தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கண்டுகொண்டேனடி

ந.பரணீதரன்
பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே !
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ !
ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு !
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ !
மனதின் உள்ளே மையல்கொண்டு !
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய் !
உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க !
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன் !
உன் குரலோசைக் குயில் கீதத்தில் !
வார்த்தைகளை மிழுங்கும் !
அந்த நிமிடத்தில் !
என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான !
உன் சிம்பொனிச்சிரிப்பில் !
என் கவிதைகளை நிராகரித்த உன் !
மனதின் பயப்பிராந்தில் !
நான் கண்டுகொண்டேனடி. . !
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை !
என்தன் நினைவுகளால் !
உடையும் உன் பிஞ்சு இதயத்தை !
நானே அறிந்தேனடி. . !
புன்னகை சிந்தும் உன் !
பூவிதழ்களின் மேலே !
உறக்கம் மறந்த உன் !
விழிப்பாவையினுள்ளே !
பூமி கீறும் உன் !
பிஞ்சு விரல்களினுள்ளே !
நான் கண்டேனடி . . !
என்தன் காதல் ஒளிந்திருப்பதை !
வெறுத்த உன் உள்ளம் !
என்னை விரும்பி அழைப்பதில் !
சிறுத்த உன் இடை அடிக்கடி !
சிலிர்த்துக்கொள்வதில் !
கருத்த கூந்தல் எப்போதும் !
சோர்ந்து வீழ்வதில் !
நான் கண்டேனடி . !
கசங்கும் என் இதயத்தை

பூவையின் எண்ணங்கள்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
பொறித்து விட்டேன் மனதில் !
பொன்மகள் பெயரை !
போகாதம்மா நெஞ்சை விட்டு !
பூங்கொடி உன் நினைவுகள் !
காற்றாக வந்தாயோ என் !
கவிதையில் கலந்தாயோ !
நேற்றாக இருந்தாயே !
நினைவாக நிறைந்தாயோ !
மாற்றாத கோலத்தில் !
மங்கையுன் புன்னகை !
மணிக்கணக்கில் பேசினாலும் !
முடியாத பேச்சுக்கள் !
தோன்றாது புவியிலிது போல !
தோற்காத காதல் !
தோகைமயிலே ஒன்றுசொல்வேன் !
துணை இனியெனக்கு நீதானே !
அன்புடன் !
சக்தி

பொம்மையாதல்... பூக்களில்

நிலாரசிகன்
1.பொம்மையாதல்...!
உன் ஆதிக்கத்தை!
முழுமையாக!
தாங்கிக்கொண்டு!
நிழலாக தொடர்கிறது!
என் நிஜங்கள்...!
மிகச்சிறந்த ஓவியத்தை!
தனதாக்கிவிட்ட பெருமையில்!
வலம் வரும் உன் காலடியில்!
சிதைந்த ஓவியமாய்!
நசுங்குகிறது!
என் விருப்பங்கள்..!
என் பதில் எதிர்பாராத!
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்!
உன் முன்னால் ஒரு!
பொம்மையாக தினம்தினம்!
உணர்வற்றுப்போகிறது!
என் பெண்மை.!
!
2.பூக்களில் உறங்கும் மெளனங்கள்...!
உன்னிடம் மென்மை!
எதிர்பார்த்து ஏமாந்து!
முள்ளில் விழுந்த பூவென!
நான் துடிக்கும் தருணங்களில்!
தட்டானின் சிறகுகளை!
பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்!
எவ்வித குற்றவுணர்வுமின்றி!
எனை ஆட்கொள்கிறாய் நீ.!
ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்!
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்!
ஊமையாகிறது என் பெண்மை.!
ஆயுதமற்ற போர்க்களத்தின்!
தினம் தினம் பூக்கள் சுமந்து!
வந்து சருகாகித் திரும்புகிறேன்.!
கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க!
இயலாமல் விடியலுக்காக!
காயங்களுடன் காத்திருக்கிறேன்!
பூக்களில் உறங்கும் மெளனமாக.!
-நிலாரசிகன்.!
!
-- !
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்

