காத்திரு என்றாவது - றஞ்சினி

Photo by FLY:D on Unsplash

காத்திரு என்றாவது......!
!
உன்கரம் பற்றி !
உன்தோழ் சாய்ந்து !
ஏனென்றுதெரியாமல் அழவேண்டும் !
உன்தலைகோதி உன்கண்களில்!
முத்தமிடவும்!
உன் அணைப்பில் உறங்கிப்போகவும்!
உன் முத்தம் எனை எழுப்பவும்!
அதிகாலை செய்திகளை!
உன்மடியிருந்து அறிந்துகொள்ளவும்!
உலகை உன்னோடு ஒருதடவை!
சுற்றிடவும்!
ஆசைகள் நிஜமாகும் பொழுதுகளை!
தேடியே போகிறது !
நாட்களும் வயதும்..!
எனதான நீ எங்கேயோ.......!
தேடுகிறேன் நினைவுகளில்!
காத்திரு என்றாவது !
சொல்லேன் வண்ணங்களில் !
ஏனென்று தெரியாத !
உன் மெளனத்தில் !
அணைந்து கொண்டிருக்கிறது!
என் காதல் தீ
றஞ்சினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.