பெற்றவள் மடி தன்னில்!
எந்தன் தலை சாய்க்க!
செழித்த கருங்குழல் காட்டினுள்!
விரல்கள் உலாவி வருடலால்!
விழிகளுக்குத் திரை இட்டு!
சொர்க ரதத்தில் செவ்வானே!
அமர்ந்து சிரித்து வரும்!
உறக்கம் எனும் தோழனைத்!
தழுவும் சுகம் யாரறிவரோ?!
-வினோத்குமார் கோபால்
வினோத்குமார் கோபால்