பயணியே - வேந்தன்

Photo by Julian Wirth on Unsplash

நாடகள் கிழமைகளாகி!
கிழமைகள் மாதங்களாகி!
மாதங்கள் ஆணடுகளாகி!
காலங்கள் கரைந்து!
நகர்ந்து செல்கின்றன!
காலவோட்டத்தோடு !
நீயென்ன நானென்ன!
சொந்தமென்ன !
பந்தமென்ன!
மனைவியென்ன !
பிள்ளையென்ன!
எல்லாமும் சேர்ந்தே!
காற்றோடு காற்றாகி!
கலைந்தே செல்கின்றன!!
மாடிகள் மனைகள்!
சொத்துக்கள் பத்துக்கள்!
கோடிகள் குபேரர்கள்!
அத்தனையும் கலந்தே!
காற்றோடு காற்றாகி !
கலந்தே செல்கின்றன.!
பிரிந்தவை பிரிந்து போக!
பயணங்கள் தொடர்கின்றன!!
கலந்ததவை கலைந்து போக!
வாழ்வின் எல்லைகள் நோக்கியே!
பயணங்கள் தொடர்கின்றன.!
எல்லைகள் வரும் போது!
கலந்தவை எதுவுமே !
சேர்ந்து வரா!
கூடியவை ஏதுமே!
கூட வரா!
தேடியவை ஏதுமே!
தேடிவரா!
தேய்ந்து மறையும் !
போலி வாழ்வில்!
போகம் என!
எதுவும் இல்லை.!
எதுவும் இல்லா!
இந்த வாழ்வில் !
நின்று!
மீண்டு வந்து,!
நீள மகிழ்ந்து !
பயணிக்க !
எல்லை வரை !
மகிழ்ந்தே செல்லத்!
உள்ளத்தினுள்ளே !
திடம் கொள்!
மகிழ்ச்சியே!
இலக்காய் !
பயணி
வேந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.