சாபத்தின் விடிவு- பெரியார்
வித்யாசாகர்
கடவுள் பெயரில் அழிந்த மனிதத்தை!
மீட்டு மூடத்தை யொழித்த பெரியார்!!
கருந்தாடி நரைப்பதற்குள் - ஒரு!
காலத்தையே மாற்றிப்போட்ட பெரியார்!!
என் தம்பிகளின் காலத்தில் - ஜாதிமதமற்று வாழ!
என் தாத்தா காலத்திலேயே வழிசொன்ன பெரியார்!!
கடவுளர்களைக் காக்க கடவுளை பழித்து!
ஜாதியில் அறுந்த இதயங்களை -!
காதலால் இணைத்து வாழ்வினை போதித்த பெரியார்!!
காலச் சங்கிலியில் கட்டிப் போட்ட!
கைம்பெண்களின் வாழ்கையை – மறுமணப் பந்தலிட்டு!
வாழ்வை மல்லிகையாய்; கறுத்த மனங்களில் ‘தூவிய பெரியார்!!
குடித்துவிட்டுவந்து அடித்த கணவனை!
திருப்பியடிக்காவிட்டாலும் -!
திருப்பியாவதுகேட்க தைரியம் தந்த பெரியார்!!
பெண்ணியத்தை ஆண்களால் பேசவைத்து!
பெண்விடுதலை உணர்வினை -!
என் கிராமத்துப் மக்கள் அறிவு வரை எட்டவைத்த பெரியார்!!
சுதந்திர..வேட்கையை விடுதலை உணர்வினை!
கைஊனிய தடிபோலவே – கடைசிவரை!
விடாது பிடித்திருந்தவர் பெரியார்!!
சாஸ்திரம் சம்பிரதாயம்!
ராகுகாலம் எமகண்டமென பெருத்துவிட்ட மூடத்தனத்தை!
மொத்தமாய்கொட்டி பகுத்தறிவுதீயில்!
அன்றே கொளுத்திட்டவர் பெரியார்!!
ஜாதிக் குறும்புகளின் வெறும்போக்கினை!
மதசண்டையின் வெறிப்போக்கினை!
மனிதம் பாராத நிறம் பார்த்து வகைபிரித்த காழ்ப்புணர்வினை!
ஆழக் குழிதோண்டி இன்றும் புதைத்துக்கொண்டிருக்கும்!
நம் மூடசாபத்தின் விடிவு பெரியார்