தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மருத்துவக் குழல்

சஹ்பி எச். இஸ்மாயில்
தொலை காட்டியைப் போல் !
நீ எப்பொழுதும் உயரத்தையே பார்க்கிறாய் !
உன் காதல் மின்னல் !
அடிக்கடி கட்டிட உச்சியை நோக்கியே பாய்கிறது!
உனக்காக வானில் பட்டம் விட்டு சமிஞை செய்கிறேன். !
நீயோ என்னிடம் சிறகுடைந்த பட்டங்கள் கேட்கிறாய் !
கடிகார முட்களைப் போல் ஒவ்வொரு !
நிமிடமும் உன்னையோ தழுவுகிறேன் !
காதல் மதுக்கடையில் அதிகமாகக் !
குடிப்பவனுக்கு போதை ஏறுவதில்லை !
நான் உன் பெயரில் கவிதைகள் வரைகிறேன் !
நீயோ என்பெயரில் பதவிகள் தேடுகிறாய்!
காதல் கடிகாரத்தில் நாட்களை விட !
நிமிடங்களே மெதுவாகச் செல்லும்!
நீ வண்டுகளின் கால்கள் எண்ணுகிறாய் !
நான் பூக்களின் அழகை ரசிக்கிறேன்!
காதலில் கனவுகளை விட நிஜங்களே !
அதிகம் உண்மை பேசும் !
பகலில் என் காதலிக்காக உணர்வு !
வலையை வீசுகிறேன் !
இரவில் நீ உன் காதலனுக்காக !
அறிவு வலையை வீசுகிறாய்!
எனக்குத் தெரியும் நீயும் காதல் !
வீணை இசைக்கிறாய் என்று !
என்னவோ அது ஒரு நாளும் என் !
காதில் விழுவதில்லை!
குழல்களும் உன் இதயத் துடிப்பை !
ரசிக்க வேண்டுமென்கிறாய் !
என்னிடம் உள்ளது வெறும் செவிகள் மட்டுமே !
நான் கண்ணீரால் கடிதம் எழுதுகிறேன் !
அவற்றை நீ புன்னகையால் கிழித்தெரிகிறாய் !
காதல் சுவர்க்கத்தின் முடிவு நரகத்தின் வாயில்!
உன் காதல் ஒன்றுசேறும் நாளில் நானும் வருவேன் ஒரு காதல் மடலுடன் !
அது உனக்கல்ல என் மரணக் காதலிக்கு

முகம்

பாஷா
எத்தனை முகம் !
வைத்திருக்கிறாய் நீ? !
ஏறிட்டு பார்க்க !
ஏளனம் செய்ய !
ஏமாற்றிப் போக !
அத்தனையையும் என்னில் !
பூக்களாய் கோர்த்து !
வைத்திருக்கிறேன். !
சத்தி சக்திதாசன்

உன்னைச் செறிவூட்டு

இ.ஜேசுராஜ்
வானம் நிகர்த்தளவு !
வைர நெஞ்சம் நிறுத்தி !
பூமி புரட்டமுடியுமென !
பூதமென உறுதிகொள்வாய் ! !
பகுத்த சிறுகடுகின் !
பல்லாயிரத்தி லொன்றொத்த !
அளவினதுதான் !
அணுவதன் சிறு பிளவுதான் !
அண்டம் நொறுக்கும்தான் !
அதனுள்ளடைத்த செறிவுதான்! !
சினமூட்டும் நிகழ்வுகளால் - உனை !
செறிவூட்டி வைப்பாய் ! !
சிறிதளவேனும் சினமாற்றாது !
உனக்குள் உனையே !
உருக்காலையென !
நெருப்பு பூட்டிக்கொள்வாய் ! !
எரிமலையென !
நெருப்புக் குழம்பினை !
நெஞ்சத்துள் புதைத்துவைப்பாய் ! - நீ !
வாய்க்கும் காலத்தே !
வெடித்துவிடு !
புரட்சிக்கணலாய் சீறியெழு !
பூதமென !
பூமிதனை புரட்டிப்போடு ! !
மாற்றம் கிட்டும் ! ஏனெனில் !
எல்லாமும் !
மாற்றத்திற்குட்பட்டதுதான் ! !
!
ஆக்கம் !
இ.ஜேசுராஜ் - கீரனூர்

