தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இறகு

சிதம்பரம் நித்யபாரதி
விரைந்திடும் பறவையின் !
பின்கால் விடுத்துப்!
பிரிந்து... மிதந்து...!
விழுந்தது.!
கருப்பு இறகென!
என் மனம் கொத்துமுன்!
பாலிதீன் என்பது உறைக்கும்.!
எதுவென நினைத்து!
அது கொத்தியதோ?!
என்னவாய் எண்ணிக்!
கீழ் உதிர்த்ததுவோ?!
---சிதம்பரம் நித்யபாரதி

சொல்லாமல் நீயும்..கேட்காமல் நானும்

சத்தி சக்திதாசன்
ஏதோ ஓசைகள்!
ஏதோ ஆசைகள்!
ஏதோ பாஷைகள்!
எங்கே தோன்றின ?!
ஆதியின்!
ஆரம்பமும் தெரியாமல்!
அந்தத்தின்!
முடிவும் புரியாமல்!
ஆடும் நாடகத்தின்!
அர்த்தம் தான் என்ன?!
சொல்லத் தெரியா!
வார்த்தைகள்!
சொல்லத் துடிக்கும்!
உணர்வுகள்!
சொல்ல முடியா!
வேளைகளில்!
சொல்லியும் புரியா!
உறவுகள்!
இதுதான் நிலையென!
எவர்தான் கூறுவர்!
அவர்தம் திசையினில்!
ஆரம்பம் என்!
பயணங்கள்!
நானறியா என்னுள்ளே!
எனக்குத் தெரியாத!
எண்ணங்கள்!
எப்போது, எப்படி!
புகுந்ததென!
எப்போதும் யோசனை!
எனையறியும் வேளையில்!
என்னருகில் நீயிருந்தால்!
உனைப் புரிந்த வகையை!
உனக்காகப் பகர்ந்திடுவேன்!
அதுவரை காத்திருப்பாயா?!
அல்லாவிடில் பறந்திடுவாயா ?!
சொல்லாமல் நீயும், அதைக்!
கேட்காமல் நானும்

கனவு

வேதா. இலங்காதிலகம்
தரை மீது மனிதக் கனவு மேடை!
உரையில்லாக் காட்சிக் கடை.!
திரை மூடிய நாடக மேடை!
நுரையின்றி வளரும் கொடை,!
அரைகுறையிலும் சுருங்கும் கொடை.!
கரையில்லாக் கனவு ஓடையில்!
நுரைக்கும் பயப்பிராந்தி வாடை.!
விரைந்த இன்பமும் பலருக்கு விடை.!
கனவு ஓர் இலவசச் சுவை.!
மனக் கடல் ஆழக் குமிழிகளிவை.!
கனவில் வித்திடும் முளைகள்!
நனவாகியும் கனியும் விளைவுகள்.!
கனவு மாயா உலகத்தில்!
மனதின் நினைப்பும், நினையாததும்!
வனப்புச் சிறகு விரிக்கும்.!
கனத்த எண்ணங்களும் பெருக்கும்.!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
13-07-2008

