சிந்தையைக் கலக்கிக் கொஞ்சம்!
முந்தைய நிலையை எண்ணி!
எந்தையும் தாயும் வாழ்ந்த!
சுந்தர மண்ணைத் துதித்தேன்!
வந்தனை செய்தேன் ஊரை!
நிந்தனை செய்தேன் நிலைய!
பந்தினைப் போலே என் சொந்தம்!
சிதறின உலகமெங்கும்!
தமிழ் எனும் நல்மொழி!
தனை நாம் வரிந்ததினால்!
தரணியில் சிதறி இன்று!
தவித்திடும் நிலை ஒன்று!
விரைந்தொறு விடியல் நமக்கு!
வரந்தரும் வகையாய் இனியேனும்!
முடிந்திடும் கலக்கம் என!
முழங்கிடு என் தோழா !
- சக்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்