படிக்கும் புத்தகத்தை!
பறித்துக்கொண்டு ஓடுகிறாய்!
புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்!
படிக்கிறேன்...நான்!
மாறாத மழலைப்பாடல்களை!
மறந்து மறந்து பாடுகிறாய்!
மறக்காமல் மீண்டு வருகிறது!
எனது பால்யம்!
பூச்சாண்டி என்றால் என்னவென்றே!
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு!
காட்சில்லாவையும் டைனோசரையும்!
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது!
சோறு ஊட்ட

ஜெ.நம்பிராஜன்