சொல்லடி அரசி யாரென்று.. மழை அரசி - வெளிவாசல்பாலன்

Photo by FLY:D on Unsplash

1.சொல்லடி அரசி யாரென்று!
!
மழைப்பொழுது நீ!
பனிவிழும் காலை ஒளி நீ!
காற்றிலாடித் துடிக்கின்ற கொடி நீ!
வர்ணங்கள் நீ!
வானவில்லின் கோலம் நீ!
சிறகடிக்கும் வண்ணத்துப் புச்சி நீ!
தீம் தரிகிட தித்தோம் தித்தோம்!
தா தெய் தரிகிட தித்தோம் நீ!
ஆடுகின்ற ஊஞ்சல் நீ!
நதி நீ!
யதி நீ!
இளவேனிலில் துளிர்க்கின்ற வசந்தம் நீ!
மலர்களில் நிறைந்திருக்கும் வாசனை நீ!
சரிகமபதநிச!
நிசதபமகரிச நீ!
வானம் நீ!
குயிலின் கானம் நீ!
சாகசங்கள் நீ!
சுவை ஊறித் ததும்பும் கனி நீ!
பரவசம் நீ!
என்றபோதும்!
சொல்லடி அரசி நீ யாரென்று!
உன் சுடர் மிகு ஒளிச் சொற்களால்!
!
2.மழை அரசி!
!
ஆடலி ஆடலி என்றேன்!
கோபுரத்தில் ஒலித்த குரல்!
திசைகளில் பெயர்ந்து காற்றாயிற்று.!
வானத்தில் மிஞ்சிய கிளையில்!
நடனமிடும் சிட்டைக் காணுந்தோறும்!
கண்கள் பனிக்கிறது ,!
நீ வருகிறாய் நினைவாய்.!
ஆடலி என்றேன்!
புக்கள் மலர்ந்தன!
நிறங்களாய் ஆனதிவ் வுலகம்!
நெய்த கனவில்!
நீ கரையும் ஓவியமாய் ...!
ஆடலி ஆடலி என்றழைக்குமென் குரல்!
தாகம் பெயர்க்கும் கோடையாயிற்றா ?!
ஆடலி ஆடலி!
நீ மழையல்லவா!
நடனமிடும் மழையல்லவா!
ஆயினுமேனிந்தக் கோடை இன்னும் ?
வெளிவாசல்பாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.