நாங்கள் எறிந்த!
ஆயதங்களைத்தான்!
நீங்கள் பற்றியிருக்கலாம்;.!
ஆனாலும்...!
நீங்கள் தெளித்த!
பொய் சாயங்களால்தான்!
எமது வழிகள் சிவப்பாகிப் போயின.!
எதுவானாலும்...!
நாம் நிற்கும் தெருவில்!
இரண்டே பாதைகள்...!
ஒன்று போர்களம் செல்கிறது!
இன்னொன்றில் எம் புறாக்கள் காத்து நிற்கின்றது.!
இரண்டு வழியிலும்!
சென்று திரும்பிய பின்!
எடுத்த முடிவென்ன..!
புறாவையும்!
கொல்வதென்றோ?!!
!
கவிதா. நோர்வே!
18.02.08
கவிதா. நோர்வே