தமிழ் கவிதைகள் - Page 342

தமிழ் கவிதைகள் - Page 342

தெருவிற் தொலைந்த நிரபராதிகளின் மீட்கவியற்பாடல்

மீந்திருந்த எல்லாச் சொற்களையும் !
அவர்களை நோக்கி வீசியாயிற்று !
அவர்கள் !
சிலுவையில் எழுதிய உனது முகம் பற்றிய கதைகளை !
அவற்றில் தேடுகிறார்கள் !
எக்காலத்திலும் திரும்பிவராத அச்சொற்கள் !
நீ ஒரு பறவையைப் போலிருந்தாய் என்பதைத் தவிர !
வேறெதையும் கொண்டிருக்கவில்லை !
உன்னால் நேசிக்கப்பட்ட !
நூற்றுக்கணக்கான கவிதைகளின் காதல் ததும்பும் வார்த்தைகளை !
நான் வைத்திருந்தேன்: !
குடிமயக்கத்திலும் !
சிகரெட் புகை நாற்றத்திலும் !
நீ எங்களோடிருந்ததற்கான அடையாளங்களை !
நான் வைத்திருந்தேன் நான் வைத்திருந்தேன் !
அவர்களோ அவற்றில் மின்கம்பிகளைச் செருகினார்கள் !
எல்லாம் முடிந்த பாழ் மௌனத்தில் விசமுட்களை ஏற்றினார்கள் !
அவ்வாறு நடக்காதென நானிருந்த கணத்தில் !
பார்வையைப் பிடுங்கி !
இந்தப் பிரபஞ்சவெளியில் ஒலியெழ வீசியதை நான் உணர்ந்தேன் !
குயில் தனது பாடலை பாலைவனங்களுக்கப்பால் !
எடுத்துச்சென்றுவிட்டது !
அவர்களோ !
எமது வாழ்வு பற்றிய அடையாளங்களனைத்தையும் கடலுக்கப்பால்: !
யாருக்கும் தெரியாத உவர்க்காடுகளில் புதைத்துவிட்டார்கள் !
நான் உணர்கின்றேன் !
நீயோ நானோ !
எமது தாய்களின் கலைந்தகேசத்தையும் !
கலங்கித் ததும்பும் விழிகளையும் !
அவர்களின் உள் விசும்பும் மன ஒலிகளையும் !
இனி எப்போதும் கேட்கவோ பார்க்கவோ போவதில்லை !
சிறைக்கதவின் துவாரங்களுக்கு வெளியே !
போஸ் நிஹாலே 03-1999 !
நன்றி சரிநிகர்

ஊரோவியம்

ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்!
என்!
சிறுபருவ நாளொன்றை.!
நாளும் பொழுதுமாய் அன்று நான்!
இளந் து£ரிகை கொண்டு!
வரைந்த!
எம்ஊர்ச் சித்திரத்தை!
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்!
அழிக்கமுடியவில்லை.!
பதினெட்டு ஆண்டுகளை!
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ!
படர்ந்தும்போனேன்தான்.!
ஆனாலும் எனது ஊர்!
என்னிடம் ஓவியமானது.!
யுத்தம் நடந்துசென்ற வீதிகளெல்லாம்!
சிதைந்து!
மணல்வாரி ஒழுங்கைகளாக,!
ஒழுங்கைகள் ஒற்றையடிப்பாதையாகிப் போன பின்னும்!
எதுவும்!
என் இளமைப்பருவ ஊரை!
அழித்துவரையமுடியாமல் போனதுதான், போ!!
எனது இளமைப்பருவ ஊர்!
அழிக்கப்பட முடியாததாய் மனசில்!
மாட்டப்பட்டே இருக்கிறது.!
எனது இளமைப்பருவ நட்புகளும்!
என்னிடமே இருக்கிறது.!
என் பால்ய நண்பர்களை கண்டதும் பேசியதும்!
மிக சாதாரணமாகவே இருந்தது.!
அம்மாவைக் கண்டதும்!
பேசியதும், ஏன் கோபித்ததும்கூட!
இயல்பாகவே இருந்தது.!
குறுகிய சந்திப்பின் பின்னான ஒரு நீள்!
பயணத்தின்பின்!
எதுவெதுவெல்லாமோ பேசியிருக்கலாம் என்ற!
நினைவுகளின் முளைப்புகள் இப்போ!
வயற்காடுபோல் விரிகிறது.!
வலிந்து நான் பிரதியீடு செய்யும்!
முனைப்பிலிருந்து ஊர்ச் சித்திரம்!
நழுவிவிடுகிறது.!
எனது பயணத்தின் வலிமை!
அதன் காத்திருப்பு வருடங்கள்!
எல்லாமே!
தோற்றுத்தான் போயிற்று.!
இன்னொரு பயணத்தின் உந்தல் எனது!
இளமைப் பருவத்து ஊரோவியத்தால்!
வளைந்துபோயுள்ளது.!
சிறுபராய நாளொன்றை நான்!
கனவில் பயிரிடும் கணமொன்று!
எனக்கு வேண்டும்!
பசித்துப்போயிருக்கிறேன்.!
- ரவி (சுவிஸ், 070104)!
*** கவிஞர் அனுப்பிவைத்த படங்கள்