துரோகம்.. அந்நியளாய் ஆன கதை

தீபா திருமுர்த்தி
01.!
துரோகம்...! !
-------------------- !
ஒவ்வொரு !
பேருந்து புகைக்கும்பின்னால் !
ஆண்மை கலந்த !
உன் வாசம் !
வருகிறதா என !
எதிர்பார்த்துக் !
கழிந்த காலங்களை எல்லாம் !
கட்டி இழுத்து வந்து !
முட்டி மோதி !
ஒட்டிப் பார்க்கிறேன்.., !
நீ !
வந்த பிறகும் !
வழக்கமான !
உன் வாசம் !
வாடகைக்கு விடப்பட்டதாய்..., !
மொத்தமாய் !
விற்றுத் தீர்க்கப்பட்டதாய்.... !
உணர்கிறேன்! !
வழி நெடுகிலும் !
சவப் பூக்களின் !
தூவல்! !
கண்பூக்களில் !
நேச இதழ்களின் காவல்! !
எனக்குத் தெரியும் !
மண் மூட்டை சுமக்கும் !
நீ !
மரகதங்களின் !
மகத்துவம் அறியவாப் போகிறாய்? !
மனத்துக்குள் !
பூத்த ஈரம்...! !
மெத்தைக்குப் !
புதிய மல்லிகை! !
!
02.!
அந்நியளாய் ஆன கதை....! !
----------------------------------------!
உடல் நலமும் !
உளநலமும் !
உனதன்றி போன !
ஒருநாளில் !
உனை நோக்கிச் சிறகடித்த !
மனப் பறவை !
இல்லம் கொண்டும் சேர்த்தது! !
உள்ளே வர !
அனுமதி கேட்கும் விதமாய்..., !
கதவுத் தட்டலின் !
ஓசை! !
உதறித்தள்ளியது !
உறக்கச் சிறையிலிருந்த !
உனது விழிகளை! !
மெதுவாய் !
விழி திறந்தாய்! !
வழக்கமான !
விசாரிப்புகழுக்கிடையே !
சமயலறை நிறைத்தன !
பையிலிருந்த !
உணவு டப்பாக்கள்! !
உணவளித்துவிட்டு !
உடனே கிளம்பிவிடுவதாய்த் தான் !
உச்சரித்தது உள்ளம் !
முதலில்..., !
வேண்டாமென நாச்ரித்தது !
அடுத்தடுத்த நிமிடங்களில் !
அதே உள்ளம்! !
சாப்பிட எழுப்பும் போதெல்லாம் !
தலைவலியும் !
கைகால் குடைச்சலும் !
குடைந்தெடுப்பதாய் !
உரைத்தாய்! !
எனக்கும் !
ஆசைதான்! !
தைலம் தேய்க்க.... !
நிமிர்த்தி உட்காரவைத்து !
பல் தேய்த்து விட்டு !
கைத்தாங்களாய் !
அழைத்துச்சென்று !
வாய் கொப்பளித்துவிட

ஈழத்து அகதியாய்

றஞ்சினி
எதுவுமே!
தெரியவில்லை நண்பனே!
கனவிலும் கேட்க்கும்!
உறவுகள் ஓப்பாரி!
குருதி அறியா!
என் குழந்தைகள்!
குருதியாய்!
அழுது அழுது!
காய்ந்த விழிகள்!
குதறிக் கிளிபடும்!
என்சகோதரி உடல்கள்!
சர்வதேசமே காப்பாற்று!
கடசி நிமிடம்வரை!
கதறிய குரல்கள்!
நந்திக்கடல் சாட்ச்சியாக!
தீயுள் , மண்ணுள்!
புதைக்கப்பட்டதை!
எரிக்கப்பட்டதை!
பாராமல் இருந்த!
கொடிய மனிதர்களை!
முடியவில்லை நண்பனே!
ஓடிவிழையாடி!
இயற்க்கையைத் தின்று!
நேரங்கள் மறந்து!
குலாவித்திரிந்ததும்!
என் அன்னையின்!
உடல் சங்கமமானதும்!
வன்னிமண்ணில்!
யாரும் நினைத்திரா!
பொழுதொன்றில்!
அன்நியர் புகுந்து!
கால் பதித்ததில்!
அமைதி அழிந்து!
குருதி ஓடுகிறது!
என் வன்னிமண்ணில்!
பாடித்திரிந்த பறவைகளும்!
கனவுகள் வளர்த்த!
இழயவர்களும்!
கூச்சல்போட்ட சிறுவர்களும்!
குலாவித்திரிந்த பெண்களும்!
கூடிப்பேசிய வயதினரும்!
காணாமல்போயினர்!
அள்ளி அள்ளி!
வழங்கிய மக்கள்!
கை ஏந்தித்!
தவிப்பதை!
முடியவில்லை நண்பனே!
புதைகுழிகள் இப்போ!
நவீனமாகி!
தடயங்கள் அழிக்கும்!
எரிகூடங்களாகிறது!
கருகிய மனிதர்கள்!
கடலில் கரைகிறார்!
காற்றில் இப்போ!
நறுமணம் இல்லை!
கடல் இப்போ!
நீலமும் இல்லை!
வானத்தில் இப்போ!
வர்ணங்கள் இல்லை!
முடியவில்லை நண்பனே!
எதுவும்!
இன்று என்னிடம்!
எஞ்சியிருப்பது!
ஈழத்து அகதியின்!
வலிகள் மட்டுமே

