முதிர்க் கன்னிகள்.. எங்கள் இந்திய
இனியஹாஜி, தோஹா - கத்தார்
தேசம்!!
01.!
முதிர்க் கன்னிகள்!
---------------------!
நாங்கள்!
பிரசுரிக்கப் படாத!
புத்தகங்கள்..!!
எங்களில்!
இலக்கிய நயமிருந்தும்!
இலக்கண முறையிருந்தும்!
கைக் கூலி!
கொடுக்கப் பண மில்லாத!
குறையினால்!
படிக்கப் படாமல்..!
கைப் பிரதியாகவே..!
காலமெல்லாம்...!!
எங்களை!
விலை கொடுத்து!
வாங்கிப் பிரித்து!
வார்த்தைகளில்!
விழும் அமுதம் பருகி!
வாக்கியங்களின்!
இன்பம் சுவைத்து!
முழுவதும் படிக்காமல்!
அவசர... அவசரமாய்...!
முன் அட்டையில் மயங்கி!
வாடைகைக்கு கிடைக்குமா - என!
வாசகன் கேட்கிறான்?!
என்ன சொல்வது..!
ஏளனம் செய்வதில்!
எவர்க்கும் சளைத்தவனல்லவே!
எந்தமிழ் வாசகன்!!!!
எழுதியவரே எம்மை!
ஏரெடுத்துப் பாராதபோது!
வீணில் வாசகனைக் குறைகூறி!
விளையும் பயன் என்ன..??!
பெற்றோரே...!
மற்றோரே...!
கரையான் அரித்து!
கரைந்து போகுமுன்னே..!
காமுகனின் கோரப்பசியால்!
களங்கப் படுமுன்னே...!
கரையேறத் துடிக்கின்றோம்..!
காப்பாற்ற அழைக்கின்றோம்..!
இன்னும் நங்கள்!
பிரசுரிக்கப் படாத!
புத்தகங்கள்..!!!!
!
02.!
எங்கள் இந்திய தேசம்!!
----------------------------!
இனம், மொழி, வழி பலவாயினும்!
இணைந்தே வாழும் இந்திய தேசம்..!
இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள்...!
இணை பிரியாத எங்கள் தேசம்!!
விந்திய மலை போல் வீழ்ந்திடாத!
வீரமும், வலிமையும் மிகைத்த தேசம்..!
மண் வளமும், மனித வளமும்!
மிகத்தே நிற்கும் மாண்புறு தேசம்!!
வேற்றுமையில் ஒற்றுமை காணும்!
வித்தியாசமான வியப்புறு தேசம்..!
ஆற்றுமை, ஆற்றாமை இருந்திடினும்!
இயல்பாய் வாழும் இன்புறு தேசம்!!
கட்சிகள், காட்சிகள் கலைந்திருந்தாலும்!
காண்போர் கண்படும் களிப்புறு தேசம்..!
கனவுகள் நனவுகளாய் ஆகாவிடினும்!
கனிந்தே வாழும் விழிப்புறு தேசம்!!
நதிகள் இணைந்து, நன்மைகள் வளர்ந்து!
மதவெறி மாய்ந்து, மனிதம் மலர்ந்து..!
ஏழ்மை நீங்கி.. தேசம் ஏற்றம் பெற்றிட!
எடுப்போம் சபதம்.. இன்றே நாமும்