போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
காதல் விழி பேசி!
காத்திருந்த கனவுகளைக்!
கானலாக்கும் கடமை!
காலத்தின் கட்டாயமாகிட!
காத்திருப்பு சிதறல்!
காயங்கள் கரைய எழுச்சிநடை பழக்கி!
காலக்கரங்கள் நீட்டும் தன்னம்பிக்கை!
காக்கும் வெற்றி(ப்) படி சுகமே..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
ஓடி வந்தென் தோள் சேர்ந்து!
மங்கல நாண் கழுத்தணியாக்கிட!
பெற்றிருப்பேன் ஒன்றிரண்டு மழலைகள்..!
தேடி வராமல் எறியப்பட்டு!
எரிந்த காதல் புண்ணுக்கு மருந்தென!
தொண்டுள்ளம் துணையாகிட ஈன்றேன்!
பல்லாயிரம் மலர்களின் அன்னையெனும்!
பாக்கிய மகுடம்..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
தோல்வி நிலையென கருதாஉள்ளம்!
தன்னம்பிக்கை சிறகு முளைக்க!
மனவேதனை மை நிரப்பி!
தோல்விப் பாடங்களை வரிகளாக்கி!
கவிதை வாசம் தெளித்து ஈட்டுவேன்!
திறன்மிகு படைப்பாளியாய்!
வாழ்த்து வெகுமதி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
மனம் நோக தோல்வி வடு தந்து!
மணமாலை சூடும் மறுப்புள்ளம்!
என்னுள் முகிழ்க்கக்!
காரணியாம் உனையேச் சேரும்!
மணமேடை ஏற அருகதையற்ற!
முதிர் (கன்னி/காளை) இவரென!
சமூகம் எள்ளிநகையாடித் தூற்றும்!
பாவச் சவுக்கடி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?
நாகினி