அதனால்தான்… அதுதான்…காதல் - செண்பக ஜெகதீசன்

Photo by Jayden Collier on Unsplash

என்பது…!
!
01.!
அதனால்தான்…!
--------------------!
கண்ணாடி பார்க்கும் அழகை !
ஒரு !
கண்ணாளன் பார்க்க வராததால் !
கண்ணாடியில்லாத ஜன்னலோரம் !
கண்ணீருடன் காத்திருக்கிறாள் !
அவள் !
பெண்ணாய்ப் பிறந்ததை எண்ணி…!!
02.!
அதுதான்…!
---------------!
இது நடந்திடாவிட்டால் !
இன்னொன்று சேர்ந்திருக்கும் !
இந்தியக் குப்பைத்தொட்டியில் - !
இவர்கள் ஆரம்பித்த !
காதல் ஒத்திகை அரங்கேறியது !
காவல்நிலையக் கல்யாணமாக…!!
03.!
காதல் என்பது…!
---------------------!
கண்ணில் காண்பனவெல்லாம் !
காதல் அல்ல, !
கல்லூரி வகுப்புகளில்.. !
கடற்கரை மணல்வெளியில்.. !
கார் வண்டி வாகனங்களில்.. !
கோவில் தூண்மறைவில்.. !
குளக்கரை படித்துறையில்..!
காட்டினில் மேட்டினில்.. !
காண்பதெல்லாம் !
காதல் அல்ல, !
அது- !
ஆண். பெண் உடல்பசியை !
ஆற்றிடத்தான் ஆராய்ச்சி…! !
அங்கே, !
இருப்பதற்கே !
இடம் இல்லாதபோது !
இடர்ப்படுத்தும் வறுமையிலும் !
இதயம் ஒன்றுசேர்ந்ததாலே !
இணைந்திருக்கும் அந்த !
இருவரிடம் !
இருப்பதுதான் காதல்…!!
!
-செண்பக ஜெகதீசன்…
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.