தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நினைத்திருக்க‌லாம் அவ‌ள்

சிபி பாபு
அவ‌ளின் முக‌ம் பார்த்தேன்!!
புதும‌ல‌ராய் புன்ன‌கைத்தாள்!!
நானும் புன்ன‌கைத்தேன்!!
அழ‌காய் தானிருக்கின்றாளென்று.!
நில‌ம் பார்த்தேன்!
அவ‌ளின் பாத‌ம் பார்க்க‌!!
ஒன்றும‌ட்டும் த‌ரையில்!!
பிற‌வி ஊன‌ம் போல‌.!
மீண்டும் விர‌க்தியாய்!
அவ‌ள் முக‌ம் பார்த்தேன்!!
எனைப் பார்த்து!
ம‌ன‌துக்குள் சிரித்தாள்!
ஏளன‌மாய்!!
உட‌ல் அழகை ர‌சிப்ப‌வ‌னுக்கு!
எங்கிருந்த‌டா தெரியும்?...!
என்னுள் ஆழ்ம‌ன‌தும்!
ஓர் அழ‌குதானென்று!,!
என‌ நினைத்திருக்க‌லாம் அவ‌ள்!.!
அவ‌ளுக்கு!
எங்கிருந்து புரியும்?...!
என்னில் விழுதொன்றாயிருந்து!
விப‌த்தொன்றில்!
த‌ன்னிருக் கால்க‌ளிழ‌ந்து...!
அத‌ன் நிமித்த‌ம்!
மாண்டு போன‌...!
என் அன்பு ம‌னையாளின்!
நினைவுக‌ள்!!
என் ம‌ன‌தில்!
வ‌ந்து போன‌தென்று!.!
என்றும் இனிய‌...!
-சிபி.பாபு

நெல்லை எக்ஸ்பிரஸ்

ஜெ.நம்பிராஜன்
ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்!
அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து!
தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை!
ஊர்வாசத்தின் மிச்சமாய்!
பயணப்பட்டன சில பூச்செடிகள்!
இரயிலில் என்னுடன்!
எல்லாவற்றையும் பிரிக்கையில்!
இலவச இணைப்பாக வெளிப்பட்டது!
செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி!
இரயில் பூச்சி ஒன்று!
பார்த்தறியாத பக்கத்து வீட்டு!
குழந்தைகளிடம் காட்ட வேண்டும்!
அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும்!
அந்த பூச்சி!
-ஜெ.நம்பிராஜன்

அவள்

சத்தி சக்திதாசன்
மனந்தனிலே காதலாய் மலா¢ந்தாள் !
மலர்களிலே முல்லையாய் மணந்தாள் !
நினைவினிலே தேன்சுவையாய் இனித்தாள் !
நீங்காமல் உள்ளமெல்லாம் நிறைந்தாள் !
கனவினிலே கலா¢ கலராய் பறந்தாள் !
கண்களிலே தன்னுருவம் வரைந்தாள !
செவிகளிலே தமிழிசையாய் இசைத்தாள் !
செவ்விதழை தாமரையாய் விரித்தாள் !
முகம்தனையே திரைபோட்டு மறைத்தாள் !
முத்தமிழால் கவிமழை பொழிந்தாள் !
எனக்கெனவே இவ்வுலகில் உதித்தாள் !
என்னுயிரில் சரிபாதி எடுத்தாள் !
அவனியிலே மறுபிறவி இருந்தால் !
அவளுடனே வாழும் வரம் அளித்தாள் !
உள்ளத்திலே அவளெண்ணம் அளித்த !
சுகத்தால் !
உலைக்கும் துயரமெல்லாம் மனதினின்றும் !
கழித்தாள் !
வாழ்வினிலே நானென்றும் மணந்தால் !
வஞ்சியன்றி வேறோருத்தி கிடையாள்

நாகரீக உலகமா ?

சத்தி சக்திதாசன்
இருட்டினில் இதயத்தை மூழ்க விட்டு !
ஈட்டிபோல் வார்த்தையைப் பாயவிட்டு !
போட்டிகள் பல போட்டுக்கொண்டு !
பொறாமையில் வெந்துகொண்டு !
வாழ்வதைத்தான் நாகரீக உலகம் !
என்பாயோ ? !
- சத்தி சக்திதாசன்