புதிதாய்ப் பிறப்போம்.. அழகி

1.புதிதாய்ப் பிறப்போம்!
இந்த யுகம் முடிவுற்று!
புதிதாய் ஓர் யுகம் பிறந்தால்!
நான் பிறக்க வேண்டும்!
மழலையின் சிரிப்பொலியே!
எங்கும் மலர்ந்திருக்க வேண்டும்!
யுத்தம் என்ற வார்த்தையை!
அகராதியிலிருந்து நீக்க வேண்டும்!
குயில்களின் கூவலும்!
பறவைகளின் சலசலப்பும்!
அருவியின் சத்தமும்!
காதில் கலந்து மகிழ வேண்டும்!
அளவாய் ஆசையுடன் மனிதர்கள்!
ஆட்சிகள் அதிகாரங்கள் அற்று!
எம்மை நாமே ஆள வேண்டும்!
போதும் என்ற வாழ்வில்!
விருப்புடன் மரணம்!
அதனால் பிறர்க்கு!
துயரம் வேண்டாம்!
பொய்கள் அற்று இருக்க!
புதிதாய் ஓரு வாழ்வு வேண்டும்!
!
2. அழகி!
வான் அங்கு இல்லை!
பிறை நுதல் கண்டேன்!
குளம் அங்கு இல்லை!
தாமரை முகம் கண்டேன்!
கடலங்கு இல்லை!
கயல்விழி கண்டேன்!
விண்மீன்கள் இல்லை!
முல்லாக்கு கண்டேன்!
ரதம் அங்கு இல்லை!
லோலாக்கு கண்டேன்!
போர் அங்கு இல்லை!
சங்கொன்று கண்டேன்!
இறை அங்கில்லை!
மலர் பந்துகள் கண்டேன்!
கொடி அங்கில்லை!
இடை ஆடக்கண்டேன்!
இசை ஒன்று கேட்டேன்!
நரம்புகள் என கார்குழலில்!
வண்டுகள் இசைமீட்ட!
தவில்களும் கண்டேன்!
சலங்கை ஒலிகேட்டேன்!
அவள் நகைப்பென்று வியந்தேன்!
பெண் ஒன்று கண்டேன்-அவள்!
அழகை என்னென்று சொல்வேன்!
- நளினி.அ