மேகம், இடி, மின்னல், மழை.. வன்முறை

மீன்கொடி- கோவிந்தராசு
மேகம், இடி, மின்னல், மழை வண்ணம்.. வன்முறை!
01.!
மேகம், இடி, மின்னல், மழை வண்ணம்!
------------------------------------------!
கூடல் கொஞ்சல்!
கொஞ்ச நேரமே!!
!
கூடலில் நடந்த!
குழப்பம் எண்ணவோ!!
!
கலவர பூமியாய்!
கர்ஜனைகள்!
!
சீறிப் பாய்ந்த !
கோர விழிக் கணைகள்!!
!
பொருக்க முடியாது!
பொங்கிய கண்ணீர் !
மள(ழ) மள(ழ) வென்று!
கொட்டியது!
!
எப்படியோ!!
சமாதானத்திற்குப் பின்!
ஏழுவண்ணக் கொடியசைத்தாள்(ல்)!
எழில்!
02.!
வன்முறை!
----------------- !
மகாத்மாவே!!
உம்!
அகிம்சை வழி நடக்கவே!
அனைவரும் விரும்புகிறார்கள்!
!
அவ்வப்போது!
உம்மைக் காணும் போதெல்லாம்!
பலர் கண்களுக்குத்!
தெளிவாகத் தெரிவது!
நின்…!
கையிலிருக்கும்!
கைத்தடி மட்டுமே!!
-மீன்கொடி கோவிந்தராசு

கைவிடப்பட்டவள் - 02

நிந்தவூர் ஷிப்லி
இனி சந்திப்பதேயில்லை என்கிற!
தீர்க்கமான முடிவுடன் முடிந்துபோனது!
கைவிடப்பட்ட அந்தப்பெண்ணுடனான!
இரண்டாவது சந்திப்பு..!
ஒரு நீண்ட மௌனத்தை!
உடைந்த வார்த்தைகளால்!
கலைத்தபடி!
கண்ணீருடன் பேசத்தொடங்கினாள்..!
ஷெல் விழுந்த இரவுகள்!
துப்பாக்கி முனைக்கைதுகள்!
கடத்தப்பட்ட பெண்கள்!
அநாதையான குழந்தைகள்!
அவயவம் இழந்த உறவுகள்!
இடிந்து போன வீடுகள்!
நொறுங்கிப்போன கனவுகள்!
இப்படி!
கற்பனைகளால் கூட நினைக்கவொண்ணா துயரங்களுடன்!
எங்கள் உரையாடல் தொடர்ந்தது..!
அவள் கற்பழிக்கப்பட்ட அந்த இரவு பற்றி!
என்னவெல்லாமோ சொன்னாள்..!
அவள் கண்ணீரை மொழிபெயர்க்க முடியாமல்!
அவள் துயரங்களை மொழியாக்க தெரியாமல்!
மிகப்பெரும் வேதனை வெளியொன்றில்!
என் மனச்சாட்சியை அலைய விடுகிறேன்..!
திடீரென உடைக்கப்பட்ட அவள் வீட்டுக்கதவு வழியே!
நான்கோ ஐந்தோ துப்பாக்கி ஏந்திய!
புத்தரின் வம்சத்தினர் நுழைந்ததாயும்!
அம்மாவையும் தம்பியையும்!
தூணொன்றில் கட்டிவிட்டு!
விடியும் வரை அவள் பெண்மையை!
மீண்டும் மீண்டும் கொடூரமாக களவாடியதாகவும்!
அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது மீண்டுமொரு முறை குற்றவாளியாகிறேன் நான்..!
நான் மட்டுமல்ல!
நீ!
அவன்!
அவள்!
அவர்கள்!
இவன்!
இவள்!
இவர்கள் என எல்லோருமே குற்றவாளியாகிறொம்..!
மன்னிக்கவே முடியாத குற்றவாளியாகிறோம்..!
புத்தருக்கு ஞானம் வந்தென்ன லாபம்? அவர்!
பக்தர்களுக்கு ஈனமே இல்லையே????!
இழக்கக்கூடாத எல்லாவற்றையும்!
இழந்த ஒருத்தியை!
இனியொரு போதும் நீங்கள் சந்திக்க வேண்டாம்..!
செவிப்பறையில் அறையும் அவள் வார்த்தைகள்!
உங்கள் இதயத்தைப்பிடித்து உலுக்குவதையும்!
அடுத்து வரும் நாட்களில்!
நீங்களொரு நடைப்பிணமாய் உருமாறுவதையும்!
தவிர்க்கவே வேண்டுமெனில்!
இழக்கக்கூடாத எல்லாவற்றையும்!
இழந்த ஒருத்தியை!
இனியொரு போதும் நீங்கள் சந்திக்க வேண்டாம்..!
!
புத்தருக்கு ஞானம் வந்தென்ன லாபம்? அவர்!
பக்தர்களுக்கு ஈனமே இல்லையே????

