தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நான் நானாகவே.... நீ?

ஆ.மணவழகன்
நீயா?!
நீயாகத்தான் இருக்குமோ?!
ஒருவேளை!
நீ நீயில்லையோ!!
நீ இல்லையென்றால் அப்போ நீ யார்?!
நெடுந்தொகையாய்!
நெடுநேரம் இல்லை!!
குறுந்தொகையாய்!
கொஞ்சவுமில்லை!!
முல்லைப் பாட்டாய்!
முகம் மலரவுமில்லை!!
குறளாய்.. குறைவில் விளக்கமாய்..!
கோடிட்டுக் காட்டவும் இல்லை!!
'ஆத்திச்சூடியாய்' ஒற்றை வரியில்!
நான்மறுபடி பிறக்க!
நீ ஒரு முறை பூத்தாய்!!
அன்றும் இல்லை!!
அன்றுமுதல் என்றும் இல்லை!!
என் விழிகளுக்கும் மனதிற்குமான உறக்கம்!!
நீயே தானா?!
நீதான் என்றால்..!
நிமிடத்தில் உணர்வாயே!!
நான் நான்தான் என்பதை!!
வருடங்கள் பலவற்றை வாங்கிக்கொண்டது!!
வயிற்றுக்காக நான் வந்ததும்...!
வாழ்க்கைக்காக நீ சென்றதும்....!
இன்றும் கூட என் நினைவில் - என்னைப்!
புரட்டிப்போட்ட உன் முதல் புன்னகை!!
நீதான் என்றால் ...!
நீ நீயாகத்தான் இருக்கிறாயா?!
ஆம்! ஆம்!!
நீ! நீயேதான்!!
தூவானக் குளியல் முடித்த!
பறவையின் சிலிர்ப்பாய்....!
அதே படபடப்பு!
உன் கண்களில்...!!
**********!
ஆ. மணவழகன்

உடையாத கண்ணாடியில் உலகிற்கு

வித்யாசாகர்
உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!!
-----------------------------------------------------------!
நாட்கள் தொலைத்திடாத!
அந்த நினைவுகளில்!
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;!
உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய!
முதல் பொழுது முதல் தருணம் -!
உடையாத கண்ணாடியின் முகம் போல!
பளிச்சென இருக்கிறது உள்ளே;!
ஓடிவந்து நீ!
சட்டென மடியில் அமர்ந்த கணம்!
என்னை துளைத்து துளைத்து பார்த்த!
இருவிழிகள்,!
எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என!
எல்லாமே உன்னை எனக்குள் -!
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;!
எனக்காக இல்லையென்றாலும்!
உனக்காகவேனும் வந்து -!
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்!
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து -!
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்!
வைத்திருக்கிறேன்;!
பெரிதாக அதையெல்லாம் எண்ணி!
கதையெழுதும் காதலெல்லாம்!
அல்ல; நம் காதல்;!
காதலென்ற வார்த்தை கூட நம்!
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,!
அதையெல்லாம் கடந்து!
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.!
திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்!
தவறிப் போட்டுவிட்ட - கல் போல!
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு!
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.!
சொல்லியிருந்தால் மட்டும் உலகம்!
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ!
தெரியாது - ஆனால் -!
காதலென்னும் அவசியமோ!
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ!
அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட!
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;!
அப்படி -!
சேருமிடமே தெரியாத!
வானமும் பூமியும் போல்!
எங்கோ ஒரு தூரத்தில்!
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;!
நானென்றால் நீ ஓடிவருவதும்!
நீயென்றால் நான் காத்திருப்பதும்!
எச்சில் பாராமல் -!
தொடுதலுக்கு கூசாமல் -!
ஆண் பெண் பிரிக்காமல் -!
எந்த வரையறையுமின்றி -!
உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும்!
நெருங்கியிருந்த உணர்வு!
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???!
தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட!
திராணியின்றி நகைக்கும்!
உலகம் தானே இது;!
அட, உலகமென்ன உலகம்;!
உலகத்தை தூக்கி வீசிவிட்டு!
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள!
தயாரில்லை என்பதற்கான காரணத்தை!
காலம் மட்டுமே ஒருவேளை!
அறிந்திருக்கக்கூடும்;!
எப்படியோ; யார்மீதும்!
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்!
இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே!
உனக்கும் எனக்கும் மட்டும்;!
தூரநின்று கண்சிமிட்டும்!
அந்த குழந்தையின் சிரிப்புப்போல!
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்!
நினைவுகளில் தான்!
கட்டிவைத்திருக்கிறேன் என்னை -!
வாழ்விற்குமாய்; இப்போதும்!!!
இப்படியே கடந்து கடந்து!
ஓர்நாளில் -!
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து!
நான் கீழே விழுகையில் -!
ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது!
நீ வந்து நிற்கையில் -!
என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்!
நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு!
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்

