சொரூபம்!
வானுக்கும் மண்ணுக்குமாக!
ருத்ரதாண்டவம் ஆடிக்களைத்தது.!
!
08.!
இந்த சமயத்திற்காகத்தான்!
நான் காத்திருந்தேன்!
நிழல் பொய் சொல்லாது!
ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையை!
அனுசரித்துச் செல்லும்!
நிர்பந்தம் யாருக்கு!
விளக்கு வெளிச்சத்தில்!
இருளைத் தேடினேன்!
மின்மினியின் வெளிச்சத்தில்!
பாதையைக் கண்டறிய முடியாது!
நாளையப் பொழுதை!
நம்பினால் தான்!
காரியத்தில் இறங்க முடியும்!
பிறப்புக்கு முந்தியும்!
இறப்புக்கு பிந்தியும்!
என்ன நடக்குமென்று!
யாருக்கும் தெரியாது!
காலம் போடும்!
புதிருக்கு யாராலும்!
விடை காண முடியாது.!
!
09.!
கால தேச எல்லைகளைக் கடந்து!
ஒழுங்கமைவுடன் எல்லாவற்றையும்!
நடத்திக் கொண்டிருப்பவன் யார்!
தூக்கத்தில் ஒடுங்கிவிடுகிற மனது!
விழித்ததும் ஆரவாரிக்கிறது!
மத்திம வயதில் காசுக்காக!
அலைந்த மனது!
அந்திம காலத்தில் இறைவனின்!
காலடியைத் தேடுகிறது!
கட்அவுட்க்கு பாலாபிஷேகம் செய்யும்!
ரசிகர் மன்றங்களை நம்பித்தான்!
நாளைய இந்தியா உள்ளது!
பேனா முனையில் உரசலினால்தான்!
நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது!
காந்தி பிறந்த நாட்டில் தான்!
மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது!
ஏழை ஜனங்கள் தான்!
வாக்குரிமையை விற்றுப் பிழைப்பது!
பாமர மக்களின் தலையெழுத்தை!
யார் இங்கு நிர்ணயிப்பது.!
!
10.!
எழுத்து அவ்வளவு சீக்கிரத்தில்!
வசப்பட்டுவிடாது!
பாத்ரூமில் வார்த்தைகள்!
வந்து விழும்!
குறித்துக்கொள்ள காகிதம்!
இல்லாதபோது கரு பிறக்கும்!
சொற்களை தனதாக்கிக் கொள்ள!
நினைக்கும்முன் தப்பிவிடும்!
பாடுபொருளைத் தேடுவதில்!
சிக்கல் எழும்!
சரக்கை உள்ளே ஊற்றினால்தான்!
கற்பனைகள் சிறகுவிரிக்கும்!
அனுபூதி இருந்தால்தான்!
ஆற்றொழுக்காய் வரி பிறக்கும்!
தரையில் விழுந்த மீனைப் போல்!
துடித்தால் தான்!
எழுத்துலகில் அசைக்கமுடியாத!
ஓர் இடம் கிடைக்கும்.!
!