பழகிப்போன வாழ்க்கை

மின்னல் வெட்டும் !
இடி வெடிக்கும் !
மழைதான் அடுத்தது !
மாரிகாலம் இப்படித்தான் போகும் !
பழைய பள்ளிக்கூடம் !
பழைய வாத்தியார் !
'கைவேலை' அப்படியொரு பாடம் !
திரும்பத் திரும்ப !
அம்மியும் குழவியும் !
உரலும் உலக்கையும் !
ரேடியோவும் !
களிமண்ணிலேயே செய்வோம் !
கேள்வியே கேட்காத வாத்தியார் !
சிந்தனையைத் தூண்டாத!
களிமண் மூளை அவருக்கும் !
100 க்கு 100 எல்லோருக்கும் !
அதுதான் கிடைக்கும் !
வாய்க்கால் வழியே !
மழைநீர் முட்டி முட்டி ஓடும் !
ஒரே மாதி!
வெவ்வேறு கடுதாசியில் !
கப்பல்கள் விடுவோம் !
ஒரே தடத்தில் !
அவையும் முட்டியும் மோதியும் !
அணைத்தும் !
ஒன்றாய் செல்லும் !
எம்மைப்போல் !
பழகிப்போனது வாழ்க்கை !
'அவர் சொன்னால் சரியாயிருக்கும்'!
மேய்ப்பரின் பின்னால் !
மந்தைகள் செல்லும் !
புதிய புதிய மேய்ப்பர் வருவார் !
மீண்டும் மீண்டும் மந்தைகள் !
பின்னால் செல்லும் !
பழகிப்போன வாழ்க்கை
மு, பழனியப்பன் !
காட்சி-1 !
சென்னை மாநகரம் !
நிரம்பி வழியும் !
சக்கரம் முளைத்த குப்பைத்தொட்டி !
குப்பைச் சேகரிப்பு வாகனம் !
நாளை !
காலை வரும் !
இந்தச் சாலையில் !
இன்னும் மூன்று !
இருக்கின்றன !
!
எல்லாவற்றிலும் !
பிளாஸ்டிக் பைகளைப் !
பொறுக்க வேண்டும். !
தண்ணீர் பட்டவை !
படாதவை !
மெல்லிதானவை !
கடினமானவை !
தரம் பிரித்துச் சேர்க்கத் தனிதனிப்பைகள் !
தூக்கிச் செல்வதில் சிரமம் இருக்காது !
வயதுக்கு மீறிய !
சுறுசுறுப்பு !
வெள்ளை தாடி மடிந்து கன்னத்தில் விழும் !
கண்பள்ளங்கள் குழிவிழுந்து !
கண்பந்துகள் துருத்தி நிற்கும் !
கைகளில் எது பட்டாலும் !
கால்களில் எது ஒட்டினாலும் !
கவலையில்லை !
இன்றைக்கு எடை எவ்வளவு !
தாராசில் நெருக்கப்படும்வரை !
நெருடும் நெஞ்சம் !
இன்று ரூபாய் பன்னிரண்டோ !
பத்தோ !
கொண்டுபோய் தந்தால் !
மருமகள் சோறிடுவதில் வருத்தம் இருக்காது !
கைகள் பரபரக்கின்றன !
காட்சி-2 !
போவோர் வருவோர் தெய்வம் !
அவர்களைப் பார்த்தே பொழுது போய்விடும் !
வீட்டு வெளி வாசலில் !
சிறு நாற்காலி !
ஆடாமல் அசையாமல் !
அமர்ந்து !
தினம் வந்த மனிதர்களைப் பார்த்து !
அவர்களின் நிறம் பார்த்து !
பென்ஷன் போதும் !
நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு !
ஊர்ப்பக்கங்களில் ஏன் பெரிய பெரிய !
கோவில்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் !
என்பது இப்போது புரிகிறது !
காலாற நடக்கலாம் !
மூக்காற சுவாசிக்கலாம் !
கண்ணாற வானம் பார்க்கலாம் !
இருந்தாலும் !
பத்தடி பத்தடி வானத்திற்குள் !
வாழ்க்கை பழகிக் கிடக்கிறது !
போவோம் என்றாலும் !
முடியாத நிலை !
இருப்போம் என்றாலும் !
முடியாது !
மணி ஆறாகி விட்டது !
பக்கத்து வீட்டுப் பெண் !
அலுவலகம் விட்டு வந்தாச்சு !
நாளையும் பார்க்க மனிதர்கள் வருவார்கள் !

