தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

முதுகெலும்பற்றவன்.. துரோகத்திற்கு முந்து

மகரந்தன்
01.!
முதுகெலும்பற்றவன்!
-------------------------------!
தானாகவே மூளை சுவாசிக்க!
தானாகவே இதயம் துடிக்க!
துடுப்பு இல்லாமல் நீந்துகிறேன்.!
எல்லை கடந்து!
இலக்கு இன்றி!
நடந்து கொண்டிருக்கிறேன்!
ஒரு பேரழிவின் நடுவில்.!
ஒரு பூனையின்!
கூரிய நகமுனையில் சிக்கிய!
நூல் கண்டைப்போல!
ஒரு கட்டுக்கதையின்!
கூர் வெளிச்ச முனையில்!
சிக்குண்டு கிடக்கிறது எதிர்காலம்.!
உள்வாங்கிய வயிற்றில்!
வலியின் மிச்சம்!
இன்னும் இருக்கிறது.!
தலை சுற்றுகிறது!
மூளை வேலைசெய்வதால்.!
வாழ்வின் எச்சம்!
குப்பையில் வீழ்கிறது.!
முதுகெலும்பை அழுத்திக்கொண்டு!
முதுகின்மீது-!
ஒரு கரடி உட்கார்ந்திருப்பது போல் உணர்வு.!
முதுகெலும்பா. . . ?!
அதுதான் எனக்கில்லையே !!
02.!
துரோகத்திற்கு முந்து!
--------------------------------!
. . . ஆகவே!
துரோகத்திற்கு முந்திக்கொள்.!
இருவருக்கும் இடையிலிருப்பது!
நட்புறவு இல்லை.!
அது ஒரு!
குரு-சிஷ்யன் உறவு.!
நீ உணர்த்தும் வலி!
அவன் விளங்கிக்கொள்ளும் பாடம்.!
உன் நடிப்பே கொலைவாள்!
நீ பின்னும் சூழ்ச்சியே!
கொலைக்களம்.!
உனது அதீத கற்பனைகளின் ஏவள்!
அவனைச் சூழும் தரித்திரம்.!
நீ குடிக்கும் மதுவும்!
புகைக்கும் சிகரெட்டின் தீக்குச்சியும்!
நீ புணரும் யோனியும்!
அவன்தான்.!
வாழ்வின் நோய்!
கடைசியில்-!
என்ன கொண்டு வந்து சேர்த்துவிடப் போகிறது ?!
ஆகவே-!
துரோகத்திற்கு முந்து!
இருவருக்கும்!
வாரிசுகள் உள்ளன

வந்தாள் தமிழ்மகள் தந்தாள்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
சிற்றாடை கட்டி சித்திரத் தமிழ்ப்பாவையள் !
சித்தம் தனை நிறைத்து யென் சிந்தை நிறைந்தாள் !
முத்தாரம் பூட்டி முழுமதி தரைமீது வந்தது போல் !
முப்பாலும் நான் கற்க முத்தமிழால் முடிச்சிட்டாள் !
வித்தாரம் கற்றதும் விந்தை பல புரிந்ததும் !
வித்தகி செந்தமிழ்ப்பெண் வித்தை தானென்பேன் !
சொற்பாரம் கொண்டு நல் கவிதை பல புனைவதும் !
சொந்தமாய் அவள் மொழியழகு கண்டதினால் !
நிற்பாரம் தாங்கிடும் இப்பூமிப் பாவையைப் போல !
நித்திலங்குமரி தமிழ் எனைப் பொறுமையுடன் வளர்த்திட்டாள் !
தொலைதூரம் வாழ்ந்தும் நெஞ்சில் தமிழன்பு நிலைப்பது !
தோகை தமிழ்த்தோகையவள் அருளன்றி வேறில்லை

எதற்கு சிபாரிசு

சிலம்பூர் யுகா துபாய்
உன்னை!
உரசிச்செல்லும்!
தென்றல்!
விட்டுப்பிரிந்ததும்!
செத்துத்தொலையும்!
மழைத்துளி!
மௌனமாய்வந்து!
சங்கீதமாகிப்போகும்!
காற்று!
எட்டிஉதைத்தாலும்!
ஒட்டிக்கொண்டேயிருக்கும்!
உடை!
தூக்கிலிட்டாலும்!
வெறுக்காத!
கூந்தல்பூக்கள்!
இப்படி!
கடந்துசெல்லும்!
அனைத்துமே-உன்னை!
காதலிக்கும்.!
நீ!
அளவோடு!
பூத்த பூ!
என்!
அணு அனைத்தையும்!
அடியோடு!
சாய்த்த தீ!
நானுன்னை!
காதலிப்பது குற்றமா?!
ஒரு!
மகா கவிஞனின்வாசலில்!
மண்டியிட்டுக்கிடக்கும்!
வார்த்தைகள் மாதிரி!
உன்!
இதயத்தின்முன்!
என்காதல் கோரிக்கைகள்!
எதற்கு!
சிபாரிசுசெய்வாய்!
நம் திருமணத்திற்கா,!
இல்லை!
என் மரணத்திற்கா?