பரண் மேல் ... மயிலிறகு

வீ.கார்த்திகேயன்
பரண் மேல் பழைய நினைவுகள்!
பரண் மேல்!
பழைய நினைவுகள்!
பூட்டப்பட்ட ஒரு பெட்டி...!
பிறந்த நாள் அன்பளிப்பு !
பெற்றோரிடமிருந்து மறைத்து வைத்த!
பரிட்சைத்தாள்!
தபால் பெட்டி வரை செல்ல!
தகுதி இல்லாமல்!
பெட்டிக்குள் தூங்கிப்போன கடிதங்கள் !
எல்லாம் விழித்துக் கொண்டு!
எந்தன் துயில் கெடுக்கும்!
தீபாவளிக்கோ!
பொங்கலுக்கோ!
வீட்டை தூசி தட்டுகையில்!
-- வீ.கார்த்திகேயன்!
மயிலிறகு!
மயிலிறகு குட்டி போடுமென்று!
மறைத்து வைத்தேன் !
நோட்டு புத்தகத்தில்...!
மறந்து போனேன்!
வருடங்கள் உருண்டன!
தூசி தட்டி பிரித்தபோது!
குட்டி போட்டிருந்தது!
மயிலிறகல்ல !
மறக்க முடியாத என் நினைவுகள் !
-- வீ.கார்த்திகேயன்

ஊர் திரும்பல்

ஜீவன்
மெதுவாய் கேட்கும் !
அதிகாலைப் புகைவண்டிச் சத்தம் !
கால் நனைத்துப் போகும் !
காலைக்கடல் !
காங்கேசன்துறைப்புகை !
களங்கண்டி மீன் !
இரட்டைப்பனை !
கோவில் புளிமாங்காய் !
சம்பேதுறுவார் கோவில் !
மணியோசை !
இப்படிதொலைந்து !
போனவை அதிகம் !
உடல் சிதறிச்செத்துப்போனான் !
நண்பன் !
குருவிசுட்ட சேதியாய் !
போயிருந்தனர் !
அனேகர் !
குருத்து !
கருகிப்போனது !
பனைமரம் !
பாழடைந்து !
போய்க்கிடக்கிறது !
கிணறு !
வீடு போக !
அடையாளம் !
சொல்லிநிற்கிறது !
ஒத்தை !
செவ்வரத்தைப் பூ !
---- !
ஜீவன்

எரிக்கிறாய் எரிகிறேன்

எம்.ரிஷான் ஷெரீப்
எனதுயிருருக்கும் பாடலைப்!
பின்பற்றி வந்த உன் நேசம்!
எனக்கென்றிருந்த !
ஒரேயொரு கேடயத்தையும்!
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்!
வருத்தம்தான் எனக்கு..!!
ஆதியின் மூலங்களறுத்து,!
சார்ந்திருந்த அரண்களையுடைத்து!
உனை நம்பி வந்த நான்!
காணும் எல்லாவற்றிலும்!
நீ மட்டுமே !
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்!
நட்சத்திரங்களை எனக்காக!
வளைப்பதாகச் சொன்ன நீ!
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்!
பீதியுடன் முறைக்கிறாய்!
எனது குரல்வளையினை நெரித்து!
உனது நிம்மதிக்கான!
பிரார்த்தனை கீதங்களைப் !
பாடச் சொல்கிறாய்!
என் நெற்றியில் தொடங்கியுன்!
கூராயுதங்கள் கீறுகின்றன,!
உயிருருகி வழியும் குருதியில்!
தாகம் தணித்துக்கொள்கிறாய்!
என் உயிரின் மூலங்களை!
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்!
என் வாழ்வின் தீர்ப்பினை!
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !!
சிம்மாசனங்கள் வேண்டவில்லை!
செங்கோலையும் தீண்டவில்லை!
ஆட்சிகள்இஆகிருதிகள் அத்தனையும் !
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;!
நானென்ன கேட்கிறேன் ?!
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல!
எடைகளற்றுத்தானே !
இருக்கின்றன என் தேவைகள் !!
இறுதியாக,!
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி!
என் நெஞ்சின் ஓரத்தில் !
தீச்சுடரை வைத்து - அது!
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.!
பரவாயில்லை.!
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.!
இப்படியே விட்டுவிடலாமென்னை !!
-எம்.ரிஷான் ஷெரீப்!
மாவனல்லை!
இலங்கை