palaniappan

மிதந்து திரியும் திறப்புகள்

சில சைக்கிள்களின்!
கண்டிலை!
கழற்றி எடுத்தார்கள்!
சில சைக்கிள்களின்!
சீற்றை!
கழற்றி எடுத்தார்கள்!
சில சைக்கிள்களின்!
கரியலை!
கழற்றி எடுத்தார்கள்.!
சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்!
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை!
யாரிடமுமில்லை.!
சில பேர் சைக்கிளையே!
திருடிக்கொண்டு போனார்கள்.!
அலுமாரிகளை உடைத்து!
புதையலை கண்டெடுப்பதுபோல!
எனது தோழர்கள்!
மகிழ்கிறார்கள்!
அவர்களின் வாசனை செண்டுகளும்!
பவுடரும்!
சீப்புகளும் இன்னும்!
வாசனையுடனிருந்தன.!
உடுப்புகளை கிழறி!
அறையில் எறிந்து விட்டனர்!
சிலர் அந்த உடுப்புகளால்!
அறையின் தூசியை!
தட்டிக்கொண்டார்கள்!
கடைசியில்!
குப்பைத்தொட்டியில்!
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.!
அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்!
உருக்குலைந்த செருப்புகளும்!
அறையை விட்டு!
ஒதுங்கியபடியிருந்தது.!
பாடக்குறிப்புகள் கிழிந்தும்!
உருக்குலைந்தும்!
அள்ளி வீசப்பட்டும்!
காற்றோடும்!
கால்ளோடும் மிதிபட்டும்!
குப்பையாகி கரைந்தன.!
அவர்கள் எழுதிய!
பாடக்குறிப்புகளும்!
சேகரித்த!
பத்திரிகை பகுதிகளும்!
அடிமட்டங்களும்!
மை இறுகிய பேனாக்களும்!
சிப்புகள் அறுந்த!
ப்பாக்குகளை விட்டு!
தூரக்கிடக்க!
அலுமாரிகளை விட்டு!
தூரக்கிடந்தன!
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.!
அறைகளின் மூலைகள்!
பக்கங்கள்!
எங்கும் கிடந்து உருண்டன!
அவர்களிடமிருந்து!
உதிர்ந்த முடிகள்!
தலையணைகள்!
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.!
குளியலறை தட்டுகளில்!
கிடந்தன!
ஈரம் உலராத சவர்க்காரங்கள்!
மலஅறையில்!
வெண்கட்டியால் எழுதப்பட்ட!
தூஷனங்கள்!
தண்ணீரால் கழுவி!
அழிக்கப்பட்டிருந்தது.!
முகம் அழியாத கண்ணாடியுடன்!
பெயரும் ஊரும் வகுப்பும்!
எழுதப்பட்ட சுவர்களுக்கு!
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.!
அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது!
பெரும் ஆறாய்!
யாரும் கண்டுகொள்ளாத!
கரைகளை எடுத்து உடைத்தபடி..!
அவர்கள் புதிய சைக்கிள்களோடும்!
புதிய ப்பாக்குகளோடும்!
திரும்பி வருவார்கள்!
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.!
சிதறுப்பட்டு கலைந்து!
மிதக்கிற!
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல!
சைக்கிள்களினதும்!
அறைகளினதும்!
துருப்பிடித்த திறப்புகள்!
எங்கும் அலைந்து!
மிதந்து கொண்டிருந்தன..!
-தீபச்செல்வன்!
01.04.2008

காயத்தில் காயம்

சீ என்று ஒதுக்கியது!
காயம் பட்டபோது!
தீக்காயம் வீரியம் புரிகிறது!
இப்பொழுது!
செங்காந்தாள் கைகள்!
கருஞ்சாம்பல் ஆனது!
திருமுகத்தில் தீவடு பட்டு!
திருமணம் ஆகாத தங்கை!
திருவள்ளுவருக்கு இல்லை போலும் !
தீயினால் சுட்ட வடு உள்ளாறும் என்றாரே!
குளிரூட்டப்பட்ட பேருந்தில்!
உயிரோடு தகனம் செய்யப்பட்டது!
குடைந்தையில்!
பள்ளிச்சாலைகள் குழந்தைகளுக்கு!
கொள்ளிச்சாலைகள் ஆனது!
மருத்துவ அறைகள்!
பிணவறைகளாய் மாறியது !
செய்திகளாக செறிக்கமுடியாமல் !
காட்சிகளாகி கண்களில் ஓடுகிறது!
கருகிய கைகைளை பார்க்கும்!
ஓவ்வொரு முறையும்!
கருகுகிறது மனது

