ஒரு வாழ்த்துப்பாடல் - கருணாகரன்

Photo by engin akyurt on Unsplash

யாருந்திரும்பவில்லை!
நினைவுகளைப் புதைக்கமுடியாச் சகதியில்!
கிழிபட்டுக்கிடந்ததென் பறவை.!
பிரிவு சொல்ல யாருமில்லை!
வரவுசொல்லவும் யாருமில்லை!
கண்ணெதிரே ஒளியைத்திருடிப்போகிறான் பகற்கள்வன்;!
சகதியில் சிக்கிய பிணமாகக்கிடக்கிறேன்!
இருள்!
பயங்கர வனாந்திரமாக திரண்டு வருகிறது.!
யாரிடம் முறையிடுவேன்?!
!
அன்னா அக்மதோவா!
என்னரும் சோதரி!
துயரம் உன்னுடன் மட்டும் முடியவில்லை!
இதோ என்னுடைய காலடியிலும்!
பாம்புகள் சூழ்கின்றன!
கொட்டும் பனியில்!
இரும்புக்கதவுகளின் வெளியே நீ நின்றாய்!
!
உள்வெளியென்றெல்லாப்பிராந்தியத்திலும்!
வெக்கை தகிக்க!
நானோ!
உள்ளுமில்லை வெளியுமில்லை!
!
கதவிடுக்கில்.!
--கருணாகரன்
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.