எங்கள் தேசம் இந்திய தேசம்

நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன் -- !
(NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' ) !
--பல்லவி-- !
எங்கள் தேசம் இந்திய தேசம் !
வாழ்க வாழ்க வாழ்கவே! !
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் !
எல்லாரும் சகோதரர்கள்! !
--சரணங்கள்-- !
வேறு வேறு வண்ணப் பூக்கள் !
சேர்ந்த வாச மாலை நாங்கள்! !
வண்ணம் வேறு வேறென் றாலும் !
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! !
--1(எங்கள் தேசம்... !
சிந்து கங்கை பிரம்ம புத்ரா !
கிருஷ்ணா காவேரி !
சென்று சேரும் கடலில் என்றும் !
நீரின் தன்மை ஒன்றுதான்! !
--2(எங்கள் தேசம்... !
பேசும் மொழியும் வாழும் இடமும் !
வேறு வேறு ஆனால் என்ன? !
பாச உணர்வும் பண்பும் அன்பும் !
தேசம் முழுதும் ஒன்றுதான்! !
--3(எங்கள் தேசம்... !
இமயத் தலையில் பனிப்பூ மேகம் !
குமரி அலையில் கொலுசுகள் நாதம் !
குஜரத் வங்கத் தோளில் மோதும் !
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! !
--4(எங்கள் தேசம்... !
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் புதிய மரபுகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல் !
போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது) !
------------------------------------- !
!
வறண்டது காவிரி மட்டுமா? !
- நா.முத்து நிலவன். !
வறண்டது காவிரி மட்டுமா? - மக்கள் !
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! -அட !
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1 !
எங்கெங்கு காணினும் வழ்ச்சியா! - அதில் !
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா! !
அங்கங்கும் 'ஒளிர்கிற' காட்சியா! -அவை !
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2 !
அறிவியல் வளர்ந்ததே போதுமா? - அவை !
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா? !
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? - ஒரு !
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3 !
‘பாவேந்தன் பாரதி தாச! - உன் !
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல !
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில் !
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4 !
‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! - அறிவு !
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்! !
விலைபேசி வாங்கினோம் வம்பை - உள்ள !
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5 !
கல்வியில் லாததோர் பெண்ணை - நீ !
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை !
புல்விளை யாததோர் புதராய் - நாங்கள் !
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6 !
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! - 'இந்த !
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக' என்றார், !
கலகமே நடத்திய போதும் -அதைக் !
'காவல் பணி'யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7 !
வறண்டது காவிரி மட்டுமா? - இல்லை !
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! - இதை !
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்