பச்சிளங் குழந்தை.. பூவின்.. கடவுளாய்

வை. அண்ணாஸாமி
பச்சிளங் குழந்தை.. பூவின் கூற்று.. கடவுளாய் என்றும்!
01.!
பச்சிளங் குழந்தை!
-------------------------!
ஒருவரிக் கவிதை! காண்போரின் கவலைகளை!
சுருக்கியே வாழ்வில் சுவைகூட்டும் நல்லதோர் மருந்து.!
ஒவ்வோர் அசைவும் நமக்கு ஊட்ட்ம்தான்.!
எவ்விதம் மறப்பார் இவ்வின்பத்தை.!
சிரிப்பினை, ஈர்க்கும் சின்ன இதழ்!
விரிப்பினை கண்டு மயங்காதோர் உண்டோ? அரிதான!
இறைவன் இவந்தானோ? பன்னாட்கள் 'பளிச்சென்ற'!
பிறைனுதல் நம்வீட்டு வானிலும்!!
!
02.!
பூவின் கூற்று!
-----------------!
வானமே, நீவிரிந்து படர்ந்து கிடந்தாலும்,!
மனம் கவரும் வண்ணக் கலவை உனக்குண்டோ?!
சுவையான தேனையடக்கும் திறமையும் என்னுள்.!
கவிகளின் கற்பனை 'ஊற்றும்'நானே!
!
03.!
கடவுளாய் என்றும்...!
---------------------------!
கடவுளாய் என்றும் எண்ணும் மனிதன்-அதனைக்!
கடந்து மனிதனாய் வாழும் புனிதன்.!
மனிதனையும் கடவுளையும் கண்முன்னே ஒருங்கே,!
தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்

பொறுப்பு

முத்தாசென் கண்ணா
அப்பா சட்டையில்!
நாலணா எடுத்தால் கூட!
கோள்மூட்டிவிடவும்...!
சனிக்கிழமை!
சம்பள நாளின் தீனிகளில்!
பெரும்பங்கு கொண்டு!
ஒழுங்கு காட்டுவதும்.......!
அவளுக்காக பயந்து!
நான் அடுப்பங்கரையில்!
செல்பேசுவதும்....!
பைசாவுக்கு கூடப் பெறாது!
அவளிடம் மதிப்பிழப்பதுமாக!
தங்கை என்று ஒருத்தி!
ஆனால் ஏதோ ஒரு!
பொறுப்பு வந்ததை!
தோன்றுகிறது!
உன் தங்கை பெரிய மனுஷி ஆயிட்டா!
என்று என் அம்மா சொன்னபோது!
-முத்தாசென் கண்ணா

கைகள்

ராஜா கமல்
ஒ என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து!
ஊன்றப்படும் வித்து தான்!
விருட்சமாகிறது!
அழுத்தப் படும் பந்து தான்!
மேலேழுகிறது!
இழுக்கப் படும் அம்பு தான்!
இலக்கு எய்துகிறது!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
உழைக்கப் பயன் படுத்து!
உழைக்கும் வர்கம் உயர்ந்ததாகத்தான்!
உலக வரலாறு!
ஏய்த்தவர்கள் எழுந்ததில்லை!
உழைத்தவர்களால் தான்!
உலகம் ஒளிர்கிறது!
முடிந்தால் உலகத்துக்கு உழை!
இல்லையேல் நாட்டுக்கு!
குறைந்தபட்சம் வீட்டுக்காவது உழை!
உழைப்பு என்ற மந்திரம் இருக்கும் வரை!
ஏழ்மை என்ற சைத்தான் நெருங்குவதில்லை!
!
ஆகையால் என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்த பயன் படுத்தாதே!
நூறு கோடி கைகளும் இந்தியாவின்!
இரும்பு தூண்கள்!
உன் கைகள் புரட்சிகள் செய்யட்டும்!
புதுமைகள் செய்யட்டும்!
நாளை உலகம் நம்மை!
நல்ல தலைவன் என்று சொல்ல வேண்டாம்!
நல்ல மனிதன் எனறாவது சொல்லட்டும்!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து

