அவசர யுகத்தில் அன்புகூட!
தவணைமுறையில் பரிமாறப்படுகிறது!
கணவன்-மனைவி வசிப்பது ஓரேவீட்டில்!
இருவரும் சந்தித்து வாரம் கடந்திருக்கும்!
குறுஞ்செய்தி வழியாக ஊஞ்சலாடிக்!
கொண்டிருக்கிறது - அன்பு!
தொலைத்தொடர்பு கோபுரங்களின்!
உச்சியில்!
திருமண அழைப்பிதழ்!
கடன்பற்று அட்டை அல்ல!
நினைத்ததும் வங்கிபெயரை !
மாற்றிகொள்ள!
மந்திரங்கள் ஓத மேளதாளம் முழங்க!
உற்றார்களின் நடுவில் நிச்சயிக்கப்படும்!
பந்தம்!
மரக்கூண்டுகளின் நடுவே!
சுத்தியல் ஓசை முழங்க அறுக்கப்படுகிறது!
புரிந்துணர்வும் விட்டுக்கொடுத்தலும்!
மனிதப்பண்புகள்!
மனிதர்களாக பிறந்தோம்!
மனிதர்களாக வாழப்பழகுவோம்!
விவாகரத்து வழக்குகளை!
செல்லரிக்கச் செய்வோம்!
- லலிதாசுந்தர்
லலிதாசுந்தர்