இன்னுமெந்தன் காதில்

வேதா. இலங்காதிலகம்
இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்...!
பின்னுகிறது பழமை வேதமாக!!
இன்னுமெந்தன் கனவில் உருவம்..!
சின்னத்திரை போல் மின்னுகிறது!!
இன்னும் நீங்கள் பூவுலகில் தினம்!
பின்னும் நினைவில் என்னுடன் தானம்மா!!
!
நீங்கள் இல்லை என்று எதற்காக!
நான் இங்கு கலங்க வேண்டும்!!
நீங்கள் என்றும் என்னுள் தானம்மா!!
நீங்களென்னை விட்டுப் போகவில்லை!!
நான் மறந்தாலன்றோ நீங்கள் விலகுவதற்கு!!
தேன் நினைவுகளில் நான் தர..தன..னன..னா..!
!
பொறுமையெனும் பெரும் ஆயதம் தந்தீர்கள்!!
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து!
பக்குவமாயன்று நடை பயில வைத்தீர்கள்!!
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று!!
என் மனிதத்தின் சாவியே நீங்களும்!
என் அப்பாவும் தானேயம்மா!!
!
விநாயகராய் உங்களைச் சுற்றினேன்!!
விளக்கமிகு வாழ்வுக் கனி ஏந்தியுள்ளேன்!!
அன்னையர் தினமென ஒரு நாளாம், நான்!
எண்ணுவது அன்றல்ல, என்றுமே தான்!!
நன்றிகள் நவில்வது நாளும் தானம்மா!!
குன்றிடா வாழ்த்துகள் அகிலத்து அன்னையருக்கு!!
-வேதா. இலங்காதிலகம்.!
டென்மார்க்

நான்கு வழிச் சாலை

கண்ணன். சி
நான்கு வழிச் சாலை!
நகரங்களை இணைக்கும் சாலை!
நாள் கிழமை பார்த்து!
நவ தானியங்கள் இட்டு!
நான்கேழுதலைமுறைக்கு!
நிலைத்து நிற்க நிலை வைத்து!
பகல் இரவு பாராது உழைத்து!
பார்த்து பார்த்து கட்டிய வீட்டை!
பகலிலேயே கொள்ளை கொண்ட சாலை!
வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் என்ற!
வீர கோஷத்திற்கு முன்னரே!
சாலையெங்கும் சோலையாக நின்று!
கத்தரி வெயிலை தான் வாங்கி!
கரியமில வாயுவை உள் வாங்கி!
நா ஊற சுவை கூட புளி தந்து!
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து!
நட்டமா நின்ன நெட்டை மரங்களை!
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை!
துடியான கருமாரி!
தூங்காத கருப்புச்சாமி!
அரச மர பிள்ளையார்!
ஆடிக் கூழ் அம்மன்!
அத்தனை பேரையும்!
இடம் மாத்தி தடமான சாலை!
காட்டை கொடுத்தவனுக்கும்!
மேட்டை கொடுத்தவனுக்கும்!
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்!
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்!
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்!
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை!
ஊரை ரெண்டாக்கி!
ஊருக்குத் தண்ணி தரும்!
ஊருணியை மேடாக்கி!
ஏர் உழவனின்!
ஏரியை துண்டாக்கி!
வாய்க்காலை பாழாக்கி!
நன்செய்யை நாசாமக்கி!
பாதைகளை வீணாக்கி!
பயன் தரும் மரங்களை பிணமாக்கி!
அரளிச் செடி தாங்கி!
அம்சமாய் படுத்த சாலை!
அரச மரத்து நிறுத்தம்!
ஆல மரத்து நிறுத்தம்!
பத்துப் பனை மரம் நிறுத்தம்!
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்!
புங்கை மர நிறுத்தம்!
வேங்கை மர நிறுத்தம்!
மா மர நிறுத்தம்!
பூ மர நிறுத்தம்!
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி!
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை!
நான்கு வழிச் சாலை...!
நகரங்களை இணைக்கும் சாலை!

இரவல் தேசமிது

வேதா. இலங்காதிலகம்
18-10-2007.!
வரலாற்றுத் தாய்மண்ணை விலகி வந்த!
இரவல் தேசமிது, வாடகை வாழ்விது.!
தரளம் விளைவதாய்த் தந்திடும் தரிசனமது.!
வரவும் செலவும் வரம்பின்றி வளர்ந்து!
அரவம் ஊர்வதாய் அருட்டும் உணர்வது.!
நரகமும் சொர்க்கமும் நலங்கிடும் நாடிது.!
பரவசம் மேலாக தைலமாய் மிதப்பது. !
நிரவுதல், பூரணமெனும் மாயம் தருவது.!
விரட்டும் குளிரில் எம் விதியின் எழுத்து!
உரலில் அகப்பட்ட உலக்கையாய்ப் !
புரட்டிப் பலரை நோயில் அழுத்துவது.!
தரவின் தருணத்தைத் தக்கபடி பாவிக்கும்!
இரசவாதம், இராசதந்திரம் பலருக்குமுண்டு.!
தரமுடை எம் இன அறிமுகத் தமிழ்!
சிரம் சாய்க்கச் சிலர் துணையாவதும்!
கரம் கொடுத்து உயர்த்தப் பலருமாயிங்கு.!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்