அறியாத வயது...ஊடலுக்குப் பின்

ஜெ.நம்பிராஜன்
அறியாத வயது!
பள்ளி செல்லும் வழியில்!
பழுதடைந்து நின்றது பேருந்து!
வயல்வெளிச் சாலையில்!
இறங்கி நின்ற மழலைகள்!
பள்ளியை மறந்து பரவசமாயினர்!
குயில்களின் கூவலோடு சேர்ந்தது!
குழந்தைகள் குரல்!
குழந்தைப் பருவம் தொலைத்த!
நடுத்தர வயது ஆசிரியை!
எரிச்சலோடு சொன்னாள்!
டோண்ட் டாக். !
-ஜெ.நம்பிராஜன்!
ஊடலுக்குப் பின்...!
அழுது கொண்டிருந்தாய் நீ!
அமர்ந்திருந்தேன் நான்!
கொஞ்சகொஞ்சமாய்!
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட!
கண்ணீரில் 'நான்' கரைந்தோட!
என்னைத் தொலைத்த நான்!
உன்னை மறந்த நீ என!
நாமானோம் நாம்.!
-ஜெ.நம்பிராஜன்

என் நண்பனே!.. சொல்லடி என்.. என்ன‌வ‌ளு

சிபி பாபு
என் நண்பனே!.. சொல்லடி என் செல்லமே..என்ன‌வ‌ளுக்காக‌...!
01.!
என் நண்பனே!!
---------------------!
உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே!
இடுக்கண் களைவதாம் நட்பு.!
வள்ளுவர்.!
என் நண்பனே!!
உன் துயில்தனை!
எழுதும் இந்தப் பேனாவின்!
உயிர்தனைக் குடிக்கும்!
இக்காகிதம் போல்!
என் உயிர்தனைக்!
குடிப்பதுன் துயில்தானோ?.!
செடியினின்றுப் பூத்திருக்கும்!
மலர்கள்தனை கொய்யாதே!
செடியின் கவலை !
உனக்கு புரியாது என்றாய்!,!
விளையாட்டாய் நானும்!
அறியாமலேயே!
இருந்துவிட்டேன்!!
இறைவன்!!
அவனை நினை-நமக்கு !
அவன் இருக்கின்றான் என்றாய்!!
உன்னை ஏளனமாய்ப் பார்த்து!
நீயெல்லாம் எனக்கு நண்பன்.!
என்று சொல்லிச்சென்றேன்!.!
கார்கிலில் எவனோ!
இறந்ததற்காக ஒரு நிமிடம்!
மெளனம் செலுத்தச் சொன்னாய்!!
எவனோ இறந்ததற்கு!
நாம் ஏன் செய்யவேண்டும்?!
என்று விளையாட்டாய்ச் சொன்னேன்!!
யார் மீதும் !
அதிகமாய் அன்பு கொள்ளாதே!
அதுவே உன்னை !
கொன்று விடும் என்றாய்!!
ஒன்றும் புரியாதவனாய்!
இருந்து விட்டேன்!!
என் இனிய !
சினேகிதனே...!
இன்றுதான் புரிந்துபோனது!
மலர்தனை இழந்த!
செடியின் வலி.!
கார்கிலில் செந்நீர் சிந்தியவன்!
தாயின் கண்ணிர் சிந்திய!
இதயத்தின் வலி.!
யார் மீதும் அதிகமாய்!
அன்பு கொள்ளாதே!
கொண்டுவிட்டேனே!
உன் மீது!.!
விளையாட்டாய் இருந்ததினால்!
உன்னை இழந்தேன்!!
இனி...!
உன் விதையாய்!
நான் வளரப்போகிறேன்!!
உன்னுடன்!
என் இதயத்தைத்தான்!
எடுத்து சென்றிருக்கிறாய்!!
உன் இதயம்!
பத்திரமாய் என்னிடம்...!
விளையாட்டாய் இருந்த!
என் இதயம்!
உன்னுடனே இறந்து-உன்!
இதயம்!
என்னுடன் இருப்பது போதுமடா!!
இறைவன் இறைவன்!
என்றாய்!!
இதோ என்னில் இருக்கும்!
உன் இதயம்தானா அது?.!
!
02.!
சொல்லடி என் செல்லமே...!
------------------------------------!
உன் கரங்கள் பற்றி!
என் கன்னங்களில் வைத்தும்!!
சில நேரங்களில்!
உன்கரங்கள்-என் !
கன்னங்களை பதம்பார்த்தும்!!
உன் மடிதனில்!
என் துயில்தனையும்!!
உன் தோல்தனில்!
என் கைப்போட்டு!
ஆல்பம் பார்த்தநாட்களும்!!
உன் பிஞ்சுப் பாதங்களை!
என் பாதங்கள் மீது வைத்து!
என் இருகரம் பற்றி!
நன்றாய் நான் நடக்க!
நடுவே உன்னிடம்!!!!
விழுந்துடப்போற பார்த்துடா,!
என்ற நாட்களும்!!
என்றோ சில சமயம்!
உன் கரங்கள் எனக்கு!
உணவூட்டிய நாட்களும்!!
உன்னிடம் பேசாததற்காய்!
நீ அழுத நாட்களும்!!
பிரியும்போது எப்படா வருவ,!
என்ற உன் வார்த்தையும்!!
உனை இழந்த எனக்கு!
மீண்டும் ஒருமுறை வருமா?...!
சொல்லடி என் செல்லமே...!
!
03.!
என்ன‌வ‌ளுக்காக‌...!
-----------------------!
என் !
இத‌ய‌மெனும் கோவிலில்!!
ஏற்றி வைத்த‌ தீப‌மாய்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என்!
க‌ண்க‌ளெனும் நில‌த்தில்!!
நீரோடையாய் க‌ண்ணீர்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என் !
முக‌மெனும் வானில்!!
இன்றேனோ அமாவாசை!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என்!
சுவாச‌மெனும் பூத‌த்தில்!!
இன்றேனோ புய‌ல்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
தென்ற‌ல‌லைக‌ள்!
எனைத்தாண்டிச் செல்லுகையில்!!
என் !
இத‌ய‌த்தை வ‌ருடிச்செல்லும்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்