பிரிவு

அன்பே தொலைவாகப் போய்விடு !
தொலைவு உன்னையும் என்னையும் !
இருவருக்காகவும் ஏங்க வைக்கும் !
மெல்லத்தீண்டி தீண்டலில் நீ மயங்க !
என்னை மறந்து முத்தமிட !
சிணுங்கலோடு நீ சிலிர்க்கும்பொழுதெல்லாம் !
மோட்சமடி !
இது பிரிவல்ல !
பிரிவென்று கலங்காதே !
எனக்குள் உன்னையும் !
உனக்குள் என்னையும் !
வலுவாக்கிக்கொள்ளும் முயற்சியிது !
முயற்சியில் நானோ நீயோ தோற்றுப்போனால் !
எங்களின் காதல் செத்துப்போகட்டும் !
கொடிய கால ஓட்டத்தில் !
என்றாவது ஒரு நாள் !
இருவரும் ஒருவரை ஒருவர் !
தேடமுற்படுவோம் !
அன்றுதான் !
இருவரும் ஒருவரை ஒருவர் !
உண்மையாகவே காதலிக்கத் தொடங்குவோம் !
நீயும் நானும் மரித்தபின்னும் !
எச்சமாய் விட்டுச்சென்றதில் !
காதலுமொன்றாய் வாழட்டும்

தேம்ஸ் நதிக்கரையில்

இனிமையான மாலைப் பொழுதினிலே!
இலண்டன் தேம்ஸ்நதிக் கரையினிலே!
இளந்தென்றல் காற்றின் அணைப்பினிலே!
இதயம் பறக்குது வண்ணக் கவிதையுலகில்!
வந்தன பலநூறு வசந்தங்கள் வாழ்க்கையில்!
தந்தன வாசம் வீசிடும் இன்பப் பொழுதுகள்!
நின்றன ஏனோ சோகவேளைகள் மனதில்!
சென்றன பலமைல்கள் வாழ்க்கைப் பயணத்தில்!
அன்னை நாட்டை துறந்தொரு பயணம்!
அன்று நான் கண்டது வாழ்க்கைப் பாடம்!
அகலமான அடியெடுத்து நடந்ததும் பின்னால்!
அடைந்த அனுபவங்கள் ஆயிரம் தேறும்!
இன்றைய பொழுது இடைவேளை வாழ்வில்!
இதயத்தின் ராகங்கள் எழுத்தாய் இசைக்கின்றன!
இணைந்த சொந்தங்களின் தூய்மை எனை!
இன்பவனத்தினுள் கொண்டு தொலைத்தன!
காதிலொரு செய்தி காற்று வந்து சொல்லும்!
கண்ட துன்பம் யாவும் கானல் போல மறையும்!
கவிதை எந்தன் மனதில் என்றும் வந்து துள்ளும்!
கனத்த நெஞ்சின் பாரம் பஞ்சு போல மாறும்!
வசந்த கால அழகினைப் பருகிக் கொண்டே!
வந்திடுவோம் கோடைகால வெப்பத்தினுள்!
வண்ணஓவியமாய் கண்முன் இலையுதிர் காலம்!
வெள்ளைப்பட்டு உடுத்தும் மாரிகாலப்பனிமழை!
நதிக்கரையின் ஓரத்திலே நான் நீந்திய!
நினைனு நீரில் கண்ட காட்சிகள் என்!
நடந்து வந்த பாதையினை நன்கு!
நினைவூட்டிய பொழுது தெரிந்ததுவே!
உண்மை ஒன்று என்னுள்ளத்திற்கு!
உன் வாழ்க்கைப் பயணம் உன் கையிலில்லை!
உனக்குக் கிடைத்த வாழ்க்கையை உண்மையாய்!
உவகை பொங்க வாழ்ந்திடுவதே கடமை!
!
-சக்தி சக்திதாசன்
இந்துக்களே முஸ்லீம்களே!
தந்து கொண்டே இருக்கும் காலத்திடமிருந்து!
இதோ நமக்காக இன்னுமொரு வாய்ப்பு!
நாளையோ மறுநாளோ எப்போதோ!
வரப் போகிறது அயோத்தி தீர்ப்பு!
நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள!
செய்த தவறுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க!
புதுப்பித்த உறவுகளுடன் தொடர்ந்து செல்ல!
மூதாதையர்கள் மேல் விழுந்த கறை நீக்க!
இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வோம்!
உலகம் தன்னைக் கிள்ளிப் பார்த்து!
உணர்ந்து கொள்ளட்டும் இது நனவென்று
India T-shirts - Buy Indian Flag Collections