வெண்முகில்கள் தரையிறங்கி!
செஞ்சோலையில் உலவின!
சின்னக்கரம் பற்றிச் சிரித்தன!
அன்புமொழி பேசி அரவணைத்தன!
அகலக்கண் விரித்து அவலமுணர்ந்தன!
இராமனுக்குதவிடும் அணிற்குஞ்சுகளாகின!
இன்று!
குண்டுக்கிரையாகின!
எண்ண எண்ணத் துடிக்குது மனசு!
எப்படியாயிற்று?!
உணர்வுகள் உறைந்து!
மனசுகள் சிவந்து கிடக்கின்றோம்!
மிலேச்ச மிருகக்குதறல்!
எதிர்கொள்ளப் புறப்பட்ட!
விளக்கேந்திய பெருமாட்டிகள் நீங்கள்!
அதிகாலையில்!
பேய்க்கூத்து உங்களில் அரங்கேறின!
எத்தனை உறவுகளின் !
சொத்துக்கள் நீங்கள்!
பேச்சடங்கி மூச்சடங்கி!
அழிந்தது நீங்களல்ல அம்ம!!
பெண்ணினம் அழிந்தது!
தமிழினம் அழிந்தது!
மானிடம் அழிந்தது!
மகிழ்ச்சி அழிந்தது!
அவன் கௌரவம் அழிந்தது!
தலை கவிழ்ந்து நிற்கின்றோம்!
தோற்றோம் என்றல்ல!
உம் ஆத்மசாந்திக்காய்!
!
--கனிகை
கனிகை