மாறாப்பில்லா மானஸ்தர் !
01.!
மாறாப்பில்லா மானஸ்தர் !
-----------------------------!
மானம் உண்டேல் அது எதற்கு!
வீறாப்பை விட்டு விட்டு !
மாறாப்பை விலக்கி விட்டோம்!
தேசியம் தேய்ந்தாலும் தேசியக்!
கூட்டமைப்பை தேயாது காத்திடவே !
சிங்களமும் கிந்தியும் சேர்ந்து சித்தரிக்கும்!
அடிமை தமிழன் மெகா தொடருக்கு !
தமிழருக்கான!
சங்கீத கதிரை போட்டி நடக்கிறது!
தாயகத்தில் !
இறந்தவர் போக இருப்பவர் வாருங்கள்!
கற்பிளந்தோர் போக கற்புடையோர் வாருங்கள்!
பொறுப்புடைய மாந்தரென !
பொறுமை காப்போம் எருமை என!
சிங்கள பாலியல் வல்லூறுகள்!
பற்றாலியன் படையாய் !
இருக்கட்டும் எம் மண்ணில் !
பசி எடுக்கும் வேளையில்தான் !
கொத்தித் தின்பார்கள் உங்கள் உடலை!
ஆறில் போனாலென்ன அறுபதில் போனாலென்ன!
போகும் உடல்தானே போகட்டும் மறந்திடுங்கள் !
விடுதலைக்காக உயிரை விடோம்!
கதிரைக்காக கால் பிடிப்போம் !
பொன்னான வாக்குகளை!
மண்ணாக்காது வாக்களியுங்கள்!
ஆறுதல் பரிசுகளாக - எமக்கு!
அமைச்சர் பதவி தருகின்றார்கள் !
தேசியம் தேய்ந்தாலும் தேயவிடோம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பை. !
02.!
இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான்!
-------------------------------------------------!
இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான்!
இளி நிலை அகற்றி உயர் நிலை தந்திட்ட!
எம் தலைவன் பிரபாகரன் இருக்கின்றான்!
வானமே தலையில் வீழட்டும்!
வாசலில் கோலம் அழியட்டும்!
புத்தனின் சிலைகளும் முளைக்கட்டும்!
எத்தரும் எழுந்து வெல்லட்டும்!
வெற்றிகளெல்லாம் நிச்சையம் அல்ல!
தோல்வி என்பதும் முடிவுரை அல்ல!
அனீதியை அழித்திடும் அறநெறி நெருப்பே!
இருண்ட வாழ்வுக்கு ஒளி கொண்டு வா!
பிறந்தாய் எமக்கென நீ ஒரு முறைதான்!
இறந்தாய் என்றார் பல முறைதான்!
ஐந்தின் அருகே ஐந்தும் அளைக்கிறது!
இறவா தலைவனே இடியாய் வா!
வார்ப்புகள் தானே வாழ்வின் வசந்தம்!
எழுச்சிகள்தானே ஏற்றத்தின் உயர்ச்சி!
சொன்னவன் நீ தானே!
கொற்றவரென்றே குற்றங்கள் இளைக்கும்!
கொடியவர் வாழ்வை முடிவாக்கு!
உற்றவர் வாழ்வையும் உறவையும் சுறண்டும்!
ஊனக் கொடியோரின் உளம் மாற்று!
எதிர் காலம் என்றும் எமதாகட்டும்!
புவி வாழ்வின் புயல்களும் நிலை சாயட்டும்!
அன்பெனும் அக ஊற்றின் அலை தழுவ!
ஆதி சேசனே!
உன் விழிக் கனல் ஊற்றாகட்டும்!
புரட்ச்சி நிலவே எழுச்சித் தீயே!
தமிழின விடிவின் தேசியத் தலைவனே!
எழுச்சி எழுச்சி என்றுமே எழுச்சி!
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி

வல்வை சுஜேன்