வனதேவதையின் போராட்டம்

புதியமாதவி, மும்பை
மண்ணில் ஆழப்பதிந்த!
வேர்களின் வலியுடன்!
முறிந்து விழுகிறது!
எங்கள் கிளைகள்.!
ஒவ்வொரு பூக்களாய்!
ஒவ்வொரு இலைகளாய்!
தேடித் தேடி!
தொடுவதில்லை காற்று!
!
காற்று விலக்கிய!
இலைகளும்!
காற்றை விலக்கிய!
மலர்களும்!
இருப்பதில்லை எங்கள்!
தோட்டத்தில்.!
!
இலைகளைக் கிழிக்கும்!
காற்றின் கைகளை!
மலரிதழ்களே!
முத்தமிடும் போது!
மன்னிக்க முடிவதில்லை!
எங்கள் மரங்களை.!
எங்கள் பயணத்தில்!
எப்போதும்!
எங்களுக்காய்!
வேர்கள் சுமக்கின்றன!
முள் கிராடங்களை.!
*!
புயலின் போர்வையில்!
காற்று நடத்திய!
வன்புணர்ச்சியில்!
பச்சை இலைகள்.!
வரிய இருட்டில்!
ஆயிரம் கைகளுடன்!
கிளைகளின் கண்ணெதிரே!
இலைகள் மீது வல்லாங்கு.!
சருகளாய் உதிர்ந்தப் பிறகும்!
தொட்டுப் பார்க்கிறது!
மீண்டும் காற்று.!
அதை விட்டுப் பறக்கிறது!
மண்தேடி!
மண்ணின் வேர்த்தேடி!
இலைகள்.!
*!
வாயு மண்டலத்தில்!
வனதேவதைகளின்!
நிர்வாணப் போராட்டத்தின்!
சாட்சிக் கல்லாய்!
ஊர் எல்லையில்!
ஆடைகள் களைந்து!
உறங்கிக் கொண்டிருக்கிறது!
மாசானத்து அம்மன்

வேண்டும்

இரா சனத், கம்பளை
மரணித்து போயுள்ள !
மனிதாபிமானத்தை !
மீண்டும் மீட்டெடுக்க !
மனிதன் மனிதனாக!
மாறவேண்டும்!!
இல்லையென்ற வறுமை மொழி !
இவ்வுலகில் இருந்து ஒழிய !
இருப்பவன் மேலதிகத்தை!
இழக்க முன்வரவேண்டும்!!!
உரிமைகள் மறுக்கப்பட்டு !
ஊமைகளாய் வாழும் !
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு !
அடக்குமுறையிலிருந்து !
விடிவு வேண்டும்!!!!
பணத்தை அங்கீகரித்து !
குணத்தை நிராகரித்து !
மமதையில் வாழும் !
மனிதன் அன்பை !
நேசிக்க வேண்டும்!!!!!
உதவியின்றி தவிப்போருக்கு !
உதவுவதற்கு முன்வருவோர் !
இவ்வுலகில் நீடூழி வாழ வேண்டும்

இயற்கையே எய்தினால்

பாரதிமோகன்
…?!
----------------------------------!
நதி எங்கள் வாழ்வென்று!
நாகரீகம் வளர்த்த!
கரையில்…!
நான் என்ன சொல்ல !
விதியென்றானது!
நதியின் நிலையே!
ஒடையாய்…!
ஒரு ஒரத்தில்!
அடடா!
நாளைய மனிதனுக்கு!
மிச்சம் என்ன இருக்கும்!
இயற்கையே எய்தினால்…

நிழல் குடை

கோபிநாத்
உன்னில் நின்று தன்னை காத்தவர்கள்-இன்று!
உன்னை காக்க மறந்து விட்டனர்!
உன்னை தொடாமல் சென்றதில்லை-இன்று!
உன்னை தொட விருபுவதில்லை!
'பழையன கழிதல் புதியன புகுதல்'-இன்று!
உன் நிலையும் அப்படித்தான்!
பல சாதனையாளர்களை பார்த்தவன் நீ-இன்று!
உன் சாதனையே பார்க்க மறுத்தது ஏன்?!
நிரந்தரமற்றவன் நாங்கள் என்றிருந்தோம்!
நீயும் அப்படிதானா!!
-கோபிநாத்

உறவு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
எனக்கும் உனக்கும்!
உள்ள உறவு!
தொப்புள் கொடியில் வெட்டப்பட்டதாக!
நீ நினைக்கலாம்!
நினைவுகள் எதுவாயினும் சரி!
ரத்த உறவுகள்!
புனிதமானவை....!
பெறுமதியானவை....!
பலமானவை உனக்கு!
எனது பலநூறு!
நட்புள்ளங்களை விட!
பாசத்தினை சுவாசமாக்கிக் கொண்டே!
மூச்சுக்களோடு!
கலந்திருக்கும்!
உணர்வுகள்!
உடலுக்குள் குருதியாக பீச்சும்!
உணர்ச்சிகளின் துடிப்பு உனக்கு புரியாதவை!
உனக்கு உள்ளது போல்!
நட்புள்ளங்கள் எனக்கும் உண்டு!
ஏனெனில்!
நான்!
பெண்ணினத்தை சேர்ந்தவர்களாக!
இருக்கிறேன்!
பொறுமையின் சின்னமாக!
வாழ்ந்து வருகிறேன்..!
எனக்கும் உனக்குமிடையிலுள்ளது!
ஒரே இரத்தத் துளியில் கலந்ததே!!
என் உறவுக்கான!
தொடர்பு அல்ல!!
தொடர்புகளுக்கான!
உறவுமல்ல!!!

