வரம் வேண்டும் தாயே
சாந்தினி வரதராஐன்
கருவினிலே எனை சுமந்து கண்போல் காத்தவளே !
உருவாய் எனை இவ்வுலகிற்கு அளித்தவளே !
உறவுகள் ஆயிரம் உடனிருந்தும் என்ன !
உனைப்போல் ஓர் தெய்வம் !
இவ்வுலகில் உண்டோ ? !
இமைகளை நனைத்து இறங்கும் கண்ணீரில் !
சுமைகள் கரையவில்லை உன் சுகமும் எனக்கில்லை !
கனவில் கூட நீ வருவதில்லை !
காத்திருப்பில் காலயெல்லையுமில்லை !
சுகமாய் உன் மடிசாய்ந்து துயரணைத்தும் நீ கேட்க !
ஓருமுறை நான் அழவேண்டும் அதற்காய் ஒரு வரம் வேண்டும் !
மண்ணிடையில் உயிர்த்தெழுந்து மரமதனை பிடித்து நின்ற !
என் அன்னையே எங்கு சென்றாய் ? !
ஏன் என்னை பிரிந்து சென்றாய் ? !
உனைவிட்டு வெகுதூரம் விலகிப்போன மகள் - இனி !
எந்தப்பிறப்பெடுத்து உன்னருகே வந்தமர்வள் ? !
எனைத்தொட்டு தழுவி என் கண்ணீர் துடைப்பதற்கு !
என்று வருவாய் நீ ? !
ஏன் விலகி சென்றாய் அம்மா ? !
என்னை தினம்தேடி ஏங்கி வழிபார்த்த -உன் !
சின்ன விழியிரண்டை யார் மூடி து£ங்கவைத்தார் ? !
கன்னம்கரிய இருள் காவலுக்கு துணை நிற்க !
உன்னை எரித்தனரோ ? !
அந்த தீவந்து உனை அணைத்ததுவோ ? !
தூரத்தொடு வானம் எனை கரம் நீட்டி அழைத்ததனால் !
தூர விலகி வந்தேன் உன் நினைவைமட்டும் சுமந்துவந்தேன் !
ஆளக்கடல் கடந்து ஓராயிரம் மைல்நடந்து !
வேரிடைவிட்டகன்ற விருட்சமாய் நான்வாழ !
வேண்டியதென்னவென்று இன்னும் விளங்கவேயில்லையம்மா. !
மானுடம் மையம்கொண்ட வசதிகள் கிடைத்துமென்ன - இப் !
பொய்யான உலகினிலே புகழுடன் வாழ்ந்துமென்ன !
எனக்காய் மெய்யுருகி எனைவளர்த்த அன்னையவள் !
பொன் முகத்தை காணமல் இப்புவிதனிலே வாழ்வது ஏன் ? !
சாந்தினி வரதராஐன். !
ஜேர்மனி