யாரால் சபிக்கப்பட்டவர்கள்.. பயணிகள்

நெடுந்தீவு முகிலன்
யாரால் சபிக்கப்பட்டவர்கள் இந்த பூக்கள்!
------------------------------------------------------!
ஈழத்து தமிழ் பெண்கள் - 36 வயதிலும்!
அடிசல்லியில் கொக்கான்!
...விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
...!
வடக்கு கிழக்கு விதவைகள்!
85 ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக!
தகவல்கள் தெரிவிக்கின்றன!
தொழில் இல்லையா ...? பெண்களை!
விபச்சாரம் செய்ய சொல்கிறார்கள்!
நம் நாட்டில் படித்த இராமர்களும் கூட ...!
ஆடுப்புளுக்கையை கூட்டியள்ளி!
தோட்டத்தில் பசளை இடுகிறாள்!
ஒரு பட்டதாரி பெண்!
இலங்கையின் கல்வியறிவு 96 வீதம்!
ஆகிவிட்டது - இதில்!
வேலைவாய்ப்பு எத்தனை வீதம்!
மகரந்தமணிகள் காற்றில் பறந்து!
கல்யாணம் செய்து கொள்கின்றன!
பூக்கள் கர்ப்பமாகின்றன - பாவிகளாகிவிட்டனர்!
முதிர்கன்னிகள்!
பேரீச்ச மரங்கள் கூட!
பாலை வனத்தில் பூத்து காய்த்து!
சிரித்துக்கொண்டிருக்கின்றன!
மலையக பெண்களின் வியர்வை துளிகளையும்!
பறித்து விடுகின்றன தேயிலை செடிகள்!
யூரோக்களையும்... ஸ்டெலிங் பவுன்களையும்....!
டொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி!
நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்!
முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே .....!
02.!
பயணிகள் கவனத்திற்கு - கவிதைத்தொகுதியில் இருந்து.....!
---------------------------------------------------------!
ஒற்றை கதவு!
பேரூந்து!
உருண்டுகொண்டிருந்தது!
எழுந்து நின்றவர்களுக்கு!
...மேற்தட்டு தலைக்கு!
அடிக்கிறது!
அரிசி மூட்டைகள்!
வாழைக்குலைகள்!
என்னைபெரல்கள்!
பால்மாப்பெட்டிகள்!
விளக்குமாறு தும்புத்தடிகள் என்று ...........!
எல்லா இருக்கைகளையும்!
இடம்பிடித்துவிட்டன!
புழுதி!
மேல் எழுந்து பறப்பதால்!
சாளரங்கள்!
அடைக்கப்பட்டிருந்தன!
அதனால்!
உள்ளே வியர்வை!
வெள்ளம் போட்டுக்கொண்டிருந்தது!
புழுக்கத்தில்!
குழந்தைகள் குமரிகள்!
முனகிக்கொண்டிருன்தனர்!
அதற்குள்ளும்!
ஒவ்வொருவரையும்!
துளாவி தட்டி தடவி!
கையை நீட்டி!
காசு கேட்கும்!
நடத்துனரின் நர்த்தனம்!
நல்லாவேயில்லை!
கிடங்குகளில் உள்விழுந்து!
பேரூந்து நிமிருகையில்!
முகம் தெரியாதவர்கள்!
முன் பின் தெரியாதவர்களுக்கே!
முத்தம் கொடுத்துக் கொண்டு!
நின்றார்கள்!
வெற்றிலை துப்புபவர்களுக்கும்!
புகைப்பிடிப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டதாகவே!
பின் இருக்கைகள்!
காட்சி அளித்தன!
!
வயிற்றில் குழந்தையோடு!
வந்த பெண்ணுக்கு!
இருக்கையாக மாற்றப்பட்டது!
சீமெந்து பைக்கற்றுக்கள் தான்!
என்ன தான் நாடகங்கள்!
நடந்து முடிந்தாலும்!
ரசிக்க கூடியதாக!
இருந்தது!
வரவிருக்கும்!
புதுத் திரைப்படங்களினது!
புதுப் புது பாடல்களை

அழகு

ச.மகிந்தினி
பச்சைப் புல் வெளி மீது !
பனித்தூறலும் !
இரண்டு இலையிடையே !
இரட்டை ரோஜாவும் !
பட்டுச் சேலையில் !
சமைந்த பெண்ணும் !
பசித்தவனுக்கு கறி சோறும் !
பண்பற்றவனுக்கு பணமும் !
அனாதைக்கு அன்பும் !
ஆதரிப்போருமே உண்மையான !
அழகு !
ச.மகிந்தினி !
***** !
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்

