நாம் சிரித்த காலமுமிருந்தன!
நம்முறவுகள் நசுக்கப்பட்டு!
இப்போ!
சிரிப்புக்களும் கலகலப்புக்களும்!
தலைமறைவாகிய வாழ்க்கை!
இரும்பு!
உருக்கு!
நெருப்பு!
அழிப்பு!
எரிப்பு!
கண்ணீர் வடிவிலே என்னுடைய தேசம்!
ஆடுகள் மாடுகள்!
மேய்வது மேய்ச்சல் நிலம்!
அங்கே!
மனிதமிருகங்களாக!
நிலத்துக்கடியில் புதைந்து கிடந்த எம்மக்கள்…!
வகை வகையான அழுகைகள்!
வதைவிட அறையிலிருந்து…!
எங்கள் குழந்தைகளிடமிருந்து…!
எங்கள் அம்மாவிடமிருந்து…!
எங்கள் அக்காவிடமிருந்து…!
மின் வேலி முகாம்களுக்குள்!
பலமுறை அவர்கள் இறந்து பிறக்கலாம்!
ஓடோடி அவர்கள் உருக்குலைந்து போகலாம்!
தட்டிக் கேட்காமல் அவர்கள்!
மௌனித்து மாளலாம்!
கட்டிளங்காளையும்!
பெட்டைக் குருவிகளும்!
முட்கம்பி வேலியுள்ளும்!
தெருவிலும் உறங்கலாம்!
புரியவில்லை!
உரிமைகளைப் பறித்து!
பூட்டாது உறங்கும் இரவுகளில்!
பெண்டாட்டியாகும் விசித்திரம்!!
சோகம் நிறைந்த தேசப்படத்தின்!
மனிதர்கள் நிலத்தை!
ராணுவம் எடுக்கலாம்!
உலக மக்களே கூறுங்கள்!!
மண்ணிலே இலங்கைபோல் நாடு!
மண்டலத்தில் கண்டதுண்டோ!!
31.7.2009
நவஜோதி ஜோகரட்னம்