என் மகளே

வி. பிச்சுமணி
வானம் !
காற்றை கொண்டு!
மேகம் குலைத்து !
செய்த பொம்மைகளை !
உனக்காக வாங்கசென்றேன் !
கரடி பொம்மையினை !
எடுப்பதற்குள் !
யானையாய் மாறியது !
காற்றில் !
கோபம் கொண்டு !
வானத்தின் கன்னத்தில் அறைய !
கருத்தது மேகம்!
வழிந்தது மழை கண்ணீர் !
காற்றும் மழையும் !
நின்றதால் !
உருகுலையா பொம்மை !
வாங்கி !
உனக்கு அளிக்க வந்தால் !
உடல் பொம்மை!
விட்டு விட்டு !
எனை தேடி !
உன் உயிர் வானுலகில் !
என் மகளே

விவாகரத்து..அவள் விழியும் எனது

மன்னார்.பி.அமல்ராஜ்
பார்வையும்!
01.!
விவாகரத்து..!
-----------------!
என்னை!
சிந்திக்க வைத்தவளும்!
நிந்தித்து போனவளும்!
அவள்தான்.!
ஒரு இரவில்!
ஒடிந்த பாசம்!
விடிந்ததும் - ஒரு!
மடிந்த வேசமாய்!
இடிந்து போனகதை!
என்னைத்தவிர!
யாருக்குத் தெரியும்..!
முதல் நாள்!
பத்திரம் என்றவள்!
மறுநாளே!
பத்திரத்தோடு வந்தாள்.!
என் காதலை!
கட்டிப்போட - ஒரு!
கையொப்பம் வேண்டுமாம்.!
ஒரு கிறுக்கல் கிறுக்கியதில்!
அவள் வடக்கே போனாள்!
நான் கிழக்கே போனேன்!
எங்கள் பிடிவாதம் மட்டும்!
மகன் தலையில்!
மண்ணை சொரிந்தபடி..!
முற்றுப் பெற்றது!
எங்கள் விவாகம்.!
காரணமோ - அந்த!
மோசமான விவாதம்.!
அவள் விடுவதாய் இல்லை!
நானும் முடிப்பதாய் இல்லை.!
அவளும் நானும் முட்டியதில்!
முதல் பிறந்தது!
பிள்ளை!
இப்போ பிறந்தது!
தொல்லை.!
நேற்றுவரை!
என்னை நம்பியவள்!
இன்றுமுதல் - தன்!
வக்கீலை நம்புகிறாள்.!
பறவாயில்லை!
எனது தெரிவில்!
தவறிளைத்தவள்!
இந்த வக்கீல் தெரிவில்!
சரிசெய்திருக்கிறாள்.!
காரணம்!
குடும்பங்களை பிரிப்பதில்!
கெட்டிக்கார வக்கீலாம்!
அவர்.!
ஊரார் பேசிக்கொள்கிறார்கள். !
02.!
அவள் விழியும் எனது பார்வையும்!
-------------------------------------!
கடல் குளித்து வந்தவன்!
இந்த முத்தை!
என் வீதியில்!
தவறி போயிருக்கவேண்டும்..!
சந்தேகமே இல்லை.!
இவள்தான்!
படைத்திருக்க வேண்டும்!
பிரமனை.!
அவள் !
விளித்ததில்!
விழுந்தவன் - இன்னும்!
முளித்ததாய் இல்லை.!
என்!
விழிகளில் கிடக்கும்!
அவள்!
விம்பங்களை விலக்கியபடி!
எத்தனை நாள் - அவளை!
கனவிலே முத்தமிட்டுக்கொள்வது..??!
அவள்!
வந்துபோகும் கனவுக்கும்!
கற்பிருக்கவேண்டும் -!
அதிகம் வெட்கப்படுகிறதே..!
அவளைப்பார்த்ததில்!
சுட்ட இரத்தம் - இன்னும்!
சூடாறவில்லை!
சூடேற்றுகிறது தவிர..!
வலிந்து இழுத்த!
அவள் பார்வை!
இன்னும் என்!
வலது சோணை அறையில்!
வற்றாத குருதியை!
வடித்து குடித்து!
விரதம் கிடக்கிறதே..!
என்னமோ!
அவள்!
உருண்டை விழிகளுக்குள்!
பிரண்ட பார்வை!
அங்கேயே!
உருள்கிறதே தவிர - அங்கிருந்து!
விலகுவதாய் இல்லை