அண்ட வெளியெங்கும் !
அல்லாடித்திரிஞ்சு !
காதுகிழியும் வரை !
ஓலமிட்டு ஓலமிட்டு !
விதியோடும் !
மதியோடும் !
போட்டியிட்டு !
களைத்தவளானேன் !
சுற்றியிருந்த இருளில் !
நட்சத்திரங்களின் !
பிரகாசம் கடுகளவானது !
விண்கலங்களின் !
அதிர்வொலிகள் !
அண்டவெளியெங்கும் !
அதிர்ந்து கொண்டேயிருந்தது !
சுற்றியிருந்தவர்களின் !
உருவங்கள் !
பார்வைக்குளிருந்து !
வெளிறிப்போய் !
சற்றுக் கணங்கள்கூட !
ஆவதன் முன் !
விண்வெளியினூடே !
பயணம் சொல்லிலடங்கா !
வேகத்துடன் !
ஆரம்பமானது !
எங்கே தான் போகிறேன்? !
வினாவுக்கே விடைதெரியவில்லை !
பீதி பெருக்கெடுக்க !
பழகிய பாசங்கள் !
நினைவினில் நீழமாக !
இத்தனைக் கூடாகவும் !
நாதியற்ற மனிதனாய் !
பரந்திருந்த பால்வீதியிலே !
பயணித்துக்கொண்டிருந்தேன் !
என் !
மூர்ச்சையை நிறுத்திவிட்ட !
உடலைவிட்டுப் பிரிந்து !
எதிக்கா