தண்டனையின் பிடியில்

இமாம்.கவுஸ் மொய்தீன்
காலம் மாறிவிட்டது!!
நீதிமன்றங்களிலும்!
பெரும்!
மாற்றம்!!
நீதி -!
நிதியின்பக்கம்!!
நியாயம் -!
விலையின் பக்கம்!!
அநியாயங்களின்!
கைகளில் நியாயம்!!
இப்போதெல்லாம்!
கட்டப் பஞ்சாயத்துக்கள்!
வெளியில் நடப்பதில்லை!!
கண்கள்!
கட்டப்பட்ட நிலையில்!
நீதி தேவதை!!
வெற்றிக் களிப்பில்!
சீருடை அணிந்தோர்!!
சட்டம் தன் கடமையில்!
தவறுவதில்லை!!
தண்டனையின்!
பிடியில் தான்!
தர்மம்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

பல்லிகள் இல்லாச் சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்!

எஸ்.நளீம்
வெளியில் முகம் காட்டி!
செடிகள் படர்ந்தன!
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்!
காற்றிறுகிய சதுர அறைக்குள் என்ன இருந்தன!
அந்த கதவு ஜன்னலின் துவார வழியால்!
கனிவு கசிந்தது!
இப்போ!
வெளிச் சுவர்களெல்லாம்!
கொடிகளை விளைத்தது!
கொடிகளெல்லாம் பூக்களை விதைத்தது!
பூக்களெல்லாம்!
வண்ணத்துப் பூச்சிகளைப் பூத்தது!
பல்லிகள் இல்லாத சுவரில் மோதி மோதி!
மலர்களைப் புணர்ந்து காற்று மணந்தது!
தட்டத் தட்டத் திறக்காத அறை திறந்தது!
உள்ளே!
பேனா ஊன்றிய தாளுடன்!
ஒரு கவிதை இருந்தது!
நம் சுதந்திரத்தைப் பாடியபடி

நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி

ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல்!
தலையால் நடந்து கொண்டிருக்கும்!
ஒரு வினோத பட்சியின் பின்னே!
துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன்!
கைகால் முளைத்த மரங்கள்!
ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை!
பூமியில் வரைந்து செல்கிறது!
எனக்கென தென்பட்ட திசையெங்கும்!
வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்!
ஒன்றின் மேல் மற்றொன்றாகி!
சமாதிகளில் புதைக்கப்பட்ட!
உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்!
அலையடித்து கிளம்பும் பரவெளியில்!
மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து!
அறுபட்ட காதுகள் தொங்க!
விழிகளற்ற கொடிமர வேலிகள்!
உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்!
துருப்பிடித்து கருகி சாம்பலாகின.!
பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற !
தலைகீழ் பட்சியின் நாவுகளில்!
பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.!
நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த!
ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்!
நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.!
போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்!
இறக்கையின் திமிறடக்கி!
பட்சியை இறுகி கட்டியணைத்தபோது!
நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்

எழுதப்படுகின்ற புத்தகம்

வல்வை சுஜேன்
மானிட ஜீவனின் கூடு !
எழுதப் படுகின்ற ஒரு புத்தகம்!
ஒவ்வொரு கூட்டினதும் !
முகப்பு அட்டையினை!
தாய் தந்தையர் வரைகின்றனர் !
மர்ம நாவலோ மானிடக் காதலோ!
புறட்ச்சிப் புயலோ புதுக் கவியோ!
அவரவர் எழுதித் தந்த !
அத்தியாயங்களே !
தத்தித் தவழும் காலத்தில் !
முகவுரை எழுதும் மானிடன் !
பருவ காலத்தின் வர்ண மாயைக்குள்!
தான்னொரு பட்டாம் பூச்சி என்பதை!
மறந்து போவதுண்டு!
தேனிலும் இனியது காதல் என்பதும்!
தேய்ந்திட்ட உலா வாழ்வில்!
சாதல் என்பதும் !
இவன் கண்ட தத்துவம் !
அவரவர் எழுதும் பக்கங்களில்!
வாழ்க்கை புத்தகம் வரையப்படுகின்றன!
பிறப்போ இறப்போ !
இவன் எழுதுவதில்லை!
இறைவன் ஒருவனே !
இறுதி உரை எழுதி!
முற்றுப் புள்ளி வைக்கின்றான்

தோல்வியில் வெற்றி(ப்) படி

நாகினி
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
காதல் விழி பேசி!
காத்திருந்த கனவுகளைக்!
கானலாக்கும் கடமை!
காலத்தின் கட்டாயமாகிட!
காத்திருப்பு சிதறல்!
காயங்கள் கரைய எழுச்சிநடை பழக்கி!
காலக்கரங்கள் நீட்டும் தன்னம்பிக்கை!
காக்கும் வெற்றி(ப்) படி சுகமே..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
ஓடி வந்தென் தோள் சேர்ந்து!
மங்கல நாண் கழுத்தணியாக்கிட!
பெற்றிருப்பேன் ஒன்றிரண்டு மழலைகள்..!
தேடி வராமல் எறியப்பட்டு!
எரிந்த காதல் புண்ணுக்கு மருந்தென!
தொண்டுள்ளம் துணையாகிட ஈன்றேன்!
பல்லாயிரம் மலர்களின் அன்னையெனும்!
பாக்கிய மகுடம்..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
தோல்வி நிலையென கருதாஉள்ளம்!
தன்னம்பிக்கை சிறகு முளைக்க!
மனவேதனை மை நிரப்பி!
தோல்விப் பாடங்களை வரிகளாக்கி!
கவிதை வாசம் தெளித்து ஈட்டுவேன்!
திறன்மிகு படைப்பாளியாய்!
வாழ்த்து வெகுமதி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
மனம் நோக தோல்வி வடு தந்து!
மணமாலை சூடும் மறுப்புள்ளம்!
என்னுள் முகிழ்க்கக்!
காரணியாம் உனையேச் சேரும்!
மணமேடை ஏற அருகதையற்ற!
முதிர் (கன்னி/காளை) இவரென!
சமூகம் எள்ளிநகையாடித் தூற்றும்!
பாவச் சவுக்கடி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?