மறக்க வைத்த.. எ (உ)ன் வாழ்க்கை - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Tengyart on Unsplash

மறக்க வைத்த நினைவு.. எ (உ)ன் வாழ்க்கை !
01.!
மறக்க வைத்த நினைவு !
-------------------------------------!
உன்னைப் பொத்தி வைக்கத்தான் !
முயல்கிறேன் எனக்குள்.!
நிலம் கீறி வெடிக்கிறது !
உன் நினைவு.!
பூவின் அனுமதி கேட்டுப் புறப்படுவது !
இல்லை பூ வாசம்! !
அப்படித்தான் நீயும் !
இயல்பாய்ப் புறப்பட்டு விடுகிறாய்.!
நீ வரும் வரையிலும் !
நீயில்லாத மனத்தைக் !
காவல் காப்பது கடினம்.!
குழந்தையைத் தொலைத்து விட்டு !
தேடி அலையும் தாய் போல்!
உன்னைத் தேடி ஊரெல்லாம்!
அலைகிறது என் மனது!!
எங்கு தேடியும் கிடைக்காமல் !
வெறுங் கையோடு திரும்புகையில் !
புதையலாய் உன் பூ முகம்!
சிரிக்கிறது என்னைப் பார்த்து!!
என்னை அலைய வைத்த !
கோபம் கூட மறக்கச் செய்கிறது !
உன் ஒற்றைச் சிரிப்பு!! !
02.!
எ (உ)ன் வாழ்க்கை !
----------------------------!
உனக்கொரு வாழ்க்கை !
எனக்கொரு வாழ்க்கை !
இல்லை உனக்கு! !
உன்னைப் பொறுத்தவரை !
உலகம் ஒன்றுதான் !
எல்லாரும் எல்லாமும் !
எப்போதும் ஒன்றுதான்! !
உனக்காகவும் இல்லாமல் !
எனக்காகவும் இல்லாமல் !
என் வாழ்க்கைதான் !
இடையிலிங்கே !
அடிபட்டுப் போய் விடுகிறது
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.