ஆம் ! !
என் தோட்டத்து மண்ணில்!
மீண்டும் பசுமை படர்கின்றது!
கடுங்குளிரைத் தாங்காது!
மண்ணில் தம்மை புதைத்து!
மறைந்திருந்த செடிகள்!
மரணிக்கவில்லை நாம் பூமியில்!
மறைந்து தான் போயிருந்தோம் என்றே!
பச்சைத் தளிர்களின் மூலம் தமது இருப்பை!
பறைசாற்றிக் கொண்டே புன்னகைக்கின்றன!
இளவேனிற் காலம் தன்!
இளமையை காட்சிக்கு வைக்க!
இயற்கையின் செல்வங்களின் துணையோடு!
இயம்புகின்ற வாழ்க்கைத் தத்துவம்!
இதயத்தின் ஓரங்களில் கொஞ்சம்!
ஈரத்தைத் தடவுகின்றன.!
காலத்தின் மாற்றத்தை!
கண்முன்னே நடத்தி எமக்கு!
கட்டாயப் பாடம் போதிக்கும்!
கனிவான தோட்டத்துச் செடிகள்!
அவைகூறும் செய்திகள்!
அவல வழ்க்கையில் சுழன்றாடும் எம்!
அகலமான செவிகளில் விழுகின்றனவா ?.......!
இளவேனில் துணையோடு வரும்!
இளங்காற்றின் குளிர்மையில்!
இதயங்களை மகிழ்விக்கும் அந்த!
வசந்தத்தின் வரவை எண்ணி!
வந்திருக்கும் அந்த பச்சிலைக்குருத்துகள்!
விளையாடும் வேளை நோக்கி!
விழிபூத்துக் காத்திருக்கின்றன!
குளிர்கால வாடலில் காய்ந்திருந்த!
குளிர்ந்த தோட்டத்து மண்ணில்!
குதிர்த்திருக்கும் அச்செடிகளின் இளம்!
குருத்து இலைகளினூடாக பாய்ந்து!
புதைத்து வந்திருக்கும் விதையைத் தேடி!
புதிராக என்னைப் பார்த்தபடி!
மண்ணைக் கிளறும் அந்த அணிற்பிள்ளை!
அணிலின் விழிகள் கூறும் கதைகள்!
அவற்றிற்கு பேசும் சக்தி மட்டும்!
இருந்து விட்டால் ......!
பேராசை கொண்ட மனிதர் எமை!
பெயர்த்துவிடும் தன் வினாக்களினாலே!
இயற்கை அன்னையின் மடியில்!
இயல்பாகத் தவழும் அனைத்துக்கும்!
தார்மீகக் கடமைகள் உண்டு !
தயங்காமல் அவைதனை நிறைவேற்றும்!
அற்புதக் காட்சிகளைக் கண்டும்...!
பாவம் மனிதர் இவர்....!
முணுமுணுத்தபடி எப்போதும் பரபரப்பாய்!
முட்டாள்கள் போலே தமக்கு வாழ்வளிக்கும்!
இயற்கைதனை கற்பழித்துக் கொண்டே!
எதிர்காலம் தேடுகின்றார்.....!
ஓ .....!
அவர் இருட்டினில் இருந்து கொண்டே!
விளக்கை அணைத்து விட்டு!
பாதை தெரியவில்லை என்று!
புலம்பும் வர்க்கம் அன்றோ! !
-- சக்தி சக்திதாசன
சத்தி சக்திதாசன்