முதல் காயம்

மு. பழனியப்பன்
மு, பழனியப்பன்!
வேலைகளின்!
களைப்பில்!
எதை முன் செய்வது!
எதைப் பின் செய்வது!
என்று தெரியாமல்!
எப்படியோ எதையோ!
செய்து கொண்டிருக்கையில்!
ஊர்ந்து செல்லும் பொம்மை!
என் இருவயது மகள்!
எனக்கும் உதவி செய்யாமல்!
மனைவிக்கும் உதவி செய்யாமல்!
தனக்குத் தானே உதவி செய்யாமல்!
ஏதோ செய்து கொண்டிருந்தாள்!
பார்க்காத நேரம்!
செய்யத் தோணாத வேலைகளை!
அவள் செய்வாள்!
காரட் சீவிய!
பாதி வேலையில்!
அரிசி கொதிப்பை அடக்க!
மனைவி செல்ல!
மகள் சீவத் தொடங்கினாள்!
கையின் தோல்!
மெல்லச் சிதைபட்டு!
சிவப்பு ரத்தச் சுவர் தெரிந்தது!
அடுத்த நொடி!
வலியின் அழுகை!
ஓடி வந்து!
பார்த்து!
பல சொல்லி அவள்!
அழுகை அடங்கவில்லை!
அது!
அவளின் முதல் காயம்!
கைகளைக் காட்டி!
காட்டி!
அழுதழுது முகம் சிவந்து!
அழுகை வற்றிய நேரங்களில்!
அந்த காயத்தை தொட்டுத் தொட்டு!
வலியை மேலும் வலியதாக்கிக் கொண்டாள்!
என்ன செய்வது!
மனைவி பெரிய துணியெடுத்துச்!
சிறிய கட்டு!
போட்டாள்!
கட்டு உடனே!
நாள் முழுவதும் நடந்தாள்!
வலிக்க வேண்டும் என்று துணியைக் காயத்தை!
அழுத்தினாள்!
ஆனால் துணிப்பந்து வலி தரவில்லை!
மாறாக மென்மை தந்தது!
மேலும்¢ அழுத்தி மென்மையை மகள் பெற்றாள்!
அமைதி எங்களுக்கு!
ஆனால் நாள் முழுவதும்!
அவள் கை தூக்கி அவள் நடந்த காட்சி!
முதல் காயத்தின் முதல் வலி!
உணரப்பட்டது!
இன்னமும்!
அந்த விரலில் வலி உணர்கிறாள் மகள்!
!

!
-- !
M.Palaniappan

நெடுந்துயர் அகன்றேயோடும்

எம் . ஜெயராமசர்மா, அவுஸ்திரேலியா
வான்முகில் வளாது பெய்கவென!
வாயார வாழ்த்துப் பாடி!
வையத்தில் விழாக்கள் தோறும்!
மனமாரப் பாடி நிற்போம்!
வாழ்த்தினைக் கேட்டு விட்டு!
வானுறை தேவர் எல்லாம்!
வையகம் வாழ்க எண்ணி!
மாமழை பொழியச் செய்வர்!
வரண்டு நிற்கும் பூமியெல்லாம்!
வான் மழையக் கண்டுவிட்டால்!
மகிழ்வு கொண்டு வானோக்கி!
மனதார நன்றி சொல்லும்!
வயல்நிறையும் குளம் நிறையும்!
வயலுழுவார் மனம் மகிழும்!
தினமும் மழை பெய்கவென!
தீர்மானம் எடுத்தும் நிற்பார்!
அகமகிழ வைக்கும் மழை!
ஆபத்தைத் தந்த திப்போ!
அனைவருமே மழை பார்த்து!
அலமந்தே நின்று விட்டார்!
பார்க்கு இடம் எல்லாம்!
பாய்ந்தோடும் வெள்ள மதால்!
பரி தவித்து நிற்கின்றார்!
பல இடத்தில் மக்களெலாம்!
நீர் பெருகி நிற்பதனால்!
நிவாரணப் பணிகள் எல்லாம்!
யார் செய்வார் எனவேங்கி!
நாளும் அவர் அழுகின்றார்!
மேடைகளில் ஏறி நின்று!
வாய் கிழியப் பேசியவர்கள்!
அறிக்கைகளை விட்டு விட்டு!
அவர் பாட்டில் இருக்கின்றார்!
ஆளுகின்ற கட்சி தனை!
அனுதினமும் திட்டி நிற்கும்!
எதிர்க் கட்சிக் காரரெலாம்!
இதை வைத்தே திட்டுகின்றார்!
எதிர்க் கட்சித் திட்டினுக்கு!
ஏற்ற பதில் சொல்லவதிலே!
இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்!
ஏறி நிற்கும் அரியணையார்!
வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்!
பேதங்கள் யாதுமின்றி பேயாட்டும் போடுகின்ற!
சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது!
வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை !!
வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்!
வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்!
மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து!
மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார் !!
அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்!
அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்!
அவர்நிலையை பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்!
அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார் !!
வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்!
வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்!
உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்!
வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள் !!
மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்!
மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்!
மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்!
மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார் !!
பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்!
நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு வந்திடுமா!
அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்!
அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே !!
குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்!
நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்!
அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்!
நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும்