வேர்க்கும் நினைவுகள் - ஆ.மணவழகன்

Photo by Jan Huber on Unsplash

பன்னீர் மழை! பன்னீர் மழை! -என்னில்!
படுமென்று பார்த்திருந்தேன்!!
கண்ணீர் மழை! கண்ணீர் மழை! - என்!
கவிதையைக் கரைத்ததடி!!
வழிமாறியாவது வருமென்று - என்!
வாசலதைத் திறந்து வைத்தேன்!!
வாசமாவது வீசுமென்று - உன்!
வாசல் வந்துக் காத்திருந்தேன்!!
விழிக்குமுன்னே உன் நினைவு!!
விழி மூடாதிருந்தும் பல கனவு!!
கல்லடி படவில்லை - பலர்!
சொல்லடி பட்டதடி!!
வெய்ய மணலின் வேர்ப்பறித்தால்,!
வேர்க்கும் தெளிய நீர்போல...!
வெந்து கிடக்கும் உள்ளத்தை!
வெட்டி எடுத்தால் நீ தெரிவாய்!!
விதை ஒன்று விழுந்து!
இரு இடத்தில் முளைத்ததென்று!
இறுமாப்புக்கொண்டிருந்தேன்!!
வித்து உன்னில் விழவே இல்லையோ?!!
வெளியில் தெரியா- என் வேதனைக்!
கூட்டி நின்றேன்!!
தாய்முகம் பார்த்தே வளரும் ஆமைக்குட்டி!!
உன் முகம் பார்த்தே வளர்ந்த காதல்...!
வைக்கோல் கன்றிற்காய் மடிசுரக்கும் பசுவோ!?-இன்று!
மண்ணில் விழுந்து உடைந்ததடி!!
உடல் வெந்து போகுமுன் ஒருமுறை!
வந்து போய்விடு! -என்!
பாசத்தைக் காட்ட அல்ல! - உன்னால்!
பட்டுவிட்ட காயங்களின் பட்டியலைக் காட்ட...!!
*****!
ஆ. மணவழகன்
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.