ஊதா நிற யானை ! - சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Photo by FLY:D on Unsplash

சுத்தமாய் வெள்ளைத்தாள்!
சிதறிய கிரெயோன் கலர்கள்!
இரண்டு கோடுகள்!
ஒரு கோணல் வட்டம்!
நம்பிக்கையோடு!
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று !
குழந்தைக்கோ கர்வம்!
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. !
யானைக்கு ஊதாநிறமா?!
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை!
இரண்டு கால் யானை எங்குள்ளது!
அடித்துத் திருத்தினார் !
குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக!
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க!
நடந்து போனார் ஆசிரியை. !
சமீலா யூசுப் அலி, மாவனல்லை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.