ஒரு திருமணவிழாவில்

க.அருணபாரதி
நம் கல்லூரித்!
தோழியின் திருமணம்..!
தோழிக்கு!
மிகநெருக்கமான!
தோழி நீ என்பதால்!
வருவாய் என்ற!
நம்பிக்கையுடன்!
தோழனாக நானும்!
வந்தேன்..!
நம்பிக்கை வீண்!
போகவில்லை..!
கோபம் கலந்த!
மெல்லிய பார்வையோடு!
அமர்ந்திருந்தாய்..!
நீ பேசுவாய்!
என்று நானும்,!
நான் பேசுவேன்!
என்று நீயும்,!
ஒருவொருக்கொருவர்!
மனதிற்குள் நினைத்து!
இறுதிவரை!
பேசாமலேயே!
இருந்தோம்..!
பலமாதங்கள்!
இடைவெளிக்குபின்!
நண்பர்கள் எல்லோரும்!
வந்தார்கள்..!
பிரிவின் வலியை!
சிரித்து கழித்தோம்..!
சிலர் மாறியிருந்தனர்!
சிலர் மாற்றங்களை!
எதிர்நோக்கி இருந்தனர்...!
என்னைத் தவிர!
எல்லோரையம்!
அன்புடன் நீ!
நலம் விசாரித்தாய்..!
அதுவரை நலமாய்!
இருந்தநான்!
நலமிழந்து நின்றேன்..!
மனதிற்குள் குழப்பம்!
கனவுக்குள் வெப்பம்!
இனிமைக்கு பெயர்போன!
காதல் வாழ்வினில்தான்!
எத்தனை எத்தனை!
துன்பங்கள்..!
பக்கத்தில் இருந்தபோது!
பேசாத என்மனம்,!
விட்டுவிலகி!
வீடு செல்லும்பொழுது!
பேசியது, என்னோடு..!
ஏசியது நெஞ்சோடு..!
வேண்டாமென என்னை!
வெறுத்தாலும் கூட!
சிறுபுன்னகை தந்து!
சினம் ஆற்றியவள்!
என் தேவதை..!
இருமனங்கள் சேரும்!
திருமணவிழாவில்!
பிரிந்தன எங்கள்!
இருமனங்கள்..!
திரும்ப எப்பொழுது!
காண்பேன் என!
அரும்பிய மெல்லிய!
வினாக்களோடு!
விடைபெற்றோம்..!
-----------------------------------!
பாதையை தேடாதே.. உருவாக்கு!
- புரட்சியாளர் லெனின் -!
------------------------------------!
தோழமையுடன்

என் பாக்கியம்

அனாமிகா பிரித்திமா
கண்கள் முன் உங்களை!
வைத்திருக்கிறேன்!
ஒரு நொடி கூட முட மனதில்லை!
நீங்கள் மறையக்கூடாதே !!
நாசியில் இழுக்கிறேன் சுவாசம்!
நீங்கள் இருக்கும்!
இதயத்திற்கு!
இரத்த ஓட்டம் வேண்டுமே !!
செயற்கை புன்னகையை !
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்!
தங்கள் சிந்தனையால் சிரிக்க!
உதடுகள் மறுக்கிறதே !!
விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !!
வாய் அதை ஏற்க மறுக்கிறது !!
என் நாவு ருசி இழந்து!
வருடங்கள் ஆனது !
உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு!
இருந்து என்ன பயன்?!
உங்கள் மடியில் உயிர் பிரியும்!
பாக்கியம் இல்லை!
உங்கள் கையிலாவது!
அது போகட்டுமே !
அனு அனுவாய் சாவதை விட !
என்னை முழுதாய்!
கொன்றுவிடுங்களேன் !
அது என்!
பாக்கியமாக இருக்கட்டுமே!
என் பாக்கியம் !
பாக்கியம் !
!
-அனாமிகா பிரித்திமா

என் தோட்டத்தில் நீ

வேதா மஹாலஷ்மி
நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
என் தோட்டத்தில் எல்லாமே நீதான்... !
பச்சை இலையின் இடுக்கெல்லாம் !
பாசி படர்ந்த கொடிக்காம்பு - உன் !
இச்சை திறக்கும் இடுக்கெல்லாம் !
உஷ்ணம் கலக்கும் நரம்பைப்போல்.... !
மிச்சம் வைத்த பூவையெல்லாம் !
உச்சியில் உதிர்க்கும் பூங்கொன்றை, !
இடம்பார்த்து, விதம் பார்த்து.. !
குணம் பார்த்து, மனம் பார்த்து - நீ !
சிரித்து வைக்கும் சிரிப்பைப் போல்..... !
மழை முடிந்த மரக்கிளை.. !
வியர்வை பூக்க விறுவிறுக்க, !
என்னைப் பார்த்து, !
ஒரு பக்கமாய் காலை !
ஊன்றி நிற்கும் உன்னைப் போல்.... !
என் தோட்டத்தில் !
இப்படி எல்லாமே நீதான்... !
நின்ற இடம் இன்னும் !
நிச்சயமாய் அதே வாசம்... !
நடந்த இடம் கொஞ்சம் !
வேதனையை வழித்தெடுக்கும்... !
இருந்த இடம் கண்ணில் !
பத்திரமாய் ஒளி வீசும்... !
கிடந்த இடம் , !
உயிரில் பாதி துளைத்தெடுக்கும்!! !
நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
இங்கு எல்லாமே நீயேதான்... !
மனதில் நின்றதும் மாலை நடந்ததும் !
அருகில் இருந்ததும் உயிராய் கிடந்ததும்... !
துளைத்ததும் முளைத்ததும் !
பூத்ததும் பூக்க வைத்ததுமாய்... !
என் உலகில் !
இன்று எல்லாமே நீயே தான்!! !