எண்ணற்ற ஒழுங்குகளை!
கருக்கொண்டிருந்த பாறையில்!
வேண்டாதவை என!
தான்!
வரையறுத்துக்கொண்ட பகுதிகளை!
களைந்தேடுத்தவாரிருக்கிறான் சிற்பி!
ஒன்று இறுதி செய்யப்பட்டபின் !
மற்றொன்று வெளியேறிவிடுவது !
என்பதான நியதியின்படி !
உளி பிளக்க !
நிலம் சேருகின்றன !
ஏனைய ஒழுங்குகள்!
ஒழுங்கற்றவையாய் !
வெறும் கற்குவியலாய்
ப.தியாகு