ஏழுமுறை எம்தலைவனை!
ஏற்கனவே கொன்ற!
எமகாதகர்களே!...!
எம்மின அடையாளம்!
எம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது!...!
விடுதலை போராட்டத்துக்கு!
விடிவு ஒன்றே தீர்வு!...!
தமிழர்களின் தாகத்திற்கு!
தமிழீழம் மட்டுமே முடிவு!...!
வீழ்ச்சி எமக்கு புதிதல்ல!
வீழ்வதும் மீண்டு எழுவதும்!
விடுதலை புலிகளின் இயல்பு!...!
இழந்த எம் தாய் மண்ணை மீட்டெடுக்க!
இறந்ததாய் நீவிர் சொல்லும்!
தமிழீழ நாயகன்!
மீண்டு(ம்) வருவான்!... !

வீ.இளவழுதி