வலி(மை) - பா.நேருஜி

Photo by FLY:D on Unsplash

எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை!
விளைவிக்கும் என்ற வரிகள்!
என் மனத்திற்குள் !
ஓடிக்கொண்டே இருக்கிறது,!
ஒவ்வொரு முறையும்!
வேலை வாய்பிற்கான!
விண்ணப்ப படிவத்தினை !
நிரப்பும் தருணங்களில்..!
எனினும்,!
ஏமாற்றத்தை தாங்கும்!
வலி(மை)யுடன்!
காலிக்கட்டங்கள்!
நிரம்பிய படிவத்தின்!
கருவறைகளை !
எழுத்துப் பிள்ளைகளை!
பிரசவித்து நிரப்புகின்றது!
எனது எழுதுகோல் - தன்!
மை என்ற கண்ணீரால்!
எதிர்பார்ப்புகளுடன்…
பா.நேருஜி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.