அணங்குகள்... இங்கே இருக்குது!
----------------------------------------------!
1.அணங்குகள்!
வாசற்படி நின்று!
வசந்தப் பூக்களை!
கண்களில்!
நிதம் நிதம்!
மலர்விக்கின்ற!
மாதவிக் கொடிகள்.!
எப்போதோ!
சந்தோஷிக்கப் போகின்ற!
ஒரு பொழுதிற்காக!
காத்திருக்கின்ற!
சமுத்திர விழிகள்.!
புத்தகங்களைப்!
பரிமாறி!
இதயங்களை!
விலைப்பேசும்!
தரகர்கள்.!
நிகழ்காலங்களை!
நிர்வாணமாக்கிய!
துச்சாதனர்கள்.!
கடற்கரை மணலில்!
நாணத்தைப் புதைக்கும்!
நெருப்புக் கோழிகள்.!
புலிக்குகை உலகில்!
எதற்கோ அலையும்!
பேய்த்தேர் மான்கள்.!
!
2.இங்கே இருக்குது ஜாதி!
அல்லி குளக்கரையில்!
தாமரை!
அலரும் புலர்பொழுதில்!
குளிக்கும் மலர்களோ!
ஜாதிப் பூ!
சேரி உடல்களுக்கு!
அங்கே!
தடை விதிப்பு.!
தினம் தினம் நிகழும்!
எம் சந்திப்பு!
இன்றென்ன ஆனது!
நெஞ்சில் தவிப்பு!
இன்னும் வரவில்லை!
என் காதலி!
ஏன்தான் விடிந்ததோ!
காலைத் தீ.!
குனிந்த தலை!
குனிய குளிப்பாள்!
குள மீன்கள்!
கண் பார்க்க நகைப்பாள்!
எத்தனைக் கோடி கதிர் வீசும்!
இளைய!
என் காதலி மேனியிலே.!
இப்படி பறந்த!
என் மனக் குதிரை!
இடறி விழுந்தது!
குரல் கேட்டு.!
�யாரடா படுவா படித் துறையில்!
என்ன உன் ஜாதி?!
படித்த திமிர்�......!
பண்ணையார் நின்றார்!
என் எதிரில்!
பயத்தில் உறைந்தேன்!
நான் சின்ன ஜாதி.!
அம்பது சுதந்திரம்!
கண்டது பூமி!
ஆனாலும் என்ன!
இங்கே இருக்குது ஜாதி.!
-ஜோதி - த.ஜெயபால்
ஜோதி - த.ஜெயபால்