தேவதை

ஆஷிகா கொழும்பு
மார்கழி பனியில்!
மண்டப படியில்!
மணிபுறாக்களோடு!
மேற்கு நோக்கி !
காத்திருக்கிறாள் !
இவள்...!
கிராமத்து தேவதை...!
சில்லிடும் பனி !
சிலிர்கவில்லை!
உன் நினைவின் !
சிலிர்ப்பு இவளுக்கு....!
கிட்டது !
குயிலோசை !
தூரத்து ரயிலோசை!
இவள் செவிகளுக்கு!
மட்டும்....!
மண்சாலையில்!
செல்லும் !
மாட்டு வண்டியின் !
ஓட்டம்!
நீ போட்ட !
தாளம் இந்த!
மங்கைக்கு....!
சிற்றோடையில் !
துள்ளிடும் மீன்கள்!
அல்ல - அவை!
சிற்றிடையாள்!
சிந்திடும் உன்!
சிந்தனைகள்....!
பின்னி முடிந்த!
கூந்தல் நுனியை!
முறுக்கியிழுத்து!
சிரிக்கிறாள்!
சிங்காரி...!
மீசைக்காரன் !
ஞாபகத்தில்...!
அணில் கடித்த !
கொய்யாப்பழம்!
தானுண்டு!
பஞ்சவர்ண தாவணி!
தென்றலில் படபடக்க!
மனம் பகிர்ந்தவன்!
வருகையை எண்ணி !
தவிக்கிறாள்!
பைங்கிளி....!
நெற்றிப் பொட்டு !
கரைய ....!
பொழுது கரையாதோ!
என் சலிக்கிறாள் !
சந்தன மேனி !
சிலையாள்....!
வெள்ளைமனம் !
கொண்டவள் !
வைத்த கண்!
வாங்காது!
தரிசனத்துக்காய் !
ஏங்குகிறாள் !
குழந்தையாக....!
அந்தி மல்லி !
அவிழும் முன்!
அன்பு சொல்ல !
வருவானென!
தவமிருக்கிறாள் !
கிராமத்து தேவதை..!
இல்லை இல்லை!
இவள் உன்னுடைய தேவதை

உன் கருப்பை கனத்தபோது

ரூஹூல் ரஸ்மி, சிலாபம்
கொஞ்சம் விஞ்சி உண்டேன்!
என்னுணவைக்கூட என்னால்!
சுமந்து செல்ல முடியல….!
நான்குமணி நேரம் என்னுணவை!
இரைப்பையே சுமக்காத போது!
நாற்பது வாரங்கள் எனையுன்!
கருப்பை எப்படி சுமந்ததோ?!
ஒருவேளை உணவுகூட!
உன் உடம்பில் ஒட்டல!
வாந்தியாய் வெளித்தள்ளவே!
அட்டையாய் ஒட்டிநின்றேன்!
பகல் கனவாய் உன்!
உறக்கம் இருக்க!
இராப்பகலாய் நான்!
உறங்கிக் கழித்தேன்.!
உன் உயிர் குடித்தாவது!
நான் பிறக்கத் துடிப்பதை!
என் பிள்ளை உதைக்கிறான் என்று!
என் அப்பனுக்கு நீகாட்டி!
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!!
கருச்சிறையில் விடுதலைபெற!
உன்னையல்லவா நான்!
பணயக் கைதியாக்கினேன்!!
வேதனையின்போது காலிரண்டும்!
பின்னிக் கொள்ளும் நியதிக்கு!
விலக்களித்து நீ மட்டும் எனைப்!
புறந்தள்ளும் வேதனையிலும்!
விலக்கிவைத்தாய் காலிரண்டை!
ஒரு நொடி உனக்குப் போதும்!
சப்பையாக்கி எனைக் கொல்ல!
என்விடயத்தில் மட்டும் உன்!
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?!
பார்க்க முடியாத குருடனாய்!
கேட்க முடியாத செவிடனாய்!
பேச முடியாத ஊமையாய்!
நடக்க முடியாத முடவனாய்!
மொத்த ஊணத்தின் குத்தகைக்!
காரனாய் எனை நீ கண்டபோதும்!
வாரியணைத்து முத்தமிட்டு!
மாரிழந்து பாலூட்டி மகிழ!
எப்படி உன்னால் முடிந்தது?!
என்னிலையில் நீ இருந்திருந்தால்!
எட்டியுதைக்கத் தோனாதா?!
என்விடயத்தில் மட்டும் உன்!
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?!
மூத்திரத்தை முகத்தில் கழித்தால்!
ஆத்திரம் வருவது அறிவு!
என் மூத்திரத்தை மட்டும்!
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்!
என்விடயத்தில் மட்டும் உன்!
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?!
என்னை மிஞ்ச இன்னொருவன்!
இருக்கலாமா என நினைப்பது!
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்!
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு!!
என்னை மிஞ்சி என்மகன்!
படிப்பாளியாய் இருக்கனும்!
என்னை விட பலபடிமேல்!
என்மகன் சிறக்கனும்!
என்றல்லவா எனக்கு நீ!
பாலூட்டும்போது பாடினாய்!
என்விடயத்தில் மட்டும் உன்!
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?!
உன்னைவிட ஒருபடிமேல்!
வீரனாகக் கற்றுத் தந்தாய்!
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்!
சுகாதாரம் சொல்லித் தந்தாய்!
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்!
இத்தனையும் கொட்டிவிட்டு!
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்!
எனக்கு நீ காட்டும் பாசம்போல்!
உன்மீதும் நான் பாசம் காட்ட!
கற்றுத்தர ஏன் மறந்தாய்

இருப்பதிகாரம்

வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன் -!
நிலை மண்டில ஆசிரியப்பா!!
!
வானினை நிலவினை வரையினை மடுவினை!
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்!
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை!
மீறிட முடியா சிந்தையை மேலும்!
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்!
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்!
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்!
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?!
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?!
விரியு மண்ட மடக்கு மண்டம்!
அதனை யடக்க மற்றோ ரண்டம்.!
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.!
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு.!
இதுவும் நிசமா நிழலாக் கனவா?!
நனவும் கனவா? கனவும் நனவா?!
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள்.!
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்!!
இருப்பு அறிந்திட தேடித் தொடரும்!
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே!!
இதனை அறிதல் புரித லெவ்விதம்?!
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக்!
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை!
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை!
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்?!
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய்!
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம்!
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்?!
செயற்கை சமைத்திட சிந்தை தந்த!
செயலினால் தானோ செகத்தினில் துயரோ?!
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க!
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட!
பண்பினால் தானோ பாரினில் பகைமை?!
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று!
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு!
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து!
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை!
வந்திடு மென்றால் அதுவே போதும்.!
வேறு....!
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும்!
சிந்தை யிழந்து இருத்த லின்பம்!!
இரவில் வானில் நீந்தும் மீன்கள்!
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும்.!
விசும்பும் மதியும் கதிரும் காற்றும்!
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும்!
படைப்பின் திறனை பறையே சாற்றும்.!
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும்.!
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும்!
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும்.!
உறவினை உதறி யுண்மை அறிதல்!
துறவென ஆயிடு மதனா லதனை!
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே!
உண்மை காணலே சிறந்ததோ தறியேன்.!
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன்.!
உளையு முளத்தின் உளைவை எவ்விதம்!
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?

நெருப்பாய் எரியும் வாழ்வு

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
கல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு !
கற்பவன்; நிற்கிறான்; படையிலே! !
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம் !
கண்டு துடிக்குதே இடையிலே…! !
பேயர சாளுது நாட்டிலே!-இன்று !
பேனையை போடுறார் கூட்டிலே! !
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட !
காதலால் வந்தது றோட்டிலே…! !
நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம் !
நிம்மதி தேடுறார் குடியிலே! !
வாழ்வு நிலைப்பது “படி”யிலே!-இன்றேல் !
வாடிட வேண்டுநாம் அடியிலே! !
அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று !
அகதியாய் நனைகிறார் மழையிலே! !
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட !
வாக்கினால் வந்தெதம் தலையிலே! !
சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும் !
சுயநல முள்ளது மூச்சிலே! !
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில் !
வாழ்வது அவரவர் பொறுப்பிலே

உனக்கு புரியும்

நிலா மகள்
என்னுடன் நீ இருக்கும்!
நாட்களில் உனக்கு புரியாதவை!
என்னை பிரிந்திருக்கும்!
நாட்களில் உனக்கு புரியும்!
ஆம் புரியும்!
பூக்கள் பேசும் மொழி புரியும்!
தென்றலின் தாலாட்டு புரியும்!
கண்ணீரின் பாரம் புரியும்!
தனிமையின் துயரம் புரியும்!
ஏக்கங்களின் எழுத்துக்கள் புரியும்!
மௌனத்தின் தவறு புரியும்!
பாதையில் தடுமாற்றம் புரியும்!
புரியும்!
உனக்குப்!
புரியும்!
அனைத்தையும் இழந்து விட்டாய்!
என்று புரிவாய்!
ஆனால்...!
நான் உன்னில் இருப்பதை மட்டும்........!
புரிந்து கொள்வாயா?

சித்திரமே சிதைத்தாயோ ?

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
நினைவுகளைக் கிளறிப் !
பார்க்கின்றேன் !
நெருடல்கள் கொஞ்சம் !
நெருஞ்சி முற்களைப் போலே !
கனவுகளைக் களைந்து !
பார்க்கின்றேன் !
கலங்கல்கள் சில !
குழம்பிய குட்டை போலே !
புனைவுகளில் புதையுண்டு !
பார்க்கின்றேன் !
வடிப்பவை எல்லாம் !
வாடிப்போன மலர்களாய் !
முனைவுகளைச் சிந்தித்துப் !
பார்க்கின்றேன் !
முடியாதவைகள் எதையுமே !
முடித்ததாய் இல்லை !
நனவுகளில் நீந்தும்போது !
பார்க்கின்றேன் !
நினைவுகளால் விளைந்த !
கனவுகளைச் சிதைத்த !
சித்திரமே நீதானென்று

வீடில்லாமை

ஜாவேத் அக்தர்
மாலையாகப் போகிறது!
கடலில் கரையவிருக்கிறான்!
சிகப்பு ஆதவன்!
இவ்வேளையில்!
தங்கள் கூடுகளைத் தாங்கிய!
மரங்களடர்ந்த காட்டை நோக்கி!
பறக்கின்றன பறவைகள்!
வரிசை அமைத்து!
அந்தப் பறவைகள்!
வழக்கமாய் அங்கு!
திரும்புகின்றன!
தூங்கிப் போகின்றன!
இந்த வீடுகளாலான!
காட்டின் மத்தியில்!
கவலையில் உள்ளோம்!
நமக்கென யாதொரு இடமுமில்லை!
மாலையாகப் போகிறது!
எங்கே போவது.!
!
-ஜாவேத் அக்தர்!
தமிழில்:!
மதியழகன் சுப்பையா