01.!
பிரிவின் துயர்!
------------------------!
ஊரில் உள்ள!
கடவுளையெல்லாம் வேண்டி!
கண்ணீரோடு அம்மா….!
புத்தியோடு பிழை!
கவனமாய் இரு!
வழக்க வாசிப்போடு அப்பா……!
அடிக்கடி பேசு!
யாரிடமும் சண்டைபோடாதே!
அக்கறையோடு தங்கை……..!
வார்த்தைகள் தேடும்!
மெளனத்தின்!
பிரிவு துயரோடு மனைவி…..!
எத்தனையாவது!
படிக்கும் போது வருவீங்க!
ஆவல் கேள்வியோடு மகள்……!
இத்தனையவும் கடந்து!
நகர்ந்து போகின்றேன்!
அயல் நாட்டு!
அடிமை வேலைக்கு!!
!
02.!
இயலாமைக்கோர் நன்றி.!
---------------------------------!
உன் வருங்கால கணவனிடம்!
என்னை !
உன் சினேகிதனாய்!
அறிமுகப்படுத்திய!
அந்த நொடியில்!
நன்றி கூறிக்கொண்டேன்....!
உன்னை காதலித்த!
உண்மையை!
உன்னிடம் சொல்ல விடாமல்!
ஊனமாக்கிய!
என் இயலாமைக்கு
மு.கோபி சரபோஜி