எல்லாமே முடிஞ்சு போய்ச்சு - பர்ஸான்.ஏ.ஆர்

Photo by Paweł Czerwiński on Unsplash

பின் இரவின் கருக்களினூடாய்!
ஆந்தையின் மரணச்செய்தி கேட்டேன்.!
என் இருதயத்தில் அடிக்கடி மோதிவிடும்!
ஒரு சுவாசத்திற்கான படியாய்!
இந்த ஆந்தையின் அலறல் விழும்.!
என் இரவுகளின் கடத்துகைக்கு!
மிக உட்சாகமாய் துணைவருவதும் இதுவே.!
ஆனால்,!
இறைவனின் விதிக்கோலங்களில்!
வாழ் நாட்களிற்கான இணைபாடியாய்!
இணைந்த அலறல்களுடன் வாழ்ந்தோம்.!
அன்பின் மையச்சுவையின் திளைத்தலில்!
பல நூறு காலம்!
உயிர்ப்புப்பெற்ற ஆந்தைகளாய் இருந்தோம்.!
சற்றென்று,!
எங்களின் வாசஸ்தளத்தில்!
மிகப் பெரியதொரு விண்கல் விழுந்து!
நூற்றாண்டுகால மரக்கிளை மாளிகையை!
அடையாளமின்றி துவைத்துவிட்டது.!
அன்று அலைந்த ஆந்தையின்!
மரணச்செய்தி இன்று கேட்டது.!
நிமிர்ந்தும் பார்க்க முடியாமல்!
என்னை விட்டுச்சென்றது அலறும் ஆந்தை.!
எல்லாம் முடிஞ்சு போய்ச்சு..!
!
01.01.2008
பர்ஸான்.